For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெற்றிலை போடுவதற்கு மிச்சிய மருத்துவம் இல்லை! வெற்றிலை போடுவதால் உண்டாகும் நன்மைகள்!

வெற்றிலை போடுவதால் உண்டாகும் நன்மைகள்

By Lakshmi
|

நமது முன்னோர்கள் எதையும் ஒரு காரணத்துடன் தான் சொல்லி விட்டு தான் சென்றுள்ளனர். தமிழர்கள் பல சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை தங்களது ஆரோக்கியத்திற்காக கடைபிடித்து வருகின்றனர்.

இதில் எதுவுமே மூட நம்பிக்கைகள் அல்ல. அவை ஒவ்வொன்றிற்கு பின்பும் ஒரு மருத்துவ காரணம் இருக்க தான் செய்கிறது.

நமது முன்னோர்கள் வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகளை மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்களும் அதில் அடங்கியுள்ளன. தாம்பூலம் வைப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது. இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரிவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு

பொதுவாக வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

நோய் ஏன் வருகிறது?

நோய் ஏன் வருகிறது?

சித்தவைத்தியம் மற்றும் ஆயுர்வேதத்தின் படி மனிதர்களுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் போது வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறதாம். இது முற்றிலும் சரியான காரணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் சரியான விகிதத்தில் உடலில் இருந்தால் நோய் வராது என்பதை விட நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கிறது.

தடுப்பாற்றால்

தடுப்பாற்றால்

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கட்டுப்படுத்தும், சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்.

கிருமிகளை போக்கும்

கிருமிகளை போக்கும்

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது.

எலும்பு முறிவு

எலும்பு முறிவு

இன்று 30 வயதிற்கு மேல் ஆனாலே எலும்புகள் வலுவிழந்துவிடுகிறது . இப்போது வயதானவர்களுக்கு எலும்புகள் எளிதில் உடைந்து விடும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்த சாதாரண எலும்பு முறிவு பல நேரங்களில் வயதானவர்களுக்கு மரணத்தை பரிசாக தந்தது.

ஆனால் அந்த காலத்தில் தாம்பூலம் போடும் பழக்கத்தால், வயதனாவர்களுக்கு எலும்புகள் வலிமையாக இருந்தது.

ஜீரண சக்தி

ஜீரண சக்தி

வெற்றிலையை வாயில் இட்டு மெல்லுவதால், ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ஜீரண மண்டலம் நன்றாக செயல்பட்டால் பல நோய்கள் நம்மை அண்டாது. இதற்கு தான் விருந்துகளை முடித்ததும் வெற்றிலை போடும் பழக்கம் நமது மரபில் உள்ளது.

தீய பழக்கமா?

தீய பழக்கமா?

உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய வெற்றிலை போடும் பழக்கத்தை பலர் தவறான முறையில் கடைபிடித்து வருகின்றனர்.

இன்று பலர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்போடு புகையிலையிலையும் சேர்த்து சாப்பிடுவது தீய பழக்கமாகும்.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. இது இடையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரு பழக்கமாகும்.

எப்போது தாம்பூலம் போட வேண்டும்

எப்போது தாம்பூலம் போட வேண்டும்

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறை நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை. இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of betel leaf

Health Benefits of betel leaf
Desktop Bottom Promotion