For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரா, நோ பிரா: எது நல்லது, எது கெட்டது? ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்கன்னா...

பிரா, நோ பிரா: எது நல்லது, எது கெட்டது? ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்கன்னா...

By Staff
|

பெண்கள் மனதில் நீண்ட நாட்களாக நிலைக் கொண்டிருக்கும் பிராப்ளம் இது, பிரா? நோ பிரா? எது நல்லது, எது கெட்டது. பெரும்பாலான இணையங்களில், சமூக தளங்களில் பிரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகின்றன.

பிரா தேர்வில் பெண்கள் செய்யும் தவறுகள், பிரா அணியாமல் இருந்தால் மார்பகங்கள் தொங்கிவிடுமா? இரவில் மட்டும் பிரா அணியாமல் உறங்குங்கள் என பல எண்ணற்ற கருத்துக்கள், ஆரோக்கிய குறிப்புகள் இந்த பிராவை சுற்றி அமைந்திருக்கிறது.

சரி! உண்மையில் பிரா அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? நிஜமாகவே பிரா பெண்கள் உடலுக்கு கேடானதா? வருடக்கணக்கில் இதுக்குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட நிபுணர் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம் வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதிய ஆய்வு?

போதிய ஆய்வு?

உண்மை நிலை என்னவெனில், இதுநாள் வரை பிரா பெண்களுக்கு நல்லதா? கெட்டதா? என கண்டறிய போதிய அளவு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. நிறைய தளங்களில் ஒருசில சிறிய ஆய்வுகளின் அறிக்கைகளை கொண்டு பிரா தீங்கானது, பிராவை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று பக்கம், பக்கமாக எழுதி தள்ளிவிடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

15 வருட ஆய்வு...

15 வருட ஆய்வு...

ஜீன் டெனிஸ் ரௌலியன் எனும் ஆய்வாளர் ஒருவர் மட்டுமே 15 ஆண்டுகளாக பெண்கள் பிரா அணிவது நல்லதா, கெட்டதா என நீண்ட ஆய்வு ஒன்று நடத்தியுள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் இது நிறைய தகவல்கள் திரட்டியுள்ளார். அதில், அவர் கூறியிருக்கும் முடிவானது என்னவெனில், பிரா அணிவதால் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால், மாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

நோ பிரா?

நோ பிரா?

பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்? என்பதற்கு இந்த ஆய்வில் ரௌலியன் கூறியிருப்பதாவது, இந்த ஆய்வில் 18 -35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்கள் கலந்துக் கொண்டனர். இதனால், இவர்கள் மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என்று கூறியுள்ளார்.

பிரா?

பிரா?

இதே ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட தொடர்ந்து தினமும் பிரா அணிந்து வரும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது, பிரா அணிவதனால், அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும் அவை தீய தாக்கத்திற்கு ஆளாவதை ரௌலியன் கண்டறிந்துள்ளார். இதனால், மார்பகங்கள் பிரா அணிவதால் மேலும், தொங்கும் நிலையை தான் அடையும் என்று ரௌலியன் கூறியுள்ளார்.

பிரா கூடாதா?

பிரா கூடாதா?

இதனால் பெண்கள் பிரா அணியவே கூடாதா என கேட்பட்ட கேள்விக்கு ரௌலியன் , பல ஆண்டுகளாக பிரா அணிந்து வருவதால் பெண்களின் மார்பகங்களுக்கு எந்தவொரு நல்ல விளைவும் ஏற்படவில்லை, ஏற்பட போவதும் இல்லை. என்று கூறியுள்ளார். மேலும், சில நிபுணர்கள் இது வெறும் மார்கெட் யுக்திகளில் பிரா அணிவது ஆரோக்கியம் என்பது போல காண்பிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

தொங்கிவிடுமா?

தொங்கிவிடுமா?

பல பெண்கள் பிரா அணிவதற்கு காரணம் மார்பங்களை தொங்கிவிடக் கூடாது, அது அழகாக இருக்காது என்பதற்காக தான். மேலும், கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது பிராக்களில் பல வகைகள் வந்துவிட்டன. இவை எல்லாம் பெண்களை மூளை சலவை செய்து வைக்கும் பணியாகும்.

காரணங்கள்!

காரணங்கள்!

உண்மையில், பிரா அணிவதால் தான் மார்பகங்கள் அதிகம் தொங்கும் நிலை கொல்கிறது என்றும். பெண்களின் மார்பகங்கள் தொங்கும் நிலை அடைவதற்கு வேறு சில காரணங்கள் தான் இருக்கின்றன. வயதாவது, அதிக குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் இயற்கையாகவே பெண்களின் மார்பகம் தொங்கும் நிலைக்கு வரலாம் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bra or no bra: Is it Healthier or Not?, What Experts Says

Bra or no bra: Is it Healthier or Not?, What Experts Says
Story first published: Friday, April 27, 2018, 13:22 [IST]
Desktop Bottom Promotion