For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் சிறுநீர் வெள்ளையாகவும், துர்நாற்றத்துடனும் உள்ளதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

இங்கு சிறுநீரில் உள்ள சீழ் செல்களை அழிப்பதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

சிறுநீர் வெள்ளையாகவும் கடுமையான துர்நாற்றத்துடனும் உள்ளதா? அதிலும் காய்ச்சலுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் சிறுநீரில் சீழ் செல்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இது ஒரு பாக்டீயரில் தொற்று. இது சிறுநீர் பாதையைத் தாக்கி, சிறுநீரகம், சிறுநீர்ப் பை மற்றும் கருப்பையையும் தாக்கும்.

Effective Home Remedies To Get Rid Of Pus Cells In Urine

நீங்கள் உங்கள் சிறுநீரில் உள்ள சீழ் செல்களை அழிக்க நினைத்தால், அதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. பொதுவாக இப்பிரச்சனையால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆரம்பத்திலேயே இதைக் கவனித்து சிகிச்சை மேற்கொண்டால், சிறுநீரகம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.

சில நேரங்களில் சிறுநீரில் சீழ் செல்களானது பாலியல் நோய்களாலும் வரும். ஆகவே அடிப்படை சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானது. சரி, இப்போது சிறுநீரில் உள்ள சீழ் செல்களை அழிக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதுமான நீர்

போதுமான நீர்

நீர் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் பாக்டீரியாக்களை சிறுநீரின் மூலம் வெளியேற்றும். எனவே நீரை அதிகம் பருகுங்கள். இதனால் சிறுநீரில் சீழ் செல்கள் இருப்பதும் தடுக்கப்படும்.

பூண்டு

பூண்டு

பூண்டு ஒரு நேச்சுரல் ஆன்டி-பயாடிக். இதன் இரண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டால், சிறுநீரில் உள்ள சீழ் செல்கள் அழிக்கப்படும்.

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரிகளில் அமிலம் அதிகம் உள்ளது. இது பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றும். ஆகவே உங்களுக்கு சிறுநீர் துர்நாற்றத்துடன் இருந்தால், கிரான்பெர்ரி ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

மல்லி

மல்லி

2 டீஸ்பூன் மல்லி விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வடிகட்டி குடிக்க, சிறுநீரில் உள்ள சீழ் செல்கள் அழியும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு டம்ளர் நீரில் போட்டு கலந்து, தினமும் ஒரு முறை குடித்து வந்தால், உடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் சீர் செல்களின் உருவாக்கமும் தடுக்கப்படும்.

பட்டை

பட்டை

1 டீஸ்பூன் பட்டைத் தூளை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலினுள் உள்ள தொற்றுக்கள் குறையும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் ஜூஸை தினமும் இருவேளை குடித்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் சிறுநீரின் வழியே வெளியேறி, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். இதன் மூலம் சிறுநீரில் சீழ் செல்களின் உருவாக்கத்தைத் தடுக்கலாம்.

தயிர்

தயிர்

தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது. இது சிறுநீரில் சீழ் செல்களை அழித்து வெளியேற்றும். எனவே தினமும் ஒரு சிறிய பௌல் தயிரை சாப்பிட்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Home Remedies To Get Rid Of Pus Cells In Urine

If you have foul-smelling urine and your urine appears cloudy, then it is a sign that you have pus cells in urine. Check out for home remedies to treat....
Story first published: Monday, January 2, 2017, 16:53 [IST]
Desktop Bottom Promotion