சிறுநீரக தொற்றா? அலட்சியம் காட்டாதீர்கள்!

By: Hemi Krish
Subscribe to Boldsky

சிறுநீர் குழாயில் பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று, சரியாக கவனிக்கப்படாமல் இருந்தால் அது பரவி சிறுநீர்ப்பையை அடைந்து இறுதியில் கிட்னியில் தொற்றிக்கொள்ளும். கிட்னியில் ஏற்படும் தொற்றிற்கு சிறுநீரக தொற்று அல்லது பைலோநெஃப்ரைடிஸ் (Pyelonephritis) என்று பெயர். ஒரு கிட்னியை பாதித்தால் அது மற்ற கிட்னியையும் பாதிக்கும்.

Home remedies for kidney infection

யாருக்கெல்லாம் இந்த பாதிப்பு வரும்?

யாருக்கு வேண்டுமானாலும் வரும். முக்கியமாய் பெண்களுக்கும் அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு வரும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சிறு நீரக கற்கள் இருப்பவர்களுக்கு மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகளாலும் சிறு நீரகத் தொற்று ஏற்படும்.

அதனை அப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறுநீரகத்திற்கே நிரந்தரமாய் பாதிப்பு ஏற்படும். மருத்துவரின் பரிசீலனையின் பேரில் உடனடியாக ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்தோடு வீட்டிலேயும் தீர்வு காணலாம்.

திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்:

சிறு நீரக தொற்று இருக்கும்போது திரவ உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நீரை மருந்து போல மிக அதிகமாய் அந்த சமயத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பாக்டீரியா மற்றும் மற்ற நச்சுக்கள் சேர்ந்து வெளியேறும் தினமும் மூன்று லிட்டர் நீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகளும் நிறைய குடிக்கலாம். இள நீர் ,எலுமிச்சை சாறு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சூடான ஒத்தடம்:

சிறு நீரக தொற்று உள்ளபோது அடி வயிறு,பின் முதுகு,இடுப்பு ஆகிய இடங்களில் வலி ஏற்படும். சுடு நீர் நிரம்பிய பாட்டில் அல்லது சுடு நீர் பேக்கில் ஒத்தடம் கொடுத்தால் இதமாக இருக்கும்.தசைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

க்ரேன் பெர்ரி ஜூஸ்:

2009 ஆண்டில் மின்னேசோடா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் க்ரேன் பெர்ரி ஜூஸ் குடித்தால் சிறு நீரக தொற்று ஏற்படுவதை தடுக்கிறது என கண்டுபிடித்துள்ளனர். க்ரேன் பெர்ரி அமிலத்தன்மை அதிகமாய் கொண்டுள்ளது.அதனால் பாக்டீரியாவை சிறுநீர் குழாயின் உள்ளே வர விடாமல் தடுக்கிறது.

தினமும் ஒரு கிளாஸ் க்ரேன் பெர்ரி ஜூஸ் குடித்தால் தொற்று குணமாகிவிடும். ஆனால் க்ரேன் பெர்ரியை அதிகமாய் உட்கொள்வது நல்லதல்ல.அதில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளதால்,அதிகமாய் எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.

யோகார்ட்:

யோகார்ட்டில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் மற்றும் உடலுக்கு நன்மை விளைவிக்கும் நுண்ணுயிர்கள் உள்ளது. அவை எடுத்துக் கொள்ளும்போது, சிறு நீர் குழாயில் தங்கும் பாக்டீரியாவை அழிக்கிறது தினமும் 2-3 கப் யோகார்ட் எடுத்துக் கொள்ளலாம்.பழங்களுடனும் சாப்பிடலாம்.

Home remedies for kidney infection

விட்டமின் சி நிறைந்த உணவுகள்:

விட்டமின் சி சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். அவை சிறு நீரகத்தில் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. விட்டமின் சி நிறைந்த புருக்கோலி,உருளைக் கிழங்கு,முளைகட்டிய பயிறு வகைகள்,தக்காளி,கிவி பழம்,ஆரஞ்சு,போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பார்ஸ்லே ஜூஸ்:

பார்ஸ்லே கொத்துமல்லி தழைப் b போன்றது.அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விளைகிறது. அது சிறுநீரின் அளவை அதிகரிக்கச் செய்யும்.இதனால் பாக்டீரியா மற்றும் மற்ற நச்சுக்களையும் வெளியேற்றும். பார்ஸ்லே தழையை இடித்து ஒரு கப் அளவு நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி பருகினால் தொற்று குறையும். தினமும் இருமுறை பருகலாம்.

Home remedies for kidney infection

ஆப்பிள் சைடர் வினிகர்:

ஆப்பிள் சைடர் வினர் ஆன்ட்டி பயாடிக் ஆகும்.இது சிறு நீரக தொற்றை நீக்குவதற்கு மட்டுமல்லாமல் உடலின் கார-அமிலத் தன்மையை சமன்படுத்தி , தொற்றை மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்கிறது. 1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்+2 ஸ்பூன் தேன், ஆகியவை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் இருமுறை குடிக்கலாம்.

பூண்டு:

பூண்டு இயற்கையான ஆன்ட்டி பயாடிக் .அது சிறு நீர் அளவை அதிகரிக்கச் செய்து,பாக்டீரியாக்களையும்,மற்ற கிருமிகளையும் வெளியேற்றுகிறது. தினமும் இருபல் பூண்டினை வாணிலியில் வதக்கி சாப்பிடலாம்.

Home remedies for kidney infection

ஆப்பிள்:

ஆப்பிள் அதிக நார்சத்து மற்றும் எதிர்ப்புத்திறனை கொண்டுள்ளது.மேலும் சிறுநீரகத்தில் அமிலத்தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் தொற்றினை அழிக்கிறது.தொற்று ஏற்படாமலும் காக்கிறது.

மேலும் சில பொதுவான குறிப்புகள்:

அந்தரங்க பகுதிகளை சுத்தமாகவும்,உலர்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். சிறு நீரை அடக்கி வைக்க கூடாது சிறு நீர்ப்பையில் அதிக நேரம் சிறுநீர் தங்கினாலும் தொற்று ஏற்படும்.

Home remedies for kidney infection

பாஸ்பரஸ்,பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. காற்று புகா இறுக்கமான உள்ளாடைகள் அணியக் கூடாது.

English summary

Home remedies for kidney infection

Home remedies for kidney infection!!! Read in tamil.
Story first published: Sunday, May 1, 2016, 12:58 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter