நிலக்கடலை பாலைக் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நட்ஸ் வகைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று என்பது அனைவருக்குமே தெரியும். அந்த நட்ஸ்களில் ஒன்று தான் நிலக்கடலை. பலருக்கும் இது விருப்பமான ஒரு நட்ஸ் என்றும் கூறலாம். இந்த நிலக்கடலையை பால் எடுத்து குடித்தால், சுவையாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Medicinal Benefits Of Peanut Milk

உங்களுக்கு நிலக்கடலை பாலை எப்படி தயாரிப்பது என்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். கீழே நிலக்கடலை பாலை எப்படி தயாரிப்பது என்றும், நிலக்கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

நிலக்கடலை - 1 கப்

முந்திரி - 5

ஏலக்காய் - சிறிது

செய்முறை:

செய்முறை:

நிலக்கடலையை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். முந்திரியையும் ஊற வைக்கவும். பின் அந்த நிலக்கடலையை ஒரு துணியில் கட்டி, அதோடு ஊற வைத்த முந்திரியையும் சேர்த்து, முளைக்கட்ட விட வேண்டும்.

பின் இவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது ஏலக்காய் சேர்த்து, நீர் ஊற்றி அரைத்தால், சுவையான நிலக்கடலை பால் தயார்.

நன்மை #1

நன்மை #1

நிலக்கடலைக்கு அனைத்துவிதமான இரத்தக்கசிவையும் தடுக்கும் ஆற்றல் உண்டு. குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் நிலக்கடலையை சாப்பிடுவது அதிகமான இரத்தப்போக்கைத் தடுக்கும்.

நன்மை #2

நன்மை #2

நிலக்கடலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் மூளை சுறுசுறுப்பாகவும், எலும்புகள் வலிமையாகவும் இருக்கும்.

நன்மை #3

நன்மை #3

நிலக்கடலையில் இருக்கும் நியாசின் புண்கள், கொப்புளங்கள் போன்றவற்றை விரைவில் சரிசெய்வதோடு, வராமலும் தடுக்கும். மேலும் நிலக்கடலை சருமத்தைப் பளபளப்போடு வைத்துக் கொள்ளும்.

நன்மை #4

நன்மை #4

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 1 கைப்பிடி அளவு வறுத்த நிலக்கடலையை சாப்பிட, அதிகளவு உணவு உட்கொள்ள முடியாமல் போய், உடல் மெலிய ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicinal Benefits Of Peanut Milk

Here are some medicinal benefits of peanut milk. Read on to know more...
Story first published: Saturday, January 7, 2017, 14:17 [IST]