Latest Updates
-
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11மார்ச் இதே நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிடுவதால், உடலில் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
இங்கு தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரியும். பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரி, வால்நட்ஸ் என அனைத்து நட்ஸ்களிலுமே ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. இப்போது இக்கட்டுரையில் நாம் தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.
வால்நட்ஸில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், நல்ல கொழுப்புக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்துக்களுடன், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவைகளும் அடங்கியுள்ளன. அதோடு வால்நட்ஸில் ஏராளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.

இவ்வளவு சத்துக்கள் சிறிய அளவிலான வால்நட்ஸில் நிறைந்துள்ளது என்றால் பாருங்களேன். அப்படியெனில் அந்த வால்நட்ஸை தினமும் 5 சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
சரி, இப்போது ஒருவர் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுவதால், உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்னவென்று பார்ப்போம்.

நன்மை #1
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், ஸ்நாக்ஸாக வால்நட்ஸை சாப்பிடுங்கள். வால்நட்ஸில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதுடன், கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தையும் குறைக்கும்.

நன்மை #2
வால்நட்ஸில் உள்ள அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை ஒருவர் தினமும் சாப்பிட்டால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதைத் தடுக்கும்.

நன்மை #3
வால்நட்ஸில் இருக்கும் ஃபேட்டி அமிலங்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

நன்மை #4
ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள், மோனோ-அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ், உடலில் நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

நன்மை #5
வால்நட்ஸில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆகவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், தினமும் வால்நட்ஸ் சாப்பிடுங்கள்.

நன்மை #6
சர்க்கரை நோயாளிகள் வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.

நன்மை #7
வால்நட்ஸில் இருக்கும் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் அல்லது ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள், உடலால் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்க உதவும். இதனால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

நன்மை #8
கனிமச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும். எனவே தொப்பையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகச்சிறந்த ஸ்நாக்ஸ்.

நன்மை #9
வால்நட்ஸில் உள்ள மெலடோனின் என்னும் பொருள், தூக்கத்தைத் தூண்டும். எனவே தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், வால்நட்ஸை தினமும் சாப்பிட, இரத்தத்தில் மெலடோனின் அளவு அதிகரித்து, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

நன்மை #10
வால்நட்ஸை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள், வால்நட்ஸை சாப்பிடுங்கள்.

நன்மை #11
வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. ஆகவே தான் ஆண்கள் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

நன்மை #12
வால்நட்ஸில் வைட்டமின் பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. ஆகவே இதை தினமும் சாப்பிடும் போது, அது சருமத்தில் சுருக்கங்கள் வருவதைத் தடுத்து, ப்ரீ ராடிக்கல்களிடமிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

நன்மை #13
ஆய்வு ஒன்றில் வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் 5 வால்நட்ஸை தவறாமல் சாப்பிடுங்கள்.

நன்மை #14
வாழ்நாளின் அளவை நீட்டிக்க வேண்டுமா? அப்படியெனில் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுங்கள். இதுவே உயிரைப் பறிக்கும் பல நோய்களின் அபாயத்தைக் குறைத்து, வாழ்நாளை நீட்டிக்கும்.

நன்மை #15
கர்ப்பிணிகள் வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு, உணவுகளால் ஏற்படும் அழற்சியையும் குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் வால்நட்ஸ் குழந்தையின் குடல் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.



Click it and Unblock the Notifications











