For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக நேரம் டீவி பார்த்தால் தூக்கமின்மை பிரச்சனை வருமாம். உங்களுக்கு தெரியுமா?

அதிக நேரம் டீவி பார்ப்பவர்கள் நிறைய உடல் நல பாதிப்பு மற்றும் தூக்க இடையூறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்பதை பற்றிய தகவல்

By Suganthi Rajalingam
|

அதிக உணவு சாப்பிடுவதால் எடை அதிகமாகி தொப்பை ஏற்படுகிறது அல்லவா. இது சாப்பிடுவதற்கு மட்டுமில்லை அதிகமாக டீவி முன்னாடி உட்கார்ந்து தொடர்ந்து எங்கேயும் நகராமல் சீரியல் பார்ப்பது, கணினி, மடிக்கணினி மற்றும் டேப் போன்ற எல்லா எலக்ட்ரானிக் பொருட்களின் முன்னாடியும் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது அபாயகரமானது என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூக்கம் இல்லைனு துக்கப்படறீங்களா? இதையெல்லாம் ட்ரை பண்ணி நிம்மதியா தூங்குங்க!

புதிய ஆராய்ச்சி தகவல்கள் சொல்லும் அபாயம் என்னவென்றால் அதிக நேரம் டீவி பார்ப்பது நமது தூக்கத்தை கெடுத்து நமக்கு சோர்வு, இன்ஸோமினியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இது பொதுவாக இளைஞர்களை பாதிக்கிறது.

எனவே இதனால் வரும் அபாயத்தை பற்றிய விழிப்புணர்வு எல்லாருக்கும் தேவைப்படுகிறது.

Study Says Binge-watching Television Can Severely Affect Your Sleep

இந்த ஆராய்ச்சியானது 80% இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஆராய்ச்சி செய்து அதில் 20.2% அதிக நேரம் டீவி பார்க்கும் பழக்கம் உள்ளவர்களை ஆராய்ந்தனர்.

இதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் அதிக நேரம் டீவி பார்ப்பவர்கள் சோர்வு, இன்ஸோமினியா மற்றும் தூக்க பிரச்சினை போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். மேலும் இவர்கள் மற்ற டீவி பார்பவர்களுடன் ஒப்பிடும் போது 98% குறைவான நிம்மதியற்ற தூக்கத்தை மட்டுமே பெறுகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

அதிக நேரம் டீவி பார்ப்பவர்களை தொடர்ந்து ஆராய்ச்சி செய்தததிலிருந்து அறிவாற்றல் சார்ந்த முன் தூக்க தூண்டுதல் பிரச்சினையை பெறுவது தெரிய வந்துள்ளது என்று லீஸ் எக்ஸல்மான்ஸ் என்பவர் பெல்ஜியத்தில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் லியோவனிலிருந்து கூறுகிறார்.

இதற்காக 423 இளைஞர்கள் 18 - 25 வயதில் அதாவது சராசரியாக 22 வயதில் கலந்து கொண்டனர். இதில் 62% பெண்களும் 74% மாணவர்களும் கலந்து கொண்டனர்.

ஆன்லைனில் அவர்களின் தினசரி டீவி பார்க்கும் பழக்கத்திலிருந்து அவர்களது தூக்கத்தின் தன்மை, சோர்வு, இன்ஸோமினியா மற்றும் முன் தூக்க விழிப்புணர்வு போன்றவற்றை ஆராய்ந்தனர். சராசரியாக டீவி பார்க்க வைத்த நேரம் 3 மணி நேரம் 8 நிமிடங்கள். 52% டீவி பார்ப்பவர்கள் 3-4 டீவி பகுதிகளை ஒரே தடவையில் உட்கார்ந்து பார்த்தனர்.

இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசனில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary

Study Says Binge-watching Television Can Severely Affect Your Sleep

Study Says Binge-watching Television Can Severely Affect Your Sleep
Story first published: Friday, August 18, 2017, 14:43 [IST]
Desktop Bottom Promotion