For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இணையத்தில் அதிகமான மருத்துவ செய்திகளை பார்ப்பவர்கள் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்!

இணையத்தில் அதிகமான மருத்துவ செய்திகளை படிப்பவர்கள் இதையும் தெரிஞ்சுக்கோங்க

|

இன்றைக்கு பலரும் cyberchondriaவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அதாவது அடுத்தடுத்து இரண்டு தும்மல் போட்டதுமே இணையத்தில் அதற்கான காரணங்களை தேடி ஆராய்ந்து சோகத்தில் மூழ்கிகிடப்பது.

2000 ஆண்டுகளின் துவக்கத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கை hypochondria என்ற வார்த்தையை முதன் முதலாக பயன்படுத்தியது அப்படியென்றால் நமக்கு எதோ தீராத நோய் ஒன்று இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அடிக்கடி மருத்துவரை சென்று சந்திப்பது யாரைப் பார்த்தாலும் தன் நோய் குறித்து, அதன் தீவிரம் குறித்து புலம்புவது என இருப்பார்கள்.

அதன் அடுத்தக்கட்டம் தான் இந்த cyberchondria. எனக்கு நோய் இருக்கிறது என்று மருத்துவரிடம் செல்லாமல் இணையத்திலேயே தேடி நாமாக ஒரு முடிவுக்கு வந்து மன அழுத்தத்தினால் அவதியுறுவது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாருக்கு வரும் :

யாருக்கு வரும் :

தனிமையில் இருப்பவர்கள், ஏற்கனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இது ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர் மரணமடைந்து விட்டாலோ அல்லது தலைப் பிரசவம் சந்தித்த பெண்களுக்கும் இவை ஏற்படக்கூடும்.

இளம் தாய்மார்கள் தங்களைப் பற்றி மட்டுமல்லாது தங்களின் குழந்தையைப் பற்றியும் இணையத்தில் சேர்த்து தேடுவார்கள்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

லேசான தலைவலி, வயிறு வலி ஆகியவற்றுக்கெல்லாம் இணையத்தை நாடுவீர்கள், படித்ததும் நமக்கு ஏதேனும் பெரிய நோய் வந்திருக்குமோ என்று நீங்களாகவே கற்பனை செய்து கொள்வீர்கள்.

இதை தேடவே இணையத்தில் அதிக நேரம் செலவிடுவீர்கள். சிலர் இணையத்தில் சொல்லியிருக்கிற மருத்துவமுறைகள், வீட்டு வைத்திய முறைகளை எல்லாம் செய்து பார்க்க ஆரம்பித்திருப்பார்கள்.

கதைகள் :

கதைகள் :

இன்றைக்கு அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த துவங்கிவிட்டார்கள். அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ அதிக நேரம் செலவிட நேரிடுகிறது.

அதிலும் வாட்சப் குழுக்களில் முழு விவரம் தெரியாமல் அனுப்பப்படுகிற கட்டுக்கதைகளை எல்லாம் படித்து நம்புவிடுகிறார்கள்.

நெகட்டிவ் :

நெகட்டிவ் :

பொதுவாகவே நெகட்டிவான விஷயங்கள் சட்டென மனதில் பதியும். பாசிடிவான விஷயங்களை விட நெகட்டிவ் விஷயங்களை அதனால் தான் அதிகமாக பகிரப்படுகிறது.

நிலைமை இப்படியிருக்க இணையத்தில் தேட ஆரம்பிக்கும் போது ஒரு நெகட்டிவ் விஷயம் தெரிந்தால் போதும் உடனே ஏதோ நாளைக்கே மரணப்படுக்கையில் விழுகிற மாதிரி கற்பனை செய்து கொண்டு சோகத்தில் மூழ்கி விடுவார்கள்.

தகவல் :

தகவல் :

இணையத்தில் இருக்கிற எல்லாமே உண்மையான தகவல் என்று சொல்ல முடியாது சில நேரங்களில் அவை மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். அறிகுறிகளை வைத்து மட்டுமே நோய் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் அறிந்து கொள்ள முயல்வது முட்டாள்தனமானது.

உங்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, பரம்பரை, மிக முக்கியமாக பரிசோதனைகள் மேற்கொண்டு தான் உண்மையிலேயே உங்களுக்கு நோய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வீட்டு வைத்தியம் :

வீட்டு வைத்தியம் :

இருப்பதில் சற்றே சிக்கலான விஷயம். முதலில் மருத்துவரின் பரிந்துரையின்றி தாங்களாகவே மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தார்கள். இப்போது அதுவும் இல்லை நானே மருத்துவர், நானே எனக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்று கண்டுபிடித்து அதற்கான மருந்துகளை ஆராய்ந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதோ அல்லது கை வைத்தியம் செய்வது அதிகரித்து விட்டது.

இது முற்றிலும் தவறானது. நோயின் தாக்கம் ஒன்றாக இருந்து அதன் அறிகுறிகளை மட்டும் வைத்து இப்படி எடுத்துக் கொள்கிற மருத்துவ முறைகள் தவறாய் முடிந்திடவும் வாய்ப்புண்டு.

 வெட்கப்படாதீர்கள் :

வெட்கப்படாதீர்கள் :

உங்களுக்கு ஏதேனும் நோய் வந்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டால் உடனேயே தீர்மானம் எடுக்காமல் முதலில் நெருங்கிய உறவினர்களிடம் சொல்லுங்கள், பிறகு மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

இதில் ஆண்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று வெளியில் சொல்வதை ஏதோ கௌரவ குறைச்சலாக பார்க்கிறார்கள். இதில் கௌரவக் குறைச்சல் என்று எதுவும் இல்லை. அதே போல சில உடல்சார்ந்த விஷயங்களை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு தான் பலரும் இணையத்திலேயே அதற்கான விடை தேடுகிறார்கள். அப்படி வெட்கப்பட்ட வேண்டிய அவசியமில்லை.

கேள்வி :

கேள்வி :

உங்கள் முன்னால் காட்டப்படுகிற, சொல்லப்படுகிற விஷயங்களை எல்லாம் கேள்வி எழுப்புங்கள். கேள்வி எழுப்பினாலே பல தவறான கற்பிதங்களிலிருந்து தப்பிக்கலாம். சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

முடிவு :

முடிவு :

எதற்கும் சட்டென முடிவு தெரிய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நெஞ்செரிச்சல் ஏற்பட்ட உடனேயே இதயம் செயலிழந்துவிட்டது போல கற்பனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உடல் சார்ந்த விஷயங்களை அதன் நிபுணர்களிடம் கேட்டு தெளிவு பெறாமல் எதையும் நம்ப வேண்டாம்.

நண்பருக்கு இந்த அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால் உங்களுக்கும் அப்படியே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.

பதட்டம் :

பதட்டம் :

சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் பயந்து பதட்டமடைய வேண்டாம். பிரச்சனைகள் இரண்டு நாட்களுக்கும் அதிகமாக தொடர்ந்தால், அல்லது அறிகுறிகள் மிகத் தீவிரமாக இருந்தால் மருத்துவரிடம் செல்லலாம்.

நெருங்கிய உறவினருக்கு இதயம் சார்ந்த பிரச்சனை இருந்தால் உங்களுக்கும் கண்டிப்பாக மாரடைப்பு வந்தே தீரும் என்பதல்ல அதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது அவ்வளவு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts about cyberchondria

Facts about cyberchondria
Story first published: Wednesday, June 13, 2018, 17:44 [IST]
Desktop Bottom Promotion