For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்க்க சொல்கிறார்கள் தெரியுமா?

பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு ஒருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என தெரியுமா? அது தெரிந்தால், பாகற்காயைத் தவிர்க்கவேமாட்டீர்கள்.

|

பாகற்காய் கசப்பாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் அதை சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு ஒருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என தெரியுமா? அது தெரிந்தால், பாகற்காயைத் தவிர்க்கவேமாட்டீர்கள்.

பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு ஒருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என தெரியுமா? அது தெரிந்தால், பாகற்காயைத் தவிர்க்கவேமாட்டீர்கள்.

இங்கு பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவாச கோளாறுகள்

சுவாச கோளாறுகள்

பாகற்காயை ஒருவர் வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பது மட்டுமின்றி, ஜூஸ் தயாரித்து, தேன் கலந்து, வாரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

ஆற்றல்

ஆற்றல்

பாகற்காய் ஜூஸ் உடலின் ஆற்றலை மேம்படுத்தும், வலிமையை அதிகரிக்கும். எனவே உடலின் ஆற்றலை அதிகரிக்க கண்ட எனர்ஜி பானங்களைப் பருகாமல், பாகற்காயை சாப்பிடுங்கள். அதுவே போதும்.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

பாகற்காய் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பாகற்காயை விட சிறந்த காய்கறி வேறொன்றும் இல்லை. ஆகவே சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

செரிமானம்

செரிமானம்

பாகற்காய் செரிமானத்திற்கு நல்லது. இது செரிமான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

புழுக்கள் அழியும்

புழுக்கள் அழியும்

வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற பாகற்காய் உதவும். மேலும் பாகற்காய் உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். அதற்கு பாகற்காயை ஜூஸ் எடுத்து தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு ஒருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என தெரியுமா? அது தெரிந்தால், பாகற்காயைத் தவிர்க்கவேமாட்டீர்கள்.

Want to know why bitter gourd is good for health? Read on to know more...
Story first published: Thursday, November 3, 2016, 18:24 [IST]
Desktop Bottom Promotion