Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
தினமும் பாலில் சிறிது பட்டை தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
இங்கு பாலில் சிறிது பட்டை தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டை, உணவின் மணத்தை அதிகரிக்க உதவுவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் என்பது தெரியுமா? பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை சளி மற்றும் இதர நோய்த்தொற்றுகளில் இருந்து விடுவிக்கும்.
அதற்கு பட்டையை உணவில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதன் முழுமையான பலனைப் பெற குறிப்பிட்ட சில பானங்களுடன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இதனால் தற்போது பலர் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் பல பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
என்ன தான் பட்டை ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அதனாலும் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே எக்காரணம் கொண்டும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடுக்காதீர்கள்.
இக்கட்டுரையில் குடிக்கும் பாலில் சிறிது பட்டைத் தூளை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, மகத்துவத்தை புரிந்து நீங்கள் குடிக்கும் பாலிலும் பட்டையை சிறிது சேர்த்து குடியுங்கள்.

வலி நிவாரணி
பாலில் பட்டைத் தூளை கலந்து குடிக்கும் போது, அது சிறந்த வலி நிவாரணியாக இருக்கும். இதற்கு பட்டை புரோஸ்டாகிளான்டினுடன் வினைப்புரிந்து, தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

சர்க்கரை நோய்
ஒரு டம்ளர் பாலில் 1 சிட்டிகை பட்டைத் தூள் கலந்து தொடர்ந்து குடித்து வாருங்கள். இதனால் அது சர்க்கரை நோயைத் தடுக்கும். குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது. பல ஆய்வுகளிலும் பட்டை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூக்கமின்மை
இரவில் படுக்கும் முன் பாலில் பட்டைத் தூள் சேர்த்து குடிக்கும் போது, தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். எப்படியெனில் பட்டை தசை மற்றும் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைத் தூண்டும்.

சளி
பட்டையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே சளி பிடித்திருந்தால், வெதுவெதுப்பான பாலில் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து குடியுங்கள். இதனால் சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தொண்டைப் புண்
தொண்டைப் புண் உள்ளவர்கள் பட்டைப் பாலைக் குடிப்பது நல்லது. இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், தொண்டைப் புண்ணில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, தூக்கத்தையும் தூண்டும்.

எடை குறைவு
பட்டை குளுக்கோஸை வளர்சிதை மாற்றம் செய்ய உதவுவதுடன், கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் தினமும் குடிக்கும் பாலில் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.

வாய் ஆரோக்கியம்
பட்டையில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஈறுகளைத் தாக்கும் பாக்டீரியாக்களை எதிர்க்க உதவும். மறுபுறம் பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆகவே இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து குடிக்கும் போது, அது பல் சொத்தையை தடுப்பதோடு, ஈறுகளை வலிமையாக்கவும் செய்யும்.

செரிமானம்
பட்டை கொழுப்புக்களை உடைத்தெறிந்து, செரிமானத்தை மேம்படுத்தும். இத்தகைய பட்டைத் தூளை ஒரு டம்ளர் பாலில் சேர்த்து கலந்து குடியுங்கள். வேண்டுமானால், அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்தும் கொள்ளலாம்.

இதயம்
பட்டை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதுடன், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கும். எனவே இதனைத் தடுக்க, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் 1 சிட்டிகை பட்டைத் தூள் கலந்து குடியுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி
ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்த பட்டை, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க உதவும். ஆகவே நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க நினைப்பவர்கள், குடிக்கும் பாலில் ஒரு சிட்டிகை பட்டைத் தூளைக் கலந்து கொள்ளுங்கள்.

எலும்பு ஆரோக்கியம்
ஒருவர் அன்றாடம் பாலில் ஒரு சிட்டிகை பட்டைத் தூளைக் கலந்து குடித்தால், அது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு, ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

குளிர்கால பானம்
குளிர்காலத்தில் சூடாக ஏதேனும் குடிக்க வேண்டுமென தோன்றினால், சூடான பாலில் பட்டைத் தூள் கலந்து குடியுங்கள். இதனால் உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, உடல் எப்போதும் கதகதவென்று இருக்கும்.



Click it and Unblock the Notifications