ஆண்களை மட்டுமே அதிகம் தாக்கும் 7 கொடிய நோய்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பலரும் பெண்கள் தான் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட நோயால் அவஸ்தைப்படுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் மன இறுக்கம், இதய நோய்கள், தைராய்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் ஆராய்ச்சியாளர்களோ, பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவு நோயால் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர்.

அந்த வகையில் இங்கு ஆண்கள் அதிகமாக கஷ்டப்படும் சில நோய்கள் மற்றும் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்ச்சல்

காய்ச்சல்

பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், காய்ச்சலை உண்டாக்கும் ஒருவகை வைரஸின் வளர்ச்சியைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே சமயம் ஆண்களின் உடலிலும் சிறிது ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதனால் காய்ச்சலை உண்டாக்கும் வைரஸை எதிர்த்துப் போராட முடியாமல், ஆண்கள் அடிக்கடி காய்ச்சலால் அவஸ்தைப்படச் செய்வதாகவும் கூறுகின்றனர்.

புற்றுநோய்

புற்றுநோய்

பல ஆய்வுகள் ஆண்கள் பெண்களை விட அதிகளவு புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றன. அதிலும் புரோஸ்டேட் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோயால் தான் ஏராளமான ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆட்டிசம்

ஆட்டிசம்

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் தான் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் பிறக்கும் போது அதிகளவு சாம்பல் நிற திசுக்களை கொண்டிருப்பது தான் காரணமாகவும் கூறப்படுகின்றன.

நீரிழிவு

நீரிழிவு

பெண்களை விட ஆண்கள் தான் டைப்-2 நீரிழிவால் கஷ்டப்படுகின்றனர். இதுக்குறித்து 95,000-த்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆண்கள் தான் இந்த நோயுடன் வாழ்ந்து வருவதாக தெரிய வந்தது.

சிறுநீரக நோய்கள்

சிறுநீரக நோய்கள்

சிறுநீரக நோயால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமான சிரமத்தை சந்திக்கிறார்கள். இப்படி சிறுநீரக நோய்கள் ஆண்களை அதிகம் தாக்குவதற்கு காரணம் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, சரியான அளவு நீரைப் பருகாமல் வேலை செய்வது தான்.

மதமிஞ்சிய மதுப்பழக்கம்

மதமிஞ்சிய மதுப்பழக்கம்

சுய நினைவு இழக்கும் வரை அளவுக்கு அதிகமாக மது அருந்துவதில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம். மதுப்பழக்கம் ஓர் கெட்ட பழக்கமாக இருந்தாலும், இது ஓர் நாள்பட்ட நோய் தான். இதனால் தான் ஆண்களின் வாழ்நாள் பெண்களை விட குறைவாக உள்ளது.

இதய நோய்

இதய நோய்

பெரும்பாலான ஆண்கள் இதய நோயால் தான் இறப்பை சந்திக்கின்றனர். இதய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கைப் பார்க்கும் போது, பெண்கள் விட ஆண்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதற்கு ஆண்களது உணவுப் பழக்கம் மற்றும் இதர பழக்கவழக்கங்களைக் காரணமாக கூறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Diseases Men Are At Higher Risk Than Women

Here are some diseases men are at higher risk than women. Read on to know more...
Subscribe Newsletter