ஏன் பச்சைத்தண்ணியை குடிக்கக் கூடாது?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

உடலுக்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. ஆனால் தண்ணீரே பாதிப்புகளைத் தரும் என அறிவீர்களா? எப்போது என்றால் அதனை காய்ச்சி குடிக்காதபோது.

பச்சை தணியை குடிப்பதுதான் எல்லாருக்கும் பிடிக்கும். சுடு நீரை காய்ச்சல் வரும்போது கூட பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. ஆனால் பச்சை தண்ணி பல பிரச்சனைகளைத் தரும்.

நீரை கொதிக்க வைத்து குடிங்கள் என எல்லா மருத்துவர்களும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால் வெறும் நோய்க்கான ஆறுதல் மட்டுமல்ல அதில் பல நன்மைகளும் உள்ளன என்பது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுடு நீர் ஒரு விலையில்லா மருந்து என தெரியுமா?

சுடு நீர் ஒரு விலையில்லா மருந்து என தெரியுமா?

சாதரணமாக குடிக்கும் நீரில் பல மினரல்கள், கிருமிகள் கலந்திருக்கும். அதோடு கார்பரேஷன் கிருமிகளை அழிக்க கலந்திருக்கும் குளோரின் போன்ற ரசாயனங்களின் நச்சுக்களும் இருக்கும்.

ஆகவே கொதிக்க வைக்காமல் நீரை குடிக்கும்போது, உடலிலுள்ள எதிர்ப்பு சக்திகள் மற்ற பிரச்சனைகளோடு சேர்த்து , இந்த நீரோடும் போராட வேண்டியிருக்கும். ஆகவே கொதிக்க வைக்காமல் நீரை குடிக்கக் கூடாது.

எவ்வாறு கொதிக்க வைக்க வேண்டும்?

எவ்வாறு கொதிக்க வைக்க வேண்டும்?

குறைந்த பட்சம் 20 நிமிடங்கள், பாத்திரத்தை மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இதனால் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. அதோடு கடின மினரல்கள் அடியில் தங்கிவிடும்போது வடிகட்டி குடிப்பதால் சிறு நீரக பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள் -1:

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள் -1:

உங்கள் குடல்களில் படலமாய் படிந்திருக்கும் கொழுப்பை கரைத்து வயிற்றிற்கு அனுப்பும். இதனால் ரத்தத்தில் கொழுப்பு சேராமல் காக்கப்படுகிறது.

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள்-2 :

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள்-2 :

காய்ச்சல், தொற்று ஏற்படும்போது ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு நன்றாக காய்ச்சிய சுடு நீரை வெதுவெதுப்பான நிலையில் குடித்தால் விரைவில் குணமாகும்.

நாள்பட்ட நோய்கள் இருப்பவர்கள் தேநீர் போல் அவ்வப்போது வெந்நீர் குடித்து வந்தால் நோய்களின் தீவிரம் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள்-3 :

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள்-3 :

தினமும் போதிய இடைவேளைகளில் வெந்நீர் குடித்து வந்தால், ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ், ஒற்றைத் தலைவலி, சரும வியாதிகள் ஆகியவை குறையும். இதய நோய்கள் வராது.

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள் -4

சுடு நீர் குடிப்பதால் நன்மைகள் -4

உடல் எடை குறையும். சுடு நீர் குடிக்கும்போது நச்சுக்களும், கழிவுகளும் வெளியேற்றப்படும்.கொழுப்பு கரையும். வளர்சிதை மாற்றம் துரிதமாக நடைபெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of Drinking Hot water

Did you know the health benefits of drinking hot water?
Subscribe Newsletter