தினமும் புதினா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

By: Hemi Krish
Subscribe to Boldsky

எப்பவும் நாம் அரக்கப் பரக்க நான்-ஸ்டாப்பாக ஓடினாலும் மூளையை அப்பப்போ ரீசார்ஜ் பண்ணுவதுண்டு. சில சமயங்களில் சார்ஜ் போதாமல் நம் மூளையின் பேட்டரி குறையும் போது ஏற்படுவதுதான் உடல் மற்றும் மனச்சோர்வு. அதனை நீக்குவதற்கு கொஞ்சம் மெனக்கெட்டால் திரும்பவும் நான்-ஸ்டாப்பாக ஓடலாம். இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதுதான் புதினா டீ.

"நார்தம்ப்ரியா" பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் 'மார்க் மோஸ்',' ராபர்ட் ஜோன்', மற்றும் 'லக்கி மோஸ்' ஆகியோர் புதினாவில் உள்ள மகத்துவத்தை ஆராய்ச்சி செய்து அறிக்கையை, "பிரிட்டீஷ் சைக்காலஜி சொஸைட்டி " நடத்திய மாநாட்டின் போது சமர்ப்பித்தனர்.

Health Benefits Of Peppermint Tea

ஆய்வில் வெற்றி பெற்றது புதினா டீ:

இந்த் ஆராய்ச்சியில் சுமார் 180 பேர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆய்வு தொடங்கும் முன்பாக, அவர்களிடம் அவர்களின் மனநிலைப் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது. பின்னர் அவர்களை மூன்று பிரிவாக பிரித்து, ஒரு பிரிவிற்கு புதினாடீ யும், இன்னொரு பிரிவிற்கு செவ்வந்தி இதழ்களில் தயாரிக்கப்பட்ட டீ யும், மீதி இருந்த பிரிவிற்கு வெந்நீரும் கொடுக்கப்பட்டது.

Health Benefits Of Peppermint Tea

பின் 20 நிமிடம் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர்களின் அறிவாற்றல் சோதித்தார்கள்.மேலும் அவர்களின் மன நிலைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் செவந்தி இதழ் டீ மற்றும் வெந்நீரை விட புதினாடீ குடித்ததனால் நினைவாற்றலும், புத்திக் கூர்மையும் மேம்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Health Benefits Of Peppermint Tea

செவ்வந்தி-மந்தத்தன்மை தரும்:

செவ்வந்தி இதழ் டீ குடிப்பதனால், நினைவாற்றலும், கவனித்தலும் குறைந்து காணப்பட்டது. மேலும் அது மந்தத்தன்மையும் கொடுக்கிறதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. புதினா மற்றும் செவ்வந்தி இதழ்கள் இரண்டுமே மூலிகைகளாய் இருந்தாலும்,நேர் எதிர் குணங்களை பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது"என வியந்திருக்கிறார் டாக்டர் மோஸ்.

Please Wait while comments are loading...
Subscribe Newsletter