உங்கள் வாயில் எச்சில் குறைவாக சுரந்தால் எதன் அறிகுறிகள் தெரியுமா?

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

மனித உடலில் முக்கியமானவகைகளில் ஒன்று நமது உமிழ் நீர். நமக்கு தெரியாமல் நம் வாயை எப்பொழுதும் ஈரத் தன்மையை தக்க வைத்து காத்து வருகிறது. உமிழ் நீர் இல்லையென்றால் நம் வாய் என்ன ஆகும்? இல்லை நமது உடல் தான் என்ன ஆகும்?

சாதாரணமாக உமிழ்நீரின் வேலை என்றால் நாம் உண்ணும் உணவினை செரிக்க செய்வது மற்றும் உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் தன்மைகளை கட்டுப்படுத்துவது.

If Your Mouth Is Not Producing Saliva, Is That A Problem?

வாயில் உமிழ்நீர் சுரப்பது குறைந்தால் பாக்டீரியாக்களின் தன்மை அதிகரித்துவிடும். வாயில் உமிழ் நீர் குறைந்தால் நா வறட்சி, ஈறுகளில் வெடிப்பு போன்றவை ஏற்படலாம்.உமிழ்நீர் சுரப்பு குறித்த உண்மைகள் பற்றியும், அவை குறைவதற்கு பின்பு இருக்கும் காரணங்கள் குறித்தும் இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்...

வெள்ளையான பற்கள் வேண்டுமா...? இதை சாப்பிடுங்க!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை # 1

உண்மை # 1

சக்கரை வியாதி, அம்மை, வயோதிகத்தினால் வரும் முடக்கு வாதம், அதிகப்படியான மன அழுத்தம் போன்றவற்றால் வாயில் ஈரத்தன்மை குறைந்து நா வறட்சி ஏற்படலாம்.

உண்மை # 2

உண்மை # 2

குறிப்பிட்ட வியாதிகளுக்கு உட்கொள்ளும் மருந்துகளும் நா வறட்சியை ஏற்படுத்தும். சக்கரை வியாதி, அம்மை, வயோதிகத்தினால் வரும் முடக்கு வாதம், அதிகப்படியான மன அழுத்தம் போன்றவற்றிற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் நாவை வறட்சி அடைய செய்யும்.

உண்மை # 3

உண்மை # 3

கேன்சர் போன்ற வியாதிகளுக்கு தரப்படும் ரேடியோ தெரபியால் கூட நாவறட்சி தன்மை வரலாம். உமிழ்நீர் சுரப்பியை பாதிக்கக்கூடிய எந்த ஒரு மருத்துவமும் நா வறிட்சிக்கு வழி வகுக்கும்.

உண்மை # 4

உண்மை # 4

விபத்து அல்லது அறுவை சிகிச்சையினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால், அதன் காரணமாகவும் நாவறட்சி ஏற்படலாம்.

உண்மை # 5

உண்மை # 5

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ அல்லது வேறு காரணங்களால் உடல் வறட்சி ஏற்பட்டாலும் நாவறட்சி ஏற்பட வழிவகுக்கும். வாந்தி, காய்ச்சல் அல்லது இரத்தப் போக்கு காரணமாகவும் நாவறட்சி ஏற்படும்.

உண்மை # 6

உண்மை # 6

தொடர்ந்து சிகரெட் போன்ற புகையிலை வஸ்த்துகளை பயன்படுத்துவதால் ஏற்படும் முதல் பக்கவிளைவு என்றால் நாவறட்சி. மேலும், வாயை திறந்து மூச்சு விடும் பழக்கம் உள்ளவர்களுக்கு நாவறட்சி ஏற்படலாம்.

உண்மை # 7

உண்மை # 7

நாவறட்சி ஏற்பட்டால் தாகம், உதடுகளில் வெடிப்பு அல்லது வாய்ப்புண்கள் போன்றவை நாவறட்சியை உணர்த்துவது. முறையான சுவாசம் இல்லை என்றாலும் நாவறட்சி ஏற்படலாம்.

எனவே, இது போன்று நீங்கள் உணரும் போது மருத்துவரின் ஆலோசனை படி செய்தால் நிவறட்சி பிரச்சனையை போக்கிவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

If Your Mouth Is Not Producing Saliva, Is That A Problem?

If Your Mouth Is Not Producing Saliva, Is That A Problem?