For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பக்கமாக படுத்து தூங்கினால் உங்களுக்கு குறட்டை பிரச்சைனையே வராது

தூக்கம் என்பது அனைத்து விதத்திலும் நன்மைகளை வழங்கினாலும், அது தூங்கும் முறையை பொறுத்து அது வழங்கும் நன்மைகள் மாறுபடும். வலப்புறம் தூங்குவதும், இடப்புறம் தூங்குவதும் வெவ்வேறு விதமான பலன்களை வழங்கும்.

|

நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது ஆரோக்கியத்தின் மீது பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்த ஒன்று. நாம் செய்யும் உடற்பயிற்சிகள் நம் உடலுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும், அதேபோல நமது தீயசெயல்கள் ஆரோக்கியத்தின் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். நாள் முழுவதும் நமது செயல்பாடுகளால் ஏற்படும் சோர்வுக்கும், அடுத்த நாளிற்கான ஆற்றலையும் வழங்குவதற்கு தூக்கம் என்பது மிகவும் அவசியம்.

தூக்கம் என்பது நமது உடல் மற்றும் மனதிற்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் வழங்கக்கூடிய ஒன்று. தூக்கம் என்பது அனைத்து விதத்திலும் நன்மைகளை வழங்கினாலும், அது தூங்கும் முறையை பொறுத்து அது வழங்கும் நன்மைகள் மாறுபடும். வலப்புறம் தூங்குவதும், இடப்புறம் தூங்குவதும் வெவ்வேறு விதமான பலன்களை வழங்கும். குறிப்பாக வலப்புறம் தூங்குவதை காட்டிலும் இடப்புறம் தூங்குவது உங்களுக்கு அதிக பலன்களை வழங்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் இடப்புறம் தூங்குவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானத்தை அதிகரிக்கும்

செரிமானத்தை அதிகரிக்கும்

உங்கள் இடது பக்கத்தில் தூங்குவதால் கிடைக்கும் முக்கிய பலன் செரிமானத்தை ஊக்குவிப்பது. இதற்கு காரணம் இடப்புறமாக தூங்கும்போது உணவுக்கழிவுகள் பெருங்குடலில் இருந்து மலக்குடலை நோக்கி எளிதாக செல்லக்கூடும். மேலும் இது வயிறு மற்றும் கணையத்திற்கு போதுமான ஓய்வை வழங்கும். இதனால் கணையத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான நொதிகளை உற்பத்தி செய்வதை இது ஊக்குவிக்கிறது. எனவே இடப்புறம் தூங்குவது உங்களுக்கு அதிக பலன்களை அளிக்கும்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இடப்பக்கத்தில் தூங்குவது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பது ஆச்சரியமான தகவல். இடப்பக்கம் தூங்குவது உங்கள் இதயத்தின் மீது ஒருவித அழுத்தத்தை உண்டாக்கும். ஏனெனில் புவியீர்ப்பு இதயத்தில் இருந்து நிணநீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய இரண்டையும் எளிதாக்கும். மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவெனில் கர்ப்பிணி பெண்கள் இடப்பக்கம் தூங்குவது அவர்கள் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

நெஞ்செரிச்சலை குணமாக்கும்

நெஞ்செரிச்சலை குணமாக்கும்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இடப்பக்கம் தூங்குவது மார்பு பகுதியில் அமிலத்தன்மை அதிகரிப்பதை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக இடப்பக்கம் தூங்குவது உங்கள் வயிறை அதிக இளைப்பாற்றும். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பு குறைவாகும். நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் 10 நிமிடம் இடப்புறம் வைத்து தூங்குவது உடனடி நிவாரணம் அளிக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

இடப்புறம் படுப்பது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உண்மையில் இடப்புறம் தூங்கும்போது அது வேனா கவா என்னும் நரம்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதுதான் நமது உடலில் இருக்கும் மிகப்பெரிய நரம்பு ஆகும். இது இதயத்தின் வலப்புறத்திற்கு தேவையான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். எனவே ஆரோக்கியமான உடலுக்கு நீங்கள் இடப்பக்கமாக தூங்குவது நல்லது.

MOST READ: வெறும் 10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா..? அப்போ சீரக-இஞ்சி நீரை குடித்தாலே போதும்...!

குறட்டை விடுவதை தடுக்கும்

குறட்டை விடுவதை தடுக்கும்

பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தூங்கும்போது குறட்டை விடுவது. இடதுபுறமாக தூங்குவது குறட்டை விடுவதை தடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இந்த நிலையில் தூங்கும்போது காற்று வெளியேறும் குழாய்கள், நாக்கு மற்றும் தொண்டை தசைகள் அனைத்தும் சமநிலையில் இருக்கும். எனவே நிம்மதியான உறக்கத்திற்கு இடதுபக்கம் தூங்குவதே நல்லது. மற்ற நிலைகளில் தூங்கும்போது உங்கள் தசைகள் முன்னோக்கி அழுத்தப்படுவதால் அது குறட்டையாக மாறுகிறது.

மூளை ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியம்

உங்கள் மூளை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க இடப்பக்கம் தூங்குவதே சிறந்தது. சமீபத்தில் நரம்பியல் துறையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒருவர் தூங்கும் நிலை அவர்களின் மூளையில் இருக்கும் தேவையற்ற நினைவுகளை வெளியேற்றும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இடப்பக்கமாக உறங்குவது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும்.

முதுகு வலி

முதுகு வலி

முதுகு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் இடப்பக்கமாக உறங்குவது அவர்களுக்கு சிறநத நிவாரணத்தை வழங்கும். இது முதுகெலும்பு மீதான அழுத்தத்தை குறைத்து உங்களை வசதியாக உணரச்செய்யும். அதேசமயம் நீங்கள் படுக்கும் கட்டிலிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் இடுப்பு மற்றும் முதுகு தசைகளுக்கு வசதியான கட்டிலை தேர்வு செய்யவும். இது உங்கள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும்.

கர்ப்பகால பலன்கள்

கர்ப்பகால பலன்கள்

முன்பே கூறியது போல கர்ப்பிணி பெண்கள் இடப்புறம் தூங்குவதை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது கர்ப்பிணி பெண்களின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, முதுகெலும்பில் அழுத்தத்தை உருவாக்கி கல்லீரலை ஒழுங்குபடுத்தி கர்ப்பப்பை மற்றும் சிறுநீரகத்திற்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே இது பெண்களுக்கான மிகச்சிறந்த பலன்களை அளிக்கும்.

MOST READ: நாய் மட்டுமல்ல இந்த மிருகங்களும் உங்களுக்கு மரணம் ஏற்படபோவதை முன்கூட்டியே அறிய இயலும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health benefits of lying on left side

Lying on your left side gives numerous health benefits. It helps to improve digestion, brain health and heart health.
Desktop Bottom Promotion