தினமும் பத்து டம்ளர் தண்ணீர் குடித்து, உடல் எடையை குறைக்கும் முறை!!!

Posted By:
Subscribe to Boldsky

உணவில்லாமல் கூட நீங்கள் ஒருமாதம் வரை தாக்குப்பிடிக்க முடியும். ஆனால், தண்ணீர் இன்றி நீங்கள் இருநாட்களை கூட தாக்குபிடிக்க முடியாது. தண்ணீர் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். நமது உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும் சில எளிய ஆயுர்வேத வழிகள்!!!

தண்ணீர் என்பது உடலில் நீர்நிலையை சமப்படுத்த மட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்கவும் பயனளிக்கிறது. பொதுவாகவே ஓர் நாளுக்கு இரண்டில் இருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அல்லது 6 - 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்று பலரும் கூறுவது உண்டு. இதனால் என்ன பயன் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

உடலில் இருந்து கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா???

நீங்கள் தினமும் பத்து டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், உடல் எடையை சீராக குறைக்க முடியுமாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசியை குறைக்கும்

பசியை குறைக்கும்

தினமும் நீங்கள் 8 - 10 டம்ளர் தண்ணீர் குடிப்பதால் உங்களுக்கு ஏற்படும் அதிகப்படியான பசியைக் கட்டுபடுத்த முடியும். அதிகமாக பசி எடுக்காது, இதனால் உங்கள் உடல் எடையை குறைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

அரை லிட்டர் தண்ணீர்

அரை லிட்டர் தண்ணீர்

நீங்கள் உணவு உட்கொள்வதற்கு அரை மணிநேரம் முன்பு, 500மிலி நீர் பருகுவதால் அதிகப்படியான கலோரிகள் உடலில் சேர்வதை தடுக்க முடியும். இதனால் உங்களது உடல் பருமன் அதிகரிக்காமல் பாதுகாக்கலாம்.

50% கொழுப்பு கரைக்கலாம்

50% கொழுப்பு கரைக்கலாம்

நீங்கள் குளிர்பானங்கள் பருகுவதற்கு பதிலாக, தண்ணீரை இம்முறையில் பருகுவதால் சாதாரணமாக கரையும் கொழுப்பை விட 50% அதிகமாக கொழுப்பை கரைக்க முடியும்.

விளையாட்டு திறன் மேலோங்கும்

விளையாட்டு திறன் மேலோங்கும்

முக்கியமாக விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது சிறந்த பலனளிக்கிறது. வியர்வை குறைவாக வெளிப்படுவதால் விளையாட்டு வீரர்களின் திறன் குறைகிறது. நீங்கள் தண்ணீர் அதிகமாக பருகுவதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுவதை தடுத்து, நிறைய வியர்வை சுரக்கவும் செய்ய முடியும். அதிகமாக வியர்வை சுரப்பதும் கூட, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கரைக்க உதவுகிறது.

குடியின் பக்கவிளைவுகளை குறைக்கலாம்

குடியின் பக்கவிளைவுகளை குறைக்கலாம்

பார்ட்டிக்கு செல்லும் முன்பு நீங்கள் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, மது அருந்துவதால் போதை அதிகமாகாமல் தடுக்க முடியுமாம். இது மயக்கம் வராமல் இருக்க வெகுவாக உதவும் என்றுக் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Glasses Of Water A Day To Cut Fat

Do you know about the effect of 10 Glasses of water a day to cut fat? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter