உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

காய்கறிகளில் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் காய்கறி என்றால் அது உருளைக்கிழங்காகத் தான் இருக்கும். ஆனால் சிலர் உருளைக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவது உடல் பருமனை உண்டாக்கும் என்று நினைத்து சாப்பிட மறுக்கின்றனர்.

ஆனால் உண்மையில் உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், உடலைத் தாக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம். அதிலும் இதனை தோலுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இங்கு உருளைக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய்

புற்றுநோய்

ஆய்வு ஒன்றில் உருளைக்கிழங்கில் உள்ள லெக்டின் என்னும் சொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே உருளைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

வாத நோய்

வாத நோய்

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, தினமும் உணவு உண்பதற்கு முன் 2 டீஸ்பூன் குடித்து வந்தால், வாத நோயின் அசௌகரியத்தில் இருந்தும், வலியில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

உருளைக்கிழங்கை தினமும் உட்கொண்டு வருபவரின் உடலில் உள்ள உயர் இரத்த அழுத்தம் குறைவதோடு, உடல் எடையும் அதிகரிக்காமல் அப்படியே இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எலும்பு ஆரோக்கியம்

எலும்பு ஆரோக்கியம்

உருளைக்கிழங்கில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசிம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஜிங்க் போன்றவை எலும்புகளின் வலிமைக்கும், பலத்திற்கும் உதவுகிறது.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

உருளைக்கிழங்கில் டயட்டரி நார்ச்சத்து போதிய அளவில் நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

உருளைக்கிழங்கில் இதய ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் பி6, நார்டச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. பொதுவாக வைட்டமின் பி6 அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு வந்தால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் உருளைக்கிழங்கில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை உள்ளதால், இதய பிரச்சனைகளின் அபாயம் குறையும்.

உருளைக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்குமா?

உருளைக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்குமா?

உண்மையில் உருளைக்கிழங்கினால் உடல் எடை அதிகரிப்பதில்லை. பொதுவாக உருளைக்கிழங்கில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொள்வதனால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் காரணமாக உடல் எடை குறையத் தான் உதவுமே தவிர அதிகரிக்காது. ஆனால் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளுடன், உருளைக்கிழங்கை எடுத்து வந்தால், நிச்சயம் உடல் பருமனடையத் தான் செய்யும். எனவே எடுக்கும் கலோரிகளின் அளவைக் குறைத்துக் கொண்டு, உங்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கை அச்சமின்றி சாப்பிடுங்கள்.

ஆரோக்கியமான சருமம்

ஆரோக்கியமான சருமம்

கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து சருமத்தை சுருக்கமின்றி அழகாக வெளிக்காட்ட வைட்டமின் சி மிகவும் இன்றியமையாதது. இத்தகைய வைட்டமின் சி உருளைக்கிழங்கின் தோலில் உள்ளது.

நரம்பு மண்டல ஆரோக்கியம்

நரம்பு மண்டல ஆரோக்கியம்

நரம்பு மண்டலத்தை அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வைட்டமின் பி உதவி புரிகிறது. இச்சத்து நரம்புக்கடத்திகளின் உற்பத்திக்கு உதவி, நரம்பு செல்களும், மூளையும் சுமுகமாக தொடர்பு கொள்ள உதவுகிறது. இத்தகைய வைட்டமின் பி உருளைக்கிழங்கில் ஏராளமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Eating Potato With The Skin

Here are some health benefits of eating potato with the skin. Read on to know more...
Story first published: Monday, February 22, 2016, 17:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter