Just In
- 1 hr ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 1 hr ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 2 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
- 3 hrs ago
சத்தான... கார்த்திகை பொரி உருண்டை
Don't Miss
- Finance
வெங்காய இறக்குமதி வேண்டாம்..! விவசாயிகள் கோரிக்கை..!
- Automobiles
புதிதாக 100 கார் விற்பனை நிலையங்களை திறக்கும் டாடா மோட்டார்ஸ்
- Movies
விஜய்க்கு 5வது இடம்.. பிகிலுக்கு 6வது இடம்.. ட்விட்டரை தெறிக்கவிட்ட புள்ளிங்கோ!
- News
சாலையில் கவிழ்ந்த லாரி.. உருண்டோடிய வெங்காய மூடைகள்.. திருவள்ளூர் அருகே பரபரப்பு
- Sports
ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது!
- Technology
அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது?
- Education
8-ம் வகுப்பு தேர்ச்சியா? தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்கள் நல்லது என நினைத்து கொண்டிருக்கும் இவை உங்கள் உயிருக்கே ஆபத்தை தந்து விடும்..!
நாம் நினைத்து கொண்டிருப்பது சரி என்றே பலர் எண்ணுவார்கள். ஆனால், நாம் நினைப்பது போன்று அவற்றின் உண்மையான பிம்பம் இருப்பதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் பல வகையான கோணங்கள் இருக்கின்றன. அதே போன்று தான், நாம் நல்லது என நினைத்து செய்கின்ற பல செயல்களும் நமது உயிருக்கே ஆபத்தை தந்து விடுகின்றன.
இது போன்ற செயல்கள் ஒன்று, இரண்டு கிடையாது. எண்ணில் அடங்காமல் பல உள்ளன. இந்த பதிவில், நாம் நல்லது என நினைத்து செய்யும் ஆபத்தான செயல்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியமா..? ஆபத்தா..?
நாம் அன்றாடம் கடைபிடிக்கின்ற செயல்களில் எது ஆரோக்கியம், எது ஆபத்து என்பதை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய விஷயம் கூட நமது ஆரோக்கியத்தை முற்றிலுமாக பாதிக்க கூடும். குறிப்பாக நீங்கள் நம்புகின்ற செயல்கள் எவ்வாறு உடல் நலத்தை பாதிக்கிறது என்பதில் தெளிவுபெறுதல் வேண்டும்.

கடினமான பயிற்சிகள்
நம்மில் பலர் ஏராளமான வித்தைகளை கற்று வைத்திருக்க வேண்டும் என எண்ணுவார்கள். இதில் உடற்பயிற்சிகளும் அடங்கும். ஒரே நாளில் பயில்வானாக வேண்டும் அல்லது ஒரே நாளில் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்து கொண்டு, கடினமான பயிற்சிகளை செய்தால் அவை எலும்பு முறிவு, தசை பிடிப்பு, மூச்சு பிடிப்பு போன்ற பிரச்சினைகளை நமக்கு தரும்.

ஃபிரிட்ஜில் வைத்த காய்கனிகள்...
உணவை பல நாட்கள் ஃபிரிட்ஜில் சேமித்து வைக்க வேண்டும் என பலர் எண்ணுவார்கள். ஆனால், ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகளை நாம் உண்டால் அவை நமது ஆரோக்கியத்தை கெடுத்து விடும். மேலும், சில உணவுகள் உயிருக்கே ஆபத்தை தர கூடும். குறிப்பாக உருளைக்கிழங்கு, பூண்டு போன்றவை இதில் அடங்கும்.

படுக்கைக்கு முன் இது தவறா..?
பலர் தூங்குவதற்கு முன் பல வகையான உணவுகளை சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். இதனால் நிச்சயம் ஆரோக்கியம் பாதிக்க கூடும். அந்த வகையில் சிலருக்கு தூங்க போகும் முன் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். இதனை சாதாரணமாக நினைத்து விட முடியாது. இந்த பழக்கம் நமது மறுநாள் முழுக்க ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்தும்.
MOST READ: வயிறு உப்பி கொண்டே போவதை நம் முன்னோர்களின் முறைப்படி சரி செய்வது எப்படி..?

தோலை உறிப்பீர்களா..?
ஒரு சில பழங்களின் தோலை உறித்து நாம் உண்ண கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆப்பிள், வெள்ளரிக்காய், தக்காளி, மிளகாய் போன்றவற்றின் தோல்களை நீக்கி விட்டு நாம் இவற்றை உண்ணுவது தவறு. ஏனெனில், இவற்றின் அதிகபட்சமான சத்துக்கள் இந்த தோளில் தான் உள்ளதாம்.

நீங்க குடிக்கும் நீர் எப்படி..?
ஏற்கனவே இங்குள்ள நீர் நிலைகள் மிகவும் அசுத்தம் பெற்று வருகின்றது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் நாம் இப்போதெல்லாம் பாட்டிலில் தான் நீரை அடித்து வைத்து கொண்டு குடிக்கின்றோம். ஆனால், இது ஆரோக்கியமற்ற செயல் என்றே ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஏனெனில், பாட்டிலை எப்படி சுத்தம் செய்தாலும் அதில் பாக்டீரியா மற்றும் பல நுண்ணுயிரிகள் ஒட்டி கொள்ளுமாம்.

காலையா..? மாலையா..?
நம்மில் பலர் காலை நேரத்தில் தான் தலைக்கு குளிப்போம். ஆனால், இதில் ஒரு முக்கிய விஷயமும் உள்ளது. தலைக்கு குளிப்பது அவரவர் சருமத்தை பொறுத்தே அமையுமாம். அதாவது, எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் காலையில் தலைக்கு குளிப்பது சிறந்தது. அதே போன்று வறண்ட சருமம் கொண்டோர் மாலை நேரத்தில் தலைக்கு குளிப்பது நல்லது.

அழுக்குகளை வெளியேற்றணுமா..?
வாரத்திற்கு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்வதற்காக எண்ணற்ற முறைகளை கடைபிடித்து வருவோம். இவ்வாறு செய்வது நல்லது கிடையாது. அடிக்கடி சுத்தம் செய்வதால் வயிற்று பகுதி பாதிக்கப்பட கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆதலால், 1 மாத்திற்கு அல்லது 2 மாதத்திற்கு 1 ஒரு முறை சுத்தம் செய்யலாம்.

விடுமுறை நாட்கள் எப்படி..?
பலர் விடுமுறை நாட்களில் அதிக நேரம் உறங்குவார்கள். ஆனால், சரியான முறை இல்லை. மேலும், விடுமுறை நாட்களில் தான் நாம் அதிகமாக சாப்பிடவும் செய்வோம். இவ்வாறு திடீரென்று செய்யும் போது, உடல் அதற்கேற்றவாறு மாறுவது சற்றே கடினம். எனவே, எதையும் சீரான முறையில் செய்யுங்கள்.

சாப்பிட்ட உடனேவா..?
பற்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டியது நம் கடமைதான். ஆனால், அதற்காக ஒரு படி மேலே சென்று தேவையற்ற விஷயங்களை செய்தால் பற்கள் சீக்கிரமாக விழ கூடும். எனவே, சாப்பிட்டவுடனே பல் துலக்க கூடாது. குறைந்தது 1 மணி நேரம் கழித்து தான் பல் துலக்க வேண்டுமாம்.

அதிக இனிப்பு.. அதிக ஆப்பு..!
இனிப்பு வகை உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நம் அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான். ஏனெனினும், இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் 20 முதல் 30 வயதிலே பல வகையான நோய்களை பரிசாக பெற்று கொள்வோம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.