உடற்பயிற்சிக்கு முன்னர் காபி குடிப்பது சரியா? தவறா?

Written By:
Subscribe to Boldsky

காலையில் எழுந்து என்ன தான் சாப்பிட்டாலும், சூடாக ஒரு காபி சாப்பிடுவது போன்ற திருப்தி ஏற்படாது. காபி சாப்பிட்டு விட்டு சில உடற்பயிற்சி செய்வார்கள். இது சரியா? தவறா? என்ற கேள்வி பலருக்குள் இருக்கும். காலையில் காபி சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்வது உண்மையில் நல்ல விஷயம் தான்.

உடற்பயிற்சியாளர்களே கூட உடற்பயிற்சிக்கு முன்னால் காபி பருகலாம் என்று கூறுகின்றனர். உடற்பயிற்சிக்கு முன்னால் காபி பருகுவதால் உண்டாகும் நன்மைகளையும், அதனை தொடர்ந்து பருகலாமா என்பதை பற்றியும் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீண்ட நேர உழைப்பு

நீண்ட நேர உழைப்பு

உடற்பயிற்சி வலியின்றி உற்சாகமாக செய்ய காபி உங்களுக்கு உதவுகிறது. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரே சக்தியுடன் உடற்பயிற்சி செய்ய இது உதவும். இது உங்களது செயல் திறனை மேம்படுத்துகிறது.

திறன் மேம்படுகிறது

திறன் மேம்படுகிறது

நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னால் காபி குடிப்பதால், உங்களது உடற்பயிற்சி செய்யும் திறன் மேம்படுகிறது. இதனால் நீங்கள் சலிப்பு, சோர்வு இல்லாமல் உடற்பயிற்சி செய்யமுடிகிறது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

காபி குடித்த பின் உடற்பயிற்சி செய்வதால், உங்களுக்கு குறைந்த அளவு மட்டுமே உடல் எடை அதிகரிக்கும். இது உங்களுக்கு அதிகளவு சக்தியை கொடுக்கிறது. இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.

தினசரி பருகலாமா?

தினசரி பருகலாமா?

உடற்பயிற்சிக்கு முன்னர் காபி பருகுவது பாதுகாப்பானது தான். இது பல நன்மைகளை தரக்கூடியதாக இருப்பினும், இதனை தினசரி அதிகமாக பருகுவது ஆபத்தை உண்டாக்கும்.

அடிமையாதல்

அடிமையாதல்

காபி உங்களது மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி, மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது. இதனால் நீங்கள் காபி குடிக்கும் போது மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இது உங்களை காபிக்கு அடிமையாக்கிவிடும்.

உடல் வறட்சி

உடல் வறட்சி

காபி உங்களது உடலை வறட்சியடைய செய்துவிடும். எனவே நீங்கள் காபி பருகுவதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.

தூக்கமின்மை

தூக்கமின்மை

காபியை நீங்கள் இரவு தூங்கும் முன்னர் எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும், அது உங்களுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்தும். இது உங்களது தூக்க நேரத்தில் 2 மணிநேரத்தை குறைத்துவிடும். எனவே அவ்வப்போது அளவாக பருகுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

coffee before workout is good or bad

coffee before workout is good or bad
Story first published: Friday, September 15, 2017, 16:25 [IST]
Subscribe Newsletter