நீங்கள் தினமும் சரியான அளவு நீர் குடிக்கிறீர்களா?

By: Hemi Krish
Subscribe to Boldsky

நம் உடல் 66 சதவீதம் நீரினால் ஆனது. உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்திற்கும், சத்துக்கள் உறிஞ்சுவதற்கும் நீர் தேவைப்படுகிறது. ஆனால் நாம் தேவையான அளவுதான் நீர் குடிக்கிறோமா என குழப்பம் ஏற்படுவதுண்டு. இதற்கு தீர்வு காண எளிதான வழியை நியூ ஹாம்ஷைர் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நம் உடலுக்கு தேவையான நீர்சத்து ஒருவருக்கொருவர் மாறுபடும். செய்யும் வேலை, உடற்பயிற்சி, எடுத்துக் கொள்ளும் உணவு இதனைக் கொண்டே நீரின் தேவையும் நிர்ணயிக்க முடியும்.

Do you drink enough water? experts ask.

ஆராய்ச்சியாளர்கள் மக்களிடம் செய்த ஆய்வினில் பொதுவாக 600லிருந்து 900 மில்லி லிட்டர் வரை நீரின் அளவு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடுகிறது. நீர்சத்து என்பது நாம் குடிக்கும் நீரின் அளவு மட்டும் கணக்கில் கொள்வதில்லை.

காபி,ப ழச்சாறு போன்ற திரவ உணவுகள், நீர் ஆகாரங்கள் ஆகியவற்றிலும் நீர்தன்மை உள்ளதால் அவைகளயும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் எடுத்துக் கொண்ட நீரின் அளவு மற்றும் வெளியேறும்( சிறுநீர் மற்றும் வியர்வை) நீரின் அளவைக் கொண்டு ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர்.

திரவ உணவு மிக நல்லது:

அவ்வப்போது திரவ உணவு எடுத்துக் கொள்வது மிக சிறந்தது. அவை உடலில் நீரின் அளவை சமநிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கனிம சத்துக்களையும் சமப்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Do you drink enough water? experts ask.

நீர் இழப்பு = உயிர் இழப்பு?

தொடர்ந்து நீர் மிகக் குறைவாக குடிக்கும் போது, உடற்பயிற்சி அல்லது வேலை செய்யும் போது, உடலில் நீர்வறட்சி ஏற்படும். இது உயிருக்கே உலைவைக்கும். அதிகப்படியான உடல் சூட்டினால் பக்கவாதம் ஏற்படும். மூளை தனக்கு தேவையான நீரை உடலின் செல்லிலிருந்து உறிஞ்சும்போது, செல்கள் சிதைந்து போகும். அதோடு மூளையில் வீக்கம் ஏற்படும் இதற்க Cerebral Edema என்று பெயர்.

Do you drink enough water? experts ask.

நீர் அதிகப்படியாக குடிப்பதும் ஆபத்துதான். நீரை நீங்கள் வேகமாய் நிறைய ஊற்றும்போது எல்லாவற்றையும் அடித்துச் செல்லும் தானே. அப்படிதான் உடலிலும். நீரை அளவுக்கு அதிகமாய் ஒரே சமயத்தில் வயிறு முட்ட குடிக்கும் போது உடலை சமன்படுத்தும் எலக்ட்ரோலைட் எல்லவற்றையும் கிட்னி வெளியேற்றிவிடும். அதுவும் உடலில் நீர்வறட்சி உண்டாவதற்கு சமம்தான்.

ஆகவே மக்களே! மிக அதிகமாய் நீர் எடுத்துக் கொள்வதோ அல்லது மிகக் குறைவாய் எடுத்துக்கொள்வதோ இரண்டுமே நல்லதல்ல.

Do you drink enough water? experts ask.

நீர்வறட்சி என்பது உயிருக்கு ஆபத்தில்தான் போய் முடியும். ஆக்ஸிஜன் அளவு குறைதல், கோமா, தசை சுருங்குதல், கிட்னி ஃபெயிலியர் என போன்ற ஆபத்தான நிலைகள் தொடர்ச்சியாக நீரை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் ஏற்படும். ஆகவே உடலுக்கு தேவையான நீரினை எடுத்துக் கொள்ளுங்கள். உடலை ஆரோக்கியமாய் பார்த்துக் கொள்ளுங்கள்.

English summary

Do you drink enough water? experts ask.

Do you drink enough water? experts ask. Read herein tamil
Please Wait while comments are loading...
Subscribe Newsletter