ஹோமியோபதியை மேற்கொள்ளும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் ஆங்கில மருத்துவத்திற்கு பின் அதிக மக்கள் பின்பற்றி வருவது இயற்கை வைத்திய முறையான ஹோமியோபதி மருத்துவ முறையைத் தான். ஹோமியோபதி மருத்துவ முறையால் எண்ணற்ற உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஆகவே மக்கள் இதனை பாதுகாப்பான மருத்துவ முறையாக நினைத்து பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் இந்த ஹோமியோபதி மருத்துவத்தினாலும் நாம் சில பக்கவிளைவுகளை சந்திக்கக்கூடும். பொதுவாக இயற்கை மருத்துவத்தைப் பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்சனைகள் குணமாவதற்கு பல நாட்கள் ஆகும். அதுமட்டுமின்றி, ஹோமியோபதி முறையைப் பின்பற்றி, திடீரென்று ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றும் போது பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.

எனவே ஹோமியோபதி மருத்துவ முறையைக் கையாள நினைக்கும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டு பிறகு பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் முற்றிய நிலையில் குணப்படுத்த முடியாது

நோய் முற்றிய நிலையில் குணப்படுத்த முடியாது

ஹோமியோபதி மருத்துவ முறையில் முற்றிய நிலையில் உள்ள நோய்களை குணப்படுத்த முடியாது. ஏனெனில் இது ஓர் இயற்கை மருத்துவ முறை என்பதால், குணமாவதற்கு நீண்ட நாட்கள் வேண்டும். ஆனால் தீவிர நிலையில் இந்த முறையை மேற்கொண்டால், உயிரைத் தான் இழக்க வேண்டியிருக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடுகளை குணப்படுத்தாது

ஊட்டச்சத்து குறைபாடுகளை குணப்படுத்தாது

ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கொண்டவர்களுக்கு ஹோமியோபதி சிறந்ததல்ல. குறிப்பாக இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இதர ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்தால், அதனை உணவுகளின் மூலம் அல்லது ஊட்டச்சத்து மாத்திரைகளின் மூலம் மட்டுமே சரிசெய்ய முடியும்.

நோயாளியின் முழுமையான வரலாறு தேவை

நோயாளியின் முழுமையான வரலாறு தேவை

உடல்நல பிரச்சனை ஒன்றிற்கு திடீரென்று ஹோமியோபதி மருத்துவ முறையைக் கையாண்டால், அதனால் அந்நிலைமை மோசமாகலாம் அல்லது வேறு சில பிரச்சனைகள் வரலாம். மேலும் ஹோமியோபதியில் நோயாளியின் முழுமையான வரலாற்றை மிகவும் துல்லியமாக தெரிந்து கொண்டால் மட்டுமே சரியான சிகிக்கையை வழங்க முடியும்.

அளவுக்கு மீறி எடுத்தால் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டிவரும்

அளவுக்கு மீறி எடுத்தால் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டிவரும்

மற்றொரு முக்கியமான விஷயம் ஹோமியோபதி மருந்துகளை குறிப்பிட்ட காலத்திற்கு மேல் எடுத்தால், அதனால் கட்டாயம் அதன் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

வயிற்று பிரச்சனைகளை தீவிரமாக்கும்

வயிற்று பிரச்சனைகளை தீவிரமாக்கும்

என்ன தான் ஹோமியோபதி மருத்துவ முறை பாதுகாப்பானதாக இருந்தாலும், விரைவில் குணமாக வேண்டுமென்று அளவுக்கு அதிகமான அளவில் எடுத்தால், அதனால் வயிற்று தொற்றுகள், மூக்கில் இரத்தம் வடிதல், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மோசமாக்கும்

மோசமாக்கும்

ஒரு நோயாளி தன் நோய்க்கு சரியான ஹோமியோபதி மருந்துகளை எடுத்து வந்தும் குணமாகாமல், மீண்டும் ஹோமியோபதியை நாடினால், அதனால் நிலைமை இன்னும் மோசமாகத் தான் செய்யும்.

சிலருக்கு மட்டுமே ஒத்துப் போகும்

சிலருக்கு மட்டுமே ஒத்துப் போகும்

ஹோமியோபதி மருத்துவமுறை அனைவருக்குமே பொருந்தும் என்று கூற முடியாது. ஒருசிலருக்கு மட்டுமே இது நல்ல நன்மையைத் தரும். எனவே இம்முறையைப் பின்பற்றும் முன் பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் இம்முறையைப் பின்பற்றுவது நல்லதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Did You Know Homeopathic Medicines Too Have Side Effects!

Homeopathy too does have some side effects. Read to know what are the side effects of homeopathic drugs.
Subscribe Newsletter