For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பப்பாளி விதைகளைச் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? தெரிந்து கொள்ள இதப் படியுங்க.

|

பப்பாளிப் பழம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெங்களூர் பப்பாளியை சாப்பிட்ட பின் இதனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டீர்கள். அவ்வளவு இனிப்பான சுவை இருக்கும்.

பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பப்பாளி மரம் எளிதில் எங்கும் வளரக் கூடியது. பூச்சி மருந்தோ, உரமோ தேவைப்படாது. ஆகவே மற்ற பழங்களைப் போலல்லாமல் அவற்றை தைரியமாக உண்ணலாம்.

பப்பாளியை சாப்ப்பிட்டால் நல்லது எனத் தெரியும். ஆனால் பப்பாளி விதையையும் உண்ணலாம் எனத் தெரியுமா? பப்பாளி விதைகள் பப்பாளியைவிட நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றன.

Medicinal properties of papaya seeds

சிறிது கசப்பு சுவையுடன்தான் இருக்கும்.ஆரோக்கியத்தை விரும்புவர்கள் அப்படியே பழத்தோடு சாப்பிடலாம். சுவையையும் கூட விரும்புவர்கள் விதைகளை மசித்து சாலட்டுடனோ, வேறு உணவுகளுடனோ, அல்லது ஜூஸுடனோ கலந்து சாப்பிடலாம்.

இது நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால், குழந்தைகளுக்கு எளிதில் அவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் போகலாம். ஆகவே மருத்துவரை ஆலோசித்துவிட்டு குழந்தைகளுக்கு தரலாம்.

பப்பாளிவிதைகளின் நன்மைகள் :

பப்பாளி விதைகள் பெப்பைன் என்ற என்சைமைக் கொண்டுள்ளது.அது முழுக்க ஜீரணத்திற்கு உதவுகிறது. ஆகவே கல்லையும் ஜீரணிக்கக் கூடிய ஆற்றல் இந்த விதைகளுக்கு உண்டு.

வயிற்றுப் பூச்சியை அழிக்கும்:

தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை சாப்பிட்டால்,வயிற்றில் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் ஏற்படாது. பப்பாளி விதைகளில் உள்ள சத்துக்கள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது.

இயற்கை கருத்தடை:

குழந்தைப் பேறினை தள்ளிபோட வேண்டும் என நினைப்பவர்கள், மாத்திரை மருந்துகளுக்கு போகாமல் இந்த பப்பாளி விதைகளை உண்ணலாம். இவை இயற்கையாகவே கருத்தரிக்க விடாமல் செயல்படும்.

கேன்ஸர் செல்களை தடுக்கும்:

இவைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது, உடலில் கொடிய மாற்றங்களை உண்டாக்கும் கேன்ஸர் செல்கள் உருவாகாது என ஆய்வு கூறுகின்றது.

வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்:

பல வகையான ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி, ஆகியவற்றால் உண்டாகும் வீக்கத்தை குறைத்து, வலியைப் போக்கும் இந்த பப்பாளி விதைகள்.

கிருமிகளை தூர விரட்டும்:

நோயை உருவாக்கக்கூடிய, ஸ்டைஃபைலோ கோக்கஸ், ஈ கோலை, மற்றும் சால்மோனெல்லா ஆகியவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, அவைகளை உடலினுள் வர விடாமலும் தடுக்கின்றன. இவற்றால், உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் காய்ச்சல்களை நம்மை அண்ட விடாது.

கல்லீரலை பாதுகாக்கும் :

பப்பாளி கல்லீரலுக்கு தேவையான ஆரோக்கியமான போஷாக்கைத் தரும். லிவர் சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்களை குணப்படுத்தும். பப்பாளி விதைகளை பேஸ்ட் செய்துஅதனை எலுமிச்சை சாற்றில் கலந்து குடிக்கலாம்.


சிறு நீரக செயல்பாடு :

சிறு நீரக செயல்பாட்டினையும் நன்றாக தூண்டும். இதனால் உடலில் தீங்கைத் தரும் நச்சுக்களும் கழிவுகளும் எளிதில் வெளியேறுகின்றன.

ஆகவே உடலுக்கு இவ்வளவு நன்மை தரக் கூடிய இந்த பப்பாளி விதையை வாரம் ஒரு முறையாவது உங்கள் உணவினில் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த நோயையும் உங்களை தைரியமாக அண்டாது. அவற்றை ஓட ஓட விரட்டலாம்.வளமோடு வாழலாம்.

மண்மணம் மாறாத மணப்பாறை முறுக்கு..!!

English summary

Medicinal properties of papaya seeds

Medicinal properties of papaya seeds
Desktop Bottom Promotion