20, 30, 40-களில் ஆண், பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகள்!

Posted By:
Subscribe to Boldsky

உடல்நலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது உங்களது தலையாய கடமையாக உள்ளது. ஆண், பெண் என இருபாலருக்கும் நிறைய உடலநலக் குறைபாடுகள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்கள் தான். எந்த ஒரு உடல்நல பாதிப்பும் ஒரே நாளில் உண்டாகிவிடுவது இல்லை.

உங்ககிட்ட இந்த பழக்கம் எல்லாம் இருக்கா.... அப்ப உடனே படிங்க!

நாள்பட அது மெதுவாக உண்டாகி ஒரு நாள் ஒட்டுமொத்தமாக உங்களை தாக்கும் தன்மை கொண்டுள்ளன. எனவே, 20, 30, 40 அந்தந்த வயதில் ஆண், பெண் உடலில் எனென்ன மாற்றங்கள் ஏற்படும், அதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் என்னென்ன என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

இருபது வயதுக்கு மேல் ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, ஒருநாளுக்கு 30 கிராமுக்கு மேலான கொழுப்பு உடலில் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், அதிகப்படியாக பிடிக்கும் சிகரெட்டும் கூட இதற்கான ஒரு காரணியாக இருப்பதால் புகைப்பதை குறைத்துக் கொள்ள வேண்டியது.

எஸ்.டி.ஐ.

எஸ்.டி.ஐ.

பால்வினை நோய் தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஆணுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த மறக்க வேண்டாம். மேலும், பாலியல் உறவில் ஈடுபட்ட போது ஏதேனும் தவறு நடந்தது போல தெரிந்தால் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

விதைப்பை புற்றுநோய்

விதைப்பை புற்றுநோய்

விதைப்பை புற்றுநோய் பற்றி பலரும் அறிந்திருப்பது இல்லை. விதைகளில் வீக்கம் அல்லது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் இதை கட்டுப்படுத்த முடியும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஹார்மோன் சார்ந்த தலைவலி

ஹார்மோன் சார்ந்த தலைவலி

குறைவாக சாப்பிடுவது, அதிகமாக ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது போன்றவற்றால் பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஹார்மோன் சார்ந்த தலைவலி நிறைய உண்டாகும்.

இரும்புச்சத்து குறைபாடு

இரும்புச்சத்து குறைபாடு

இந்த காலத்து பெண்கள் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மீது பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது, முக்கியமாக இரும்புச்சத்து. இறைச்சி, முழு தானியங்கள் போன்ற உணவுகளை பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.

உணவு பழக்கம்

உணவு பழக்கம்

20 வயதில் பெண்களிடம் அதிகமாக இருப்பது இந்த தவறான உணவு பழக்கம். சரியான நேரத்திற்கு உண்பதில்லை, சரியான அளவு உண்பதில்லை. காலை உணவை தவிர்ப்பது என நிறைய தவறுகள் செய்கிறார்கள்.

முடி உதிர்தல்

முடி உதிர்தல்

முப்பது வயதில் ஆண்களுக்கு சொட்டை விழுவது அதிகரித்து வருகிறது . இது தங்கள் அழகை குறைப்பதாய் எண்ணி நிறைய ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

முப்பது வயதுக்கு மேல் பெரும்பாலும் ஆண்கள் தங்கள் உடல் எடை மற்றும் உடற்பயிற்சி மீது கவனம் செலுத்துவது இல்லை. இதனால், உடல் எடை அதிகரித்து, இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.

உடல் எடை

உடல் எடை

முப்பது வயதுக்கு மேல் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆண்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் ஆரோக்கிய உணவு, உண்ணும் உணவுக்கு ஏற்ற உடற்பயிற்சி.

அதிக கொலஸ்ட்ரால்

அதிக கொலஸ்ட்ரால்

ஆண்களுக்கு இருபது வயதில் ஏற்படும் கொலஸ்ட்ரால் பிரச்சனை, பெண்களுக்கு முப்பது வயதில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. பெண்களுக்கு பெரும்பாலும் புகைக்கும் பழக்கம் இல்லாததால், உணவு முறையில் மட்டும் கொழுப்புக் குறைந்த உணவை உட்கொண்டு வந்தால் இதற்கு சரியான தீர்வுக் காண முடியும்.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

உடற்பயிற்சி செய்யாதிருப்பது, நார்ச்சத்து குறைபாடு, முறையற்ற டயட் மற்றும் சுற்று புற காற்று மாசு மற்றும் புகைக்காவிட்டாலும் புகைக்கும் இடத்தில் இருப்பது போன்றவற்றின் காரணமாக பெண்களுக்கு முப்பது வயதிற்கு மேல் நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருக்கிறது.

நீரிழிவு

நீரிழிவு

அதிகரிக்கும் கொலஸ்ட்ரால், உடல் எடை, ஆரோக்கியமான உணவு முறை பின்பற்றாமல் இருப்பது போன்றவை பெண்களுக்கு நீரிழவு உண்டாக காரணிகளாக இருக்கின்றன.

தசை வலிமை

தசை வலிமை

நாற்பதை தாண்டும் போது ஆண்களுக்கு தசை வலிமை குறைய ஆரம்பிக்கிறது. உடல் எடையை சரியான அளவில் பின்பற்றினாலே தசை வலிமை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், தினமும் ஒரு அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

இதய நோய்கள்

இதய நோய்கள்

சீரான உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன் அதிகரித்தல் போன்றவை இதயத்தை சுற்றி கொழுப்பை சேர்த்து, இதய செயல்திறனை குறைத்துவிடுகிறது. இதனால் நாற்பதுகளை தாண்டும் போது ஆண்களுக்கு இதய பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக்கிறது.

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய்

நாற்பது வயதில் ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சர் உண்டாகும் அபாயம் இருக்கிறது எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, நாற்பது வயதுக்கு மேல் புரோஸ்டேட் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

உடல் எடை அதிகரிப்பு

உடல் எடை அதிகரிப்பு

நாற்பதுகளில் தான் பெண்களுக்கு திடீரென உடல் எடை அபரிமிதமாக உடல் எடை அதிகரிக்கிறது. குழந்தை வளர்ப்பு, குடும்ப பொறுப்பு போன்றவற்றில் தங்கள் உடல்நலத்தை பற்றி பெண்கள் மறந்துவிடுகிறார்கள்.

மாதவிடாய்

மாதவிடாய்

நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் தருவாய் ஆகும். இந்த காலத்தில் அதிகமான இரத்த போக்கு ஏற்படும் இதனால், தலை சுற்றல், உடல் சோர்வு போன்றவை நிறைய உண்டாகும். எனவே, ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, நாற்பது வயதுக்கு மேல் சீரான கால இடைவேளையில் மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What You Need To Do In Your 20s, 30s And 40s To Live A Healthy

What You Need To Do In Your 20s, 30s And 40s To Live A Healthy, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter