உடலினுள் இருக்கும் புழுக்களை எளிய வழியில் வெளியேற்ற வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலினுள் நிச்சயம் உண்ணும் உணவுகள், குடிக்கும் நீர் மற்றும் இதர வழிகளின் மூலம் புழுக்கள் நுழைந்து, நம்மை பாடாய் படுத்தும். இப்படி நம்மை அசௌகரியமாக உணர வைக்கும் புழுக்களை அழிக்க வழியே இல்லையா என்று பலரும் வருந்துவார்கள்.

Home Remedies For Worms

ஒருவரது உடலினுள் புழுக்கள் அதிகமாக இருந்தால், உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை உடலினுள் உள்ள புழுக்களை அழிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி, உடலை புழுக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடித்து வந்தால், வயிற்றில் இருக்கும் புழுக்கள் அழிக்கப்படும்.

வழி #2

வழி #2

தினமும் பச்சையாக ஒரு பூண்டு பல்லை சாப்பிட, வயிற்றில் உள்ள புழுக்கள் அழிக்கப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.

வழி #3

வழி #3

வசம்பை சூடேற்றி பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும், வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.

வழி #4

வழி #4

கற்பூரத்தை பொடி செய்து, நீரில் கலந்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, சிறுநீர் கழிக்கும் பகுதியில் தெளித்துவிடுங்கள். இதனால் அப்பகுதியில் உள்ள புழுக்கள் அழிக்கப்படும்.

வழி #5

வழி #5

ஒரு பூண்டு பல்லை எடுத்து தோலுரித்து, வேஸ்லின் உடன் சேர்த்து பேஸ்ட் செய்து, பிட்ட பகுதியில் தடவ புழுக்கள் அழிக்கப்படும்.

வழி #6

வழி #6

குழந்தைகளுக்கு பப்பாளிப் பழத்தை அன்றாடம் கொடுத்து வருவதன் மூலம், குழந்தைகள் புழுக்களின் குடைச்சலால் அவஸ்தைப்படுவதைத் தடுக்கலாம்.

வழி #7

வழி #7

வயிற்றில் புழுக்கள் இருப்பது போல் இருந்தால், 1 டீஸ்பூன் வெங்காய சாற்றினை தினமும் இரு முறை பருக வேண்டும். இதனால் நாடாப்புழுக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

வழி #8

வழி #8

வேப்பிலை பொடி அல்லது வேப்பிலையின் கொளுந்து பகுதியை வாயில் போட்டு மென்று விழுங்க, அதன் கசப்புத்தன்மையால் புழுக்கள் அழிக்கப்படும்.

வழி #9

வழி #9

ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை ஒரு சிறு துண்டு வெல்லத்துடன் சேர்த்து, உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் உட்கொள்ள, புழுக்கள் அழிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Worms

Here are some home remedies for worms. Read on to know more...
Story first published: Wednesday, December 21, 2016, 13:48 [IST]