For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்பை ஏற்படுத்தும் தெரியுமா?

உடற்பயிற்சி என்பது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. அதிக உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய கேடுகளை உருவாக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

|

உடற்பயிற்சி என்பது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. உடல் ஆரோக்கியத்திலிருந்து அழகிய உடலமைப்பு வரை அனைத்தையும் வழங்கக்கூடிய உடற்பயிற்சி ஆண், பெண் இருவருக்குமே சில தீமைகளையும் வழங்குகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் ஆனால் அதுதான் உண்மை.

Can Exercising Too Much Cause Heart Health Problems?

அதிக உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய கேடுகளை உருவாக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் கூறப்படும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக உங்களின் உடற்பயிற்சிகளை குறைத்து கொள்ளுங்கள். ஏனெனில் அதிக உடற்பயிற்சி மாரடைப்பு வரை கூட ஏற்படுத்தும். அதீத உடற்பயிற்சியால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல்திறன் குறைவு

செயல்திறன் குறைவு

சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் இயங்கும் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்யும் போது உங்களுடைய செயல்திறன் குறைவதை உணர்ந்தால் உங்கள் உடல் அதிக கடினமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கப்படுகிறது என்று அர்த்தம். இந்த சூழ்நிலையில் உங்கள் உடற்பயிற்சியை குறைக்க வேண்டியது அவசியம்.

ஆற்றல் இழப்பு

ஆற்றல் இழப்பு

உடற்பயிற்சி செய்தவுடன் உங்களுக்கு வழக்கமாக இருக்கும் உற்சாகம் இல்லாமல் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக உணர்ந்தால் உங்கள் உடலில் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது என்பதை உணர்த்துகிறது. உங்கள் உடலுக்கு உடனடி தேவை ஓய்வுதான்.

மன ஆரோக்கிய குறைவு

மன ஆரோக்கிய குறைவு

சமீபத்தில் நடத்திய ஆய்வின் படி ஒரு வாரத்திற்கு 7.5 மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்யும்போது உங்களுக்கு பதட்டம், மனஅழுத்தம் மற்றும் குறைவான மனஆரோக்கியம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக அழுத்தத்திற்கு உட்படும் உடலானது குழப்பம், கோபம், எரிச்சல் மற்றும் ஊசலான மனநிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

MOST READ: புத்தர் எப்படி இறந்தார் என்பதையும் அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்

தூக்கமின்மை

தூக்கமின்மை

தூக்கம் என்பது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. மிதமான உடற்பயிற்சி நம் உடலுக்கு அற்புதமான தூக்கத்தை வழங்கக்கூடியது. ஆனால் அதிக உடற்பயிற்சி என்பது இரவு முழுவதும் ஓய்வின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

தசைப்பிடிப்பு மற்றும் வலி

தசைப்பிடிப்பு மற்றும் வலி

உங்கள் தசைகளுக்கு போதுமான ஓய்வு நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் உங்களின் தினசரி வாழ்க்கையையும் பாதிக்கும், மேலும் இது உங்களை சோம்பலாக உணரச்செய்யும். இதனால் ஏற்படும் வலி குறையும்வரை நீங்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகவும்.

சிறுநீர் நிறம் மாறுதல்

சிறுநீர் நிறம் மாறுதல்

கடுமையான உடற்பயிற்சி செய்தவுடன் உங்களின் சிறுநெஞரின் நிறம் கருப்பாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ மாறினாலோ அது ஹெப்டோமயொலிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்பட காரணம் உங்கள் திசுக்கள் சிதைவடைந்து அவை சிறுநீரில் கலப்பதுதான். இது சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தும்.

இதய பிரச்சினைகள்

இதய பிரச்சினைகள்

ஆம் நீங்கள் படித்தது உண்மைதான். சமீபத்தில் ஜெர்மன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் ஏற்கனவே இதய கோளாறுகள் உள்ளவர்கள் அதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்பின் ஏற்பட்டு மரணம் வரை கூட ஏற்படலாம். மற்றொரு ஆய்வில் வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அவர்களுக்கு 40 வயதிற்கு மேல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

MOST READ: விறைப்பு தன்மைக்காக பயன்படுத்தும் வயாகரா எத்தகைய ஆபத்தானதுனு

மூட்டு பிரச்சினைகள்

மூட்டு பிரச்சினைகள்

அதிக பளு தூக்கும்போதும், மேலும் அடிக்கடி செய்யும்போதும் மூட்டுகளில் விரிசல்களும், தேய்மானங்களும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மாதவிடாய் கோளாறு

மாதவிடாய் கோளாறு

உடற்பயிற்சியால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை மாதவிடாய் கோளாறாகும். பெண்கள் அதிகளவு உடற்பயிற்சி செய்யும் போது பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. இது மெனோரியா என்று அழைக்கப்படுகிறது. இதனால் ஈஸ்ட்ரோஜென் அளவில் சரிவு ஏற்படுகிறது. இதன் விளைவாக பெண்களுக்கு ஆஸ்டோபோரோசிஸ் கூட ஏற்படலாம்.

இதய துடிப்பில் மாற்றம்

இதய துடிப்பில் மாற்றம்

உங்கள் இதயம் அதிக மனஅழுத்தத்துடன் இருக்கும்போது அதன் அதன் துடிப்பில் பல மாற்றங்கள் ஏற்படலாம். காலை நேரத்தில் உங்கள் இதய துடிப்பை கணக்கிடுவதன் மூலம் இதனை நீங்கள் அறியலாம். வழக்கத்தை விட அதிக துடிப்பை உணர்ந்தால் உங்கள் உடல் அதிக வேலையை செய்கிறது என்று அர்த்தம்.

MOST READ: அடிவயிற்று கொழுப்பை குறைக்க கூடிய சித்தர்களின் ஆயுர்வேத முறைகள் இதுவே..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Exercising Too Much Cause Heart Health Problems?

There is no doubt that working out offers some amazing health benefits. But too much work out leads to many harmful health issues.
Desktop Bottom Promotion