நைட் சரியா தூங்க முடியலையா? அப்ப தூங்க செல்லும் முன் இதெல்லாம் செய்யாதீங்க...

Posted By:
Subscribe to Boldsky

இரவில் தூங்கும் முன் வயிறுமுட்ட உணவு உட்கொண்டால் அல்லது சாப்பிடாமல் இருந்தால் மட்டும் தான், சரியாக தூங்க முடியாது என்றில்லை. இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போவதற்கு உணவைத் தவிர நிறைய விஷயங்கள் காரணமாக உள்ளன.

அன்றாடம் நாம் செய்யும் அந்த விஷயங்களால் தான் இரவில் நம்மால் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் அவஸ்தைப்படுகிறோம். இங்கு அந்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை இரவில் தூங்கும் முன் செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக சப்தத்தில் இசை

அதிக சப்தத்தில் இசை

ஆம், இரவில் படுக்கும் முன் அளவுக்கு அதிகமான சப்தத்தில் இசையைக் கேட்டால், மூளை செல்களின் செயல்பாடு தூண்டப்பட்டு, தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களால் இசையைக் கேட்காமல் தூங்க முடியாதெனில், மென்மையான இசையை மிதமான சப்தத்தில் கேட்டுக் கொண்டே உறங்குங்கள்.

சண்டை மற்றும் வாக்குவாதம்

சண்டை மற்றும் வாக்குவாதம்

பெரும்பாலான குடும்பத்தில், இரவு நேரத்தில் தான் தம்பதிகள் சந்தித்துக் கொள்வதால், தங்களது சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களை படுக்கும் போது மேற்கொள்கிறார்கள். இதனால் மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டு, அதனால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, தூங்க முடியாமல் அவஸ்தைப்பட நேரிடும்.

சிறு இடைவெளி

சிறு இடைவெளி

எப்போதும் இரவு உணவை தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே முடித்துவிட வேண்டும். உணவு உண்ட உடனேயே தூங்கினால், அதனால் தூக்கத்தில் தான் இடையூறு ஏற்படும். மேலும் உணவு உண்டவுடன் தூங்கினால், செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு, அன்று முழுவதும் நல்ல தூக்கத்தை மறக்க வேண்டியது தான்.

மது

மது

பலரும் இரவில் மது அருந்தினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இரவில் தூங்கும் முன் மது அருந்தினால், தூக்க சுழற்சியில் இடையூறு ஏற்பட்டு, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல், தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்பட வேண்டிவரும்.

டிவி பார்ப்பது அல்லது சாட்டிங் செய்வது

டிவி பார்ப்பது அல்லது சாட்டிங் செய்வது

நாள் முழுவதும் வேலைப் பார்த்து விட்டு, இரவில் படுக்கும் முன் தூக்கம் வரும் வரை பலரும் டிவி பார்ப்போம் அல்லது நண்பர்களுடன் சாட்டிங் செய்வோம். ஆனால் இப்படி தூங்கும் முன் செய்தால், அதனால் மூளை ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து செயல்பட்டு, நிம்மதியான தூக்கம் கிடைக்கப் பெற செய்யாமல் தடுக்கும்.

வெளிச்சம்

வெளிச்சம்

இரவில் தூங்கும் போது படுக்கை அறையில் சிறு வெளிச்சம் இருந்தாலும், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, நம் உடலுக்கு ஓய்வு கிடைக்கப் பெறாமல் செய்துவிடும். எனவே தூங்கும் போது அறையை எப்போதும் இருட்டாக இருக்கும் படி செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

காபி அல்லது டீ

காபி அல்லது டீ

அனைவருக்குமே காபி மற்றும் டீயில் உள்ள காப்ஃபைன் நமக்கு சுறுசுறுப்பை வழங்கும் என்று தெரியும். இருப்பினும் பலருக்கு இரவில் தூங்கும் முன் ஒரு கப் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இப்பழக்கம் ஒருவருக்கு இருந்தால், அவர் இரவில் நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறவே முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can't sleep? DON'T DO these 7 things before going to bed!

There are many things that can interfere with your sleep other than food. Here are some everyday things that you are doing wrong which is leading to lack of sleep.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter