பிக் பாஸ் சினேகனின் இயல்பே அதுதானாம்... ஊர் மக்களே சொல்றாங்க!

Posted By:
Subscribe to Boldsky

வசூல் ராஜாவில் கமல் அறிமுகப்படுத்தியிருந்தாலும், அதை பாமர மக்கள் வரை பிக் பாஸ் மூலமாக பிரபலப்படுத்தி வைத்திருப்பவர் கவிஞர் சினேகன். இவரது கட்டிப்பிடி வைத்தியத்தை கேலி கிண்டல் செய்து மீம் போடாத மீம் கிரியேட்டர்களே இல்லை.

அதிலும் முக்கியமாக "பிக் பாஸ் வீட்டுல புதுசா யாராவது வந்துட்டா சின்ராச யாராலயும் கைலயே பிடிக்க முடியாது..' என்ற மீம் ஒவ்வொருவர் வீட்டில் புதிதாக நுழையும் போதும் தெறிக்கும்.

The Scientific Reasons and Health Benefits Behind Hugging Each Other!

ஆனால், சினேகனின் சொந்த ஊரான தஞ்சாவூர் அருகே உள்ள புதுகரியப்பட்டி மக்களோ, செல்வம் அண்ணனின் (சினேகனின்) இயல்பே அப்படி தான். அவர் மிகவும் கனிவாக நடந்துக் கொள்ளும் நபர். ஊரில் எங்களிடம் எப்படி நடந்துக் கொள்வாரோ அப்படி தான் பிக் பாஸ் வீட்டில் நடந்துக் கொள்கிறார்.

யாரேனும் அவரிடம் தங்கள் சோகத்தை பகிர்ந்தால் அவர் உடனே அழுதுவிடுவார். ஆண், பெண் பேதம் பாராமல் அனைவரயும் கட்டிப்பிடித்து தான் பேசுவார், பழகுவர் என்கிறார்கள்.

இன்றைய கலாச்சாரத்தில் ஒருவரை கட்டிப்பிடித்து பேசுவது ஒன்றும் பெரிய தவறில்லை. மேலும், இது ஆரோக்கியமான விஷயம் என மருத்துவ நிபுணர்களும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுகள் மூலமாகவும் கண்டறிந்துள்ளனர்.

ஒருவரை ஒருவர் கட்டிபிடித்துக் கொள்வதால் நமது உடலில் உண்டாகும் ஆரோக்கிய மேம்பாடுகள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இணைப்பு!

இணைப்பு!

ஒருவரை ஒருவர் கட்டிபிடித்துக் கொள்ளும் போது, இருவர் மத்தியில் இருக்கும் இணைப்பு அதிகரிக்கிறது. கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது மூளையில் இருந்து ஆக்சிடோசின் வெளியாகிறது.

இது ஒரு நபருடன் இணைப்பு அதிகரிக்க செய்யும். இந்த ஹார்மோன் ஒருவர் மீதான ஆசையை, உணர்சிகளை தூண்டுவது ஆகும்.

எப்படி தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படுமோ, அதே போல தான் தினமும் ஒருமுறையாவது உங்கள் துணையை கட்டிப்பிடித்தல் உங்கள் உறவில் சண்டையே வராது.

உடல் தசை!

உடல் தசை!

கட்டிப்பிடிக்கும் போது உடலில் எண்டோர்பின் வெளியாகிறது. இது உடலில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும். முக்கியமாக மிருதுவான தசைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலிநிவாரணியாக அமைகிறது இந்த எண்டோர்பின்.

ஒருசில நேரங்களில் நாம் அடிப்பட்டு விழுந்தவுடன் தூக்கிவிட்டு ஆரத்தழுவி ஒருவர் அரவணைத்துக் கொள்ளும் போது வலி தெரியாமல் இருப்பதற்கு இது தான் காரணம் போல.

பச்சாதாபம், பரிதாபம்!

பச்சாதாபம், பரிதாபம்!

அதிகமாக கட்டிப்பிடிப்பது இருவர் மத்தியில் எனர்ஜி ட்ரான்ஸ்பார்ம் ஆக உதவுகிறது. இதனால் இருவர் மத்தியில் இருக்கும் பச்சாதாபம், பரிதாபம் அதிகரிக்கும். இதனால் நம்பகத்தன்மை, நேர்மை அதிகரிக்கும்.

இது மட்டுமல்ல, கட்டிப்பிடிப்பதால் இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது. வடக்கு கரோலினா பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், கட்டிப்பிடிப்பது இதயத்துடிப்பை சீராக்கும், இரத்த அழுத்தத்தை குறைக்கும், இதய நோய்களின் வாய்ப்புகளை குறைக்கும் என அறியப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு மண்டலம்!

நோய் எதிர்ப்பு மண்டலம்!

மருத்துவர் ஷெல்டன் கோஹென் நானூறு பேர் மத்தியில் இரண்டு வாரம் நடத்திய ஆய்வொன்றில் யாரெல்லாம் சீராக கட்டிப்பிடித்து மகிழ்கிறார்களோ, அல்லது கட்டிபிடித்து பேசுகிறார்களோ, அவர்கள் மத்தியில் நோய் தொற்று, மன அழுத்தம் குறைவாகவும், நோய் எதிர்ப்பு மண்டலும் வலிமையாகவும் இருக்கிறது என கண்டறிந்துள்ளனர்.

மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் ஹார்மோன்களை இது ஊக்குவிக்கிறது. எனவே, உங்கள் குழந்தைகளை தினமும் கட்டிப்பிடித்து பேசுங்கள் என அறிவுரைத்துள்ளனர்.

இறப்பு!

இறப்பு!

மனோதத்துவ அறிவியல் பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில், கட்டிப்பிடித்து பழகுவது, பேசுவது ஒருவர் மத்தியிலான இறப்பு அல்லது மரணம் பற்றிய அச்சத்தை, எண்ணத்தை குறைகிறது என அறியப்பட்டுள்ளது.

எளிமையாக நீங்கள் ஒரு நபரை கட்டிப்பிடிக்கும் போது உங்கள் மூளையில் இருந்து செரோடோனின், டோபமைன், மற்றும் எண்டோர்பின் போன்றவை வெளியாகின்றன. இவை மன அழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சி மற்றும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க செய்கின்றன.

இதனால், வருத்தம் குறையும், மகிழ்ச்சி பெருகும், அச்சம் மறையும்.

நரம்பு மண்டலம்!

நரம்பு மண்டலம்!

நரம்பு மண்டலத்தை சீராக வைத்துக் கொள்ள கட்டிப்பிடித்தல் உதவுகிறது. ஆம், ந,அது சருமத்தில் முட்டை வடிவலான மிகவும் சிறிய அளவில் அழுத்தம் உணரும் சென்சார்கள் இருக்கும். இதை ஆங்கிலத்தில் "Pacnician Corpuscles" என்று கூறுவார்கள்.

இது மூளையுடன் தொடர்புடையது. இது தொடுதலை உணரும் தன்மை கொண்டதாகும். கட்டிப்பிடிக்கும் போது இதில் ஏற்படும் தாக்கம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

அது மட்டுமின்றி கட்டிப்பிடிக்கும் போது மூளையில் இருந்து வெளியாகும் டோபமைன் மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க செய்கிறது. இதனாம் நரம்பு சீர்கேடு பிரச்சனைகளும் எழாது. வாழ்வில் உற்சாகம் பெருகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Scientific Reasons and Health Benefits Behind Hugging Each Other!

The Scientific Reasons and Health Benefits Behind Hugging Each Other!
Subscribe Newsletter