For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு ஏற்படுவதற்கு, இந்த 3 பழக்கங்கள் தான் காரணம் என்பது தெரியுமா?

இங்கு வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்றவற்றிற்கு காரணமான 3 மோசமான பழக்கங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

சமீப காலமாக செரிமான பிரச்சனைகளான வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். ஒருவருக்கு செரிமான பிரச்சனைகள் வருவதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களும் தான் காரணம்.

3 Unhealthy Habits That Cause You Bloating, Indigestion And Acid Reflux

அதுவும் நாம் சாதாரணமாக நினைத்து செய்யும் சில செயல்கள் தான் இந்த அஜீரண கோளாறுகளுக்கு முக்கிய காரணம். இங்கு வயிற்று உப்புசம், செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு காரணமான 3 முக்கிய பழக்கங்கள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டார்ச் மற்றும் புரோட்டீன் உணவுகள்

ஸ்டார்ச் மற்றும் புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகளான சிக்கன், முட்டை, மீன் மற்றும் ஸ்டார்ச் உணவுகளான பாஸ்தா, உருளைக்கிழங்கு, பிரட் அல்லது சாதம் போன்றவற்றை ஒன்றாக எடுக்கும் போது, அது அஜீரண கோளாறை ஏற்படுத்தும். எனவே இவ்விரண்டையும் ஒன்றாகவும், அதிகமாகவும் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

தீர்வு

தீர்வு

வேண்டுமானால் முதலில் ஸ்டார்ச் உணவுகளை உட்கொண்டு, பின் புரோட்டீன் உணவுகளை உட்கொள்ளலாம். மேலும் ஒன்றாக உட்கொள்ள வேண்டுமானால், மிகக்குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

இரவு உணவின் போது குளிர்ச்சியான நீர் குடிப்பது

இரவு உணவின் போது குளிர்ச்சியான நீர் குடிப்பது

ஒரு டம்ளர் குளிர்ச்சியான நீரை இரவு உணவின் போது குடித்தால், அது உணவை செரிக்கும் செயல்முறையைப் பாதிப்பதுடன், உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதிலும் இடையூறை உண்டாக்கும். மேலும் உணவு உட்கொள்ளும் போது, மிகவும் குளிர்ச்சியான நீரைக் குடித்தால், கொழுப்புக்கள் எளிதில் செரிமானமாகாமல் அப்படியே உடலில் தங்கிவிடும்.

தீர்வு

தீர்வு

இரவு உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் க்ரீன் டீ அல்லது எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீரையோ குடிக்கலாம். இதனால் செரிமான பிரச்சனைகளே ஏற்படாது.

உணவு உண்ணும் போது அதிகமாக நீர் குடிப்பது

உணவு உண்ணும் போது அதிகமாக நீர் குடிப்பது

பொதுவாக தண்ணீர் உண்ணும் உணவுகளை செரிப்பதற்கு உதவியாக இருக்கலாம். ஆனால் ஒருவர் உணவு உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக நீரைப் பருகினால், அது அஜீரண கோளாறை ஏற்படுத்துவதோடு, விரைவிலேயே வயிற்றை நிரப்பிவிடும். பொதுவாக உணவு உட்கொள்ளும் போது, அதை செரிப்பதற்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கப்படும். ஆனால் நீரை அதிகம் குடிக்கும் போது, அந்த அமிலம் பலவீனமாகி, உணவுகளை செரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.

தீர்வு

தீர்வு

ஒருவர் உணவு உட்கொள்வதற்கு முன்போ அல்லது பின்போ வேண்டுமானால் நீரைக் குடிக்கலாம். ஆனால் உணவு உட்கொள்ளும் போது ஒரு டம்ளருக்கு மேல் நீரைக் குடிப்பது நல்லதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

3 Unhealthy Habits That Cause You Bloating, Indigestion And Acid Reflux

Here are the main 3 unhealthy habits that cause you bloating, indigestion and acid reflux. Read on to know more...
Story first published: Tuesday, January 17, 2017, 16:27 [IST]
Desktop Bottom Promotion