உடல் ஆரோக்கியத்திற்காக அமெரிக்கர்கள் கண்டிப்பான முறையில் கடைபிடிப்பவை!

Posted By:
Subscribe to Boldsky

உடல் நல ஆரோக்கியம் குறித்து இன்றைக்கு பலருக்கும் விழிப்புணர்வு வந்திருக்கிறது, தாங்கள் சாப்பிடுகிற சாப்பாட்டில் என்னென்ன சத்துக்கள் அடங்கியிருக்கின்றன, அவற்றை சாப்பிடுவதால் உடல் நலனுக்கு என்ன நன்மைகள் ஏற்படும். எதெல்லாம் நாம் சாப்பிடலாம் எதெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும் என்பதை பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

Surprising Health tips from Americans

பலருக்கும் அதனை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இங்கே இந்தியர்களை விட அமெரிக்கர்கள், உணவு விஷயத்திலும் சரி, தங்களது ஆரோக்கியம் விஷயத்திலும் சரி பயங்கர முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் என்னென்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கம் :

தூக்கம் :

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது தூக்கம். சராசரியாக ஒரு மனிதன் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவது கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

இரவு நீண்ட நேரம் முழித்திருப்பது, டிவி மற்றும் மொபைல் பார்ப்பது, இவை எல்லாவற்றையும் விட ஏதேனும் ஒரு பிரச்சனையையோ அல்லது ஒரு விஷயத்தையோ மனதிலேயே நினைத்துக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

பகல் நேரத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக வேலை பார்க்கவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் தூக்கம் மிகவும் அவசியம். நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என்று கணக்குப் போடுங்கள்.

விடியற்காலையில் எழுந்து படித்தால் மட்டுமே நன்றாக படிக்க முடியும். இரவு எத்தனை மணிக்கு தூங்கினாலும் விடியற்காலையில் எழுந்திட வேண்டும் அது தான் ஒழுக்கமானது என்றெல்லாம் நீங்களே எதாவதொன்றை நினைத்துக் கொள்ளாதீர்கள்.

காய்கறி :

காய்கறி :

உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சர்க்கரை நோய் வராமல் தவிர்க்கவும் தினமும் இரண்டரை கப் அளவு காய்கறி எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதில் நிரம்பியிருக்கும் விட்டமின்ஸ், மினரல்ஸ் உட்பட ஏராளமான சத்துக்கள் நம் உடலிலுள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இது நீங்கள் சாப்பிடும் உணவின் செரிமானத்தை அதிகப்படுத்தும்.

தண்ணீர் :

தண்ணீர் :

நம் உடலில் அறுபது சதவீத தண்ணீர் மிகவும அவசியமாக இருக்கிறது. உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் துரிதமாக செயல்படுவதற்கு தண்ணீர் மிகவும் அவசியமாகும் .

இது உங்கள் உடலின் வெப்பத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதே போல உங்கள் சருமத்தையும் வறட்சியின்றி பாதுகாக்கிறது. இது உங்கள் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்க வல்லது.

உங்களின் எடையை பொறுத்து நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவு மாறுபடும். குறைந்தது ஒரு நாளைக்கு பத்து முதல் பதினாறு கப் தண்ணீர் வரை குடிப்பது மிக மிக அவசியமாகும்.

உங்கள் உடல் எடை சராசரிக்கும் அதிகமாக இருந்தால் இந்த அளவை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதே போல வயதானவர்கள் மற்றும் ஆண்களும் சராசரிக்கும் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.

உடல் உழைப்பு :

உடல் உழைப்பு :

என்னதான் கண்டிப்பான முறையில் தீவிரமாக டயட் பின்பற்றினாலும் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அத்தியாவசியமானது ஆகும். இது உங்கள் மனதையும் புத்துணர்வாக்கிடும்.

ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவது கட்டாயமாக கடைபிடிக்கிறார்கள்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலைபார்க்கும் சூழல் தான் இன்றைக்கு அதிகமாக இருப்பதால் முடிந்தளவு உடலுழைப்பு செய்வதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள்.

வெள்ளை உணவு :

வெள்ளை உணவு :

சுத்திகரிக்கப்பட்ட மற்றும் வெள்ளையான நிறம் கொண்ட உணவுகளை முடிந்தவரையில் தவிர்த்திடுங்கள்.ஏனென்றால் சுத்தீகரிப்பு என்ற பெயரில் அதிலிருக்கும் எல்லா சத்துக்களும் நீக்கப்பட்டிருக்கும்.

அதனால் உங்களுக்கு எந்த சத்துமே கிடைக்காது. இதற்கு மாற்றாக முழு கோதுமை மற்றும் தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதில் மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் செலினியம் இடம்பெற்றிருக்கும்.

இவற்றை குறைந்த அளவு சாப்பிட்டாலே முழுமையான சாப்பிட்ட திருப்தி கிடைத்திடும் என்பதால் மேற்கொண்டு நிறைய உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றாது.

இரவு உணவு :

இரவு உணவு :

இது மிகவும் பயனளிக்க கூடிய டிப்ஸ். பொதுவாக இரவு நேரத்தில் உடல் உழைப்பு அதிகமாக இருக்காது. அதன் போது அதிக மசாலா மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருளை எடுத்துக் கொள்வதை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

இந்த வகை உணவுகள் செரிமானத்தை கடினமாக்குவதுடன் தூக்கத்தையும் கெடுத்திடும்.

இதனால் இரவு உணவாக ஒரு கப் பழம் சாப்பிடலாம். ஏதேனும் ஒரு பழ வகை இரவு உணவாக சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் சேரும் கலோரி அளவையும் கட்டுப்படுத்தும்.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

நீங்கள் எடுத்துக் கொள்ளும் ப்ரோட்டீன் அளவை முடிந்தளவு குறைத்திடுங்கள். நிறைய காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட் அதிகமாக எடுப்பதை குறைத்திடுங்கள்.

அதே போல கலோரி அதிகமாக இருக்கும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

என்ன உணவு சாப்பிடுகிறீர்கள். அதில் என்னென்ன சத்துக்கள் நிரம்பியிருக்கிறது. அது உங்கள் உடல் நலனுக்கு எவ்வளவு நன்மை தரக்கூடியது என ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு நினைவுகூர்ந்து சாப்பிடுங்கள்.

சாப்பிடும் போது வேறு ஏதேனும் சிந்தனையில் இருப்பது, மிகவும் எமோஷனலான மனநிலையில் சாப்பிடுவது போன்றவை உங்களின் ஒட்டுமொத்த உடல் நலனையே பாதித்திடும்.

ஆல்கஹால் :

ஆல்கஹால் :

ஆல்கஹால் குடிப்பதை முற்றிலுமாக தவிர்த்தல் மிகவும் நல்லது. அதேசமயம் கட்டாயம் ஏற்ப்பட்டால் ஒரு கிளாஸ் ஆல்கஹால் குடிப்பதற்கு நடுவில் ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்க வேண்டும். அந்த தண்ணீரில் சுவைக்காக எலுமிச்சை பழத்தை ஒரு ஸ்லைஸ் கட் செய்து சேர்த்து குடிக்கலாம்.

கேஸ் நிறைந்த தண்ணீர் குடிக்கலாம். இப்படி குடித்தால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஆல்கஹால் அளவு குறையும்.

 சாப்பாடு :

சாப்பாடு :

காரம் நிறைந்த மற்றும் மாசலா சேர்க்கப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நிறைவான உணர்வை சீக்கரத்திலேயே தந்திடும்.

இதை விடுத்து மைல்டான உணவு எடுத்துக்கொண்டால் அளவு தெரியாமல் நாம் அதிகப்படியாக எடுத்துக் கொண்டு விடுவோம்.

காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகு உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலன் தரக்கூடியது இது நம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைப்பதுடன் அதிக கலோரி சேராமலும் தவிர்க்க உதவுகிறது.

அதே போல மசாலாப் பொருட்களில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறையவே இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Health tips from Americans

Surprising Health tips from Americans
Story first published: Tuesday, November 7, 2017, 13:04 [IST]