பற்களைத் துலக்குவதில் நம்மை அறியாமல் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அழகை அதிகரித்துக் காட்டுவதில் புன்னகையும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அப்படி புன்னகைக்கும் போது பற்கள் வெண்மையாக இருந்தால் தான், அந்த புன்னகைக்கே அழகு. ஆனால் பற்கள் மஞ்சள் நிறத்துடனும், வாய் துர்நாற்றத்துடனும் இருந்தால் எப்படி இருக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களின் பற்கள் மற்றும் வாயை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!!

ஆனால் சிலர் தங்கள் பற்களைப் பராமரிக்கிறோம் என்று ஒருசில தவறுகளை நம்மை அறியாமலேயே செய்கின்றனர். இதனால் பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எனவே உங்கள் பற்கள் வெண்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளைச் செய்யாதீர்கள்.

பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்களை மென்மையாக தேய்க்கவும்

பற்களை மென்மையாக தேய்க்கவும்

பற்களைத் துலக்கும் போது, பற்களில் உள்ள அழுக்குகள் போக வேண்டுமென்று பலரும் நன்கு கடுமையாக தேய்ப்பார்கள். இப்படி கடுமையாக தேய்ப்பதால், பற்கள் பாதிக்கப்படுவதோடு, ஈறுகளில் காயங்கள் உருவாகும். எனவே பற்களில் உள்ள கறைகளைப் போக்க கடுமையாகத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குறைந்தது 2 நிமிடம் துலக்கவும்

குறைந்தது 2 நிமிடம் துலக்கவும்

பலர் நான் தினமும் பற்களை 2 முறை துலக்குகிறேன், இருப்பினும் வாய் துர்நாற்றம் மற்றம் பற்களில் பிரச்சனைகள் இருக்கின்றன என்று கூறுவார்கள். இதற்கு காரணம், பற்களை பலர் 2 நிமிடத்திற்கும் குறைவாகத் துலக்குவது தான். எனவே எப்போதும் பற்களைத் துலக்கும் போது குறைந்தது 2 நிமிடம் செலவிடுங்கள். 2 நிமிடங்களாவது செலவிட்டால் தான் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பற்களில் பற்காறை உருவாகாமல் இருக்க வேண்டுமெனில், தினமும் ஏதேனும் ஒரு காய்கறியை பச்சையாக சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, தினமும் பழங்களை உட்கொள்ள வேண்டும். இதனால் அவற்றில் உள்ள நார்ச்சத்து, பற்களில் படிந்துள்ள கறைகளை நீக்கி, பற்களை பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் நீரால் வாயைக் கொப்பளியுங்கள்.

வாயின் மூலை முடுக்குகள்

வாயின் மூலை முடுக்குகள்

பலர் தங்கள் முன் பற்களை மட்டும் தான் நன்கு துலக்குவார்கள். ஆனால் இப்படி வெறும் முன் பற்களை மட்டும் துலக்குவதால் பற்கள் வெண்மையாக இருக்கும். ஆனால் வாய் துர்நாற்றம் நீங்காது. எனவே வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க வேண்டுமானால், வாயின் மூலை முடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத்துகள்களையும் அகற்ற வேண்டும்.

ஒரே கோணத்தில் ஆரம்பிக்காதீர்கள்

ஒரே கோணத்தில் ஆரம்பிக்காதீர்கள்

பலரும் தினமும் ஒரே கோணத்தில் தான் பற்களைத் துலக்குவார்கள். முதலில் அதனை நிறுத்த வேண்டும். ஏனெனில் இப்படி செய்வதால் டூத்பேஸ்ட் தினமும் ஒரே பற்களில் எடுத்த எடுப்பில் பட்டு, அதனால் பற்கள் பாதிக்கப்பட ஆரம்பிக்கும். எனவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோணத்தில் பற்களைத் துலக்க ஆரம்பியுங்கள்.

உணவுக்கு பின் உடனே பற்களை துலக்காதீர்கள்

உணவுக்கு பின் உடனே பற்களை துலக்காதீர்கள்

உணவை உண்ட பின்னர் உடனேயே பற்களைத் துலக்கினால் பற்கள் பாதிக்கப்படும் என்பது தெரியுமா? ஆம், சாதாரண தருணங்களை விட, உணவு உண்ட பின்னர் வாயில் pH-இன் அளவு குறைவாக இருக்கும் மற்றும் இந்நேரத்தில் வாயில் அசிட்டிக்கும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பற்களைத் துலக்குவதால் பற்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே உணவு உண்ட 1/2 மணிநேரத்திற்குப் பின் பற்களைத் துலக்குங்கள்.

பற்களைத் துலக்கியதும் எலுமிச்சை ஜூஸ்

பற்களைத் துலக்கியதும் எலுமிச்சை ஜூஸ்

பலரும் உடல் எடையைக் குறைக்க காலையில் வெறும் வயிற்றில் பற்களைத் துலக்கிய பின் எலுமிச்சை ஜூஸ் குடிப்பார்கள். ஆனால் அப்படி பற்களைத் துலக்கிய உடனேயே அசிட்டிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை ஜூஸ் குடித்தால், அதில் உள்ள அமிலம் பற்களின் எனாமலை வலிமையிழக்கச் செய்து, பற்களை அரித்துவிடும். எனவே பற்களைத் துலக்கிய பின் முதலில் தண்ணீரை ஒரு டம்ளர் குடித்துவிட்டோ அல்லது 1/2 மணிநேரம் கழித்தோ தான் எலுமிச்சை ஜூஸைக் குடிக்க வேண்டும்.

டூத் பிரஷ்ஷை மாற்றுங்கள்

டூத் பிரஷ்ஷை மாற்றுங்கள்

டூத் பிரஷ் புதிதாகத் தான் உள்ளது என்று பலரும் பல மாதங்களாக ஒரே டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்துவார்கள். என்ன தான் பிரஷ் புதிதாக இருந்தாலும், 2 மாதத்திற்கு ஒரு முறை டூத் பிரஷ்ஷை மாற்றினால் தான் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Mistakes We Make With Our Teeth

Check out the weird mistakes that we make with our teeth in this article today. Read on to know more about the various mistakes we make with our teeth.