விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா? எனில் எப்போது யார் எடுத்துக் கொள்ள வேண்டும்?

Written By:
Subscribe to Boldsky

விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதால் இன்னும் பலம் பெறலாம். ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது குறுக்கு வழியில் ஒரு காரியம் செய்வது போலத்தான்.

5 Things you should know if you are taking vitamin tablets

மிக அவசியம் . சாப்பிட்டே ஆக வேண்டும் என்று மருத்துவர் சொல்லும்போதுதான் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். அவசியமின்றி எடுத்துக் கொள்வதால் என்ன நடக்கும்? யார் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிய தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானம் எப்படி நடக்கும் தெரியுமா?

செரிமானம் எப்படி நடக்கும் தெரியுமா?

நீங்கள் சாப்பிடும் சுவையான மணமான உணவினால் உடலில் என்சைம்கள் தூண்டப்பட்டு, வயிற்றையும் கல்லீரலையும் தயார் செய்து, அதன் பின் செரிமானத்தை உண்டு பண்ணி, சத்துக்களை பிரித்து ரத்தத்திற்கு அனுப்பி அதன் பின் கழிவுகளை வெளியே அனுப்புகிறது. இவ்வாறுதான் நாம் அதன் நமது வயிற்று உறுப்புகள் செயல்படும்.

சத்து மாத்திரை என்ன செய்யும்?

சத்து மாத்திரை என்ன செய்யும்?

ஆனால் நீங்கள் சாப்பிடும் விட்டமின் மாத்திரைகள் நேரடியாக வயிற்றிற்கு சென்று நேரடியாக ரத்தத்திற்கு சத்தை அனுப்பும். இதனால் இதுவரை செயல்பட்டு வந்த என்சைம் மற்றும் சிறு குடல், கணையம் ஆகியவற்றிற்கு வேலை இல்லாமல் போகும்.

அதன் பின் அதன் இயக்கங்கள் மாறுபட ஆரம்பிக்கும். யார் சத்து மாத்திரை சாப்பிடக் கூடாது, யார் சாப்பிட வேண்டும் என பார்க்கலாம்.

மல்டி விட்டமின் - விரயம் :

மல்டி விட்டமின் - விரயம் :

முக்கியமாய் நீங்கள் நன்றாக உணவு சாப்பிடுபவராக இருந்தால், இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காரணம் அவற்றை தேவைக்கு மேல் உடல் எடுத்துக் கொள்ளாது. இவற்றை வெளியேற்றி விடும்.

மருந்து சாப்பிடுபவர்கள் :

மருந்து சாப்பிடுபவர்கள் :

உடல் நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி விட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும்போது அவை மற்ற மருந்துடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை தரும்.

யாருக்கெல்லாம் தேவை :

யாருக்கெல்லாம் தேவை :

மெனோபாஸ் சமயங்களில் ஹார்மோன் மாற்றம் நடக்கும் போது அபரிதமான அளவு கால்சியம் குறைய வாய்ப்புகள் உண்டு. அந்த சமயங்களில் கால்சியம் மற்றும் விட்டமின் சத்துக்கள் அவசியப்படும். ஆகவே வயதான பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பலவீனமானவர்கள் :

பலவீனமானவர்கள் :

உடலில் சத்துக்களை உறியமுடியாமல் உறுப்புகள் பலவீனமாக இருப்பவர்களுக்கு தேவை. மிகவும் போஷாக்கு இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பவர்களுக்கு விட்டமின் மற்றும் மற்ற சத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Things you should know if you are taking vitamin tablets

5 Things you should know if you are taking vitamin supplement
Story first published: Saturday, December 24, 2016, 13:30 [IST]
Subscribe Newsletter