For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான்-வெஜ் சாப்பிட்டபின் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பொருள்கள் என்னன்னு தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோருக்கு நான்வெஜ் என்றாலே ரொம்பப் பிடிக்கும். அதிலும் சிக்கன் என்றால் சொல்லவா வேண்டும்… ஆனால் நான்வெஜ் சாப்பிட்ட பின்கட்டாயம் செய்யவேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் மறந்

|

சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒரு செயல். நம் எல்லோருக்குமே கொறிக்கும் பழக்கம் உண்டு. நம்மில் பலர் கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒரு பழக்கத்தைக் கொண்டிருப்போம் . பொதுவாக நேரத்தை கடத்துவதற்காக நாம் இந்த பழக்கத்தை மேற்கொள்வோம். சிறு வயதில், நமக்கு நன்மைத் தரும் உணவுகள் எது தீமை தரும் உணவுகள் எது என்பது நமக்கு தெரியாது. நமக்கு பிடித்தமான உணவுகளை விரும்பி சுவைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்போம்.

health

ஆனால் நாம் பெரியவர்களாக வளரும் போது நமது உணவு பழக்கத்தைக் கண்காணிக்கத் தொடங்குவோம். நாம் பெரியவர்களாக வளர்ந்தவுடன் நாம் உண்ணும் உணவின் மூலம் பல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாகத் தொடங்குவதே இதற்குக் காரணம். உயர் கொலஸ்ட்ரால் உணவுகள் ஆரோக்கிய குறைபாட்டில் பெரும் பங்கு வகிக்கிறது. எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் ஜன்க் உணவுகளை அதிகம் உட்கொள்வதால் இந்த உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உண்டாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.உயர் கொழுப்பு உணவுகள்

1.உயர் கொழுப்பு உணவுகள்

கொலஸ்ட்ரால் உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகு செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன், கொலஸ்ட்ரால் என்றால் என்ன , இது எப்படி மனித உடலை பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

கொலஸ்ட்ரால் என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் கொழுப்பு அமிலமாகும். உடலின் பல செயல்பாடுகளுக்கு இது மிகவும் அவசியம். சம நிலை மாறும்போது, இந்த கொலஸ்ட்ரால் உடலுக்கு பலவித தீங்கை ஏற்படுத்துகின்றன. கொலஸ்ட்ரால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் ஆயுர்வேதம் இந்த கருத்தில் இருந்து மாறுபடுகிறது. கொலஸ்ட்ரால் உடலில் உள்ள இரத்த சுற்று சேனல்களை ஆதரிக்கும் மற்றும் உயர்த்தும் ஒரு முக்கிய கூறு என்று ஆயுர்வேதம் கருதுகிறது. இது உடலுக்கு கெட்டது அல்ல, ஆனால் உடலில் அமா இருந்தால் மட்டுமே தீய விளைவுகள் ஏற்படலாம் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது..

2.இதய நோய்கள்

2.இதய நோய்கள்

கொழுப்பு திசுக்களில், நச்சுக்களின் வடிவத்தில் குவிந்து கொண்டிருக்கும் வளர்சிதை மாற்ற மிச்சங்கள் தான் அமா எனப்படுபவையாகும். அஜீரணக் கோளாறால் உண்டாகும் ஒட்டும்தன்மையுள்ள, கெட்ட மனம் வீசும், கழிவுப் பொருள் தாம் அமா என்பது. சரியான முறையில் சுத்தப்படுத்தாமல் நீண்ட நேரம் இருப்பதால் உண்டாவது அமா விஷம். குறிப்பிட்ட அளவைத் தாண்டி இதன் உற்பத்தி அதிகரிக்கும்போது இவை, உடல் திசுக்களில் பரவி, அடைக்கப்படுகிறது. இந்த அமாவிஷம், கொழுப்பு திசுக்களில் அடைக்கப்படும்போது, உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் இதர இதய நோய்கள் போன்றவை ஏற்படும் நிலை உண்டாகும்.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு செயலாகும். ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாடு, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றை பின்பற்றுவதால் கொலஸ்ட்ராலை எளிதில் குறைக்கலாம். உடலின் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தும் உணவுகளை நீங்கள் உட்கொள்ள நேர்ந்தால், கீழே குறிப்பிட்டுள்ள சில ஆயுர்வேத வழிகாட்டிகளைப் பின்பற்றி உடலின் தீய மாற்றங்களை சரி செய்யலாம்.

3.சில மணி நேர உடற்பயிற்சி

3.சில மணி நேர உடற்பயிற்சி

எண்ணெய் அதிகம் உள்ள அல்லது கனமான உணவுகளை எடுத்துக் கொண்டால், மிகக் கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். அதிக கலோரிகளை எரிக்க நடைபயிற்சி பயன்படுகிறது.

4.வெதுவெதுப்பான நீர் பருகவும்

4.வெதுவெதுப்பான நீர் பருகவும்

ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை பருகுவதால் எண்ணெய் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இதனால் உங்கள் கல்லீரல், வயிறு, மற்றும் குடல் பகுதி சேதமடைவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமாக மாறுகிறது.

5.சாப்பிட்டவுடன் உறங்கச் செல்ல வேண்டாம்

5.சாப்பிட்டவுடன் உறங்கச் செல்ல வேண்டாம்

இரவு உணவிற்கும், நீங்கள் உறங்கச் செல்வதற்கும் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இடைவெளி தேவை. சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வதால், உடலில் உள்ள ஆற்றல் பயன்படாமல், கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படுகிறது. எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின் குளிர்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின், குளிர்ந்த உணவுப் பொருட்களாகிய ஐஸ் க்ரீம், குளிர்பானம், குளிர்ந்த நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் கல்லீரல், வயிறு, குடல் போன்றவற்றில் எதிர்மறை விளைவுகள் உண்டாகின்றன. ஆகவே கன உணவிற்கு பின் குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

6.இந்த ஆர்யுவேத தீர்வுகளை முயற்சியுங்கள்

6.இந்த ஆர்யுவேத தீர்வுகளை முயற்சியுங்கள்

எண்ணெய் உணவுகளின் எதிர்மறை விளைவுகளைப் போக்க சில ஆயுர்வேத தீர்வுகள் உள்ளன. அவற்றை இப்போது நாம் பார்க்கலாம் .

திரிபலா

ஒரு ஸ்பூன் திரிபலா பவுடரை வெதுவெதுப்பான நீரில், அல்லது கோமியத்தில் அல்லது தேனில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகுவதால் எண்ணெய் உணவுகள் ஜீரணிக்க பெரும் உதவியாக இருக்கும்.

குக்குலு

குக்குலு கொழுப்பு அளவைக் குறைக்கவும் மற்றும் உயர் கொழுப்பு உணவால் ஏற்படும் கெட்ட விளைவுகளைக் குறைக்கவும் உதவும் ஒரு மூலிகை ஆகும். இந்த மூலிகை, மாத்திரையின் வடிவில் சந்தையில் விற்பனை செய்யபடுகின்றன. ஆனால் இதனை வாங்கி உட்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.

வால் மிளகு

வால் மிளகு, கொழுப்பின் விரைவான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. இது மிகவும் காரமான உணவுப் பொருள் என்பதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை 2 மிளகின் தூளை தேன் கலந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் உட்கொள்வது நல்லது.

தேன்

ஆயுர்வேதத்தின்படி , எண்ணெய் உணவிற்கு தேன் ஒரு சிறந்த மாற்று மருந்தாகும். அசைவ உணவு சாப்பிட்ட பிறகு, கட்டாயமாக சிறிது தேன் சாப்பிடுவது நல்லது.

கோமியம்: (பசுவின் சிறுநீர்)

எண்ணெய் உணவிற்கு ஒரு சிறந்த மருந்து இந்த கோமியம் ஆகும். . உடல் பருமனுக்கும் இந்த சிறந்த விளைவைத் தருகிறது.உயர் கொலஸ்ட்ரால் உணவால் உடலுக்கு ஏற்படும் தீய விளைவுகளைத் தவிர்க்க , மேலே கூறிய வழிகளை முயற்சிக்கலாம். உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். இதனைப் பற்றிய சந்தேகங்கள் அல்லது கருத்துகளை எங்களிடம் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 key things you must do after eating high cholesterol food

people most likely non veg foods especially chicken. But we forget to do some things to follow after eating non veg.
Story first published: Saturday, April 28, 2018, 14:13 [IST]
Desktop Bottom Promotion