உங்கள் உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலில் 5 லிட்டருக்கும் அதிகமான அளவில் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உடலுறுப்புகளின் செயல்பாடு, ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன் சேவைகள் மற்றும் உடல் வெப்பத்தை சீராக பராமரிக்கவும் இரத்த ஓட்டம் சீரான அளவில் இருப்பது அவசியம்.

உங்களுக்கு அல்சர் தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

ஒருவருக்கு சீரான இரத்த ஓட்டம் இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே ஒவ்வொருவரும் தங்களின் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

இரத்த ஓட்டம் மோசமாக இருந்து, அதுவே தீவிரமானால், மூளை, இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படும். சரி, இப்போது நம் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ச்சியான கைகள் மற்றும் பாதங்கள்

குளிர்ச்சியான கைகள் மற்றும் பாதங்கள்

முறையான இரத்த ஓட்டம் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கும். ஆனால் இரத்த ஓட்டம் ஒருவருக்கு மோசமாக இருந்தால், அதன் விளைவாகத் தான் காய்ச்சல், குளிர் காய்ச்சல், குளிர்ச்சியான கைகள் மற்றும் பாதங்கள் போன்றவை ஏற்படும்.

கைகள் மற்றும் பாதங்களில் வீக்கம்

கைகள் மற்றும் பாதங்களில் வீக்கம்

மோசமான இரத்த ஓட்டம் சிறுநீரகங்களை பாதித்து, அதனால் கைகள் மற்றும் பாதங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு உடலில் உள்ள நீர்மம் தான் கைகள் மற்றும் பாதங்களில் தேங்கி, வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

களைப்பு

களைப்பு

அடிக்கடி களைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் உடலின் உறுப்புகளுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் குறைந்துள்ளது. ஆக்ஸிஜன் குறைவதற்கு காரணம், இரத்த ஓட்டம் மோசமாக இருப்பது. எனவே இதைக் கொண்டு உங்கள் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

விறைப்புத்தன்மை குறைபாடு

விறைப்புத்தன்மை குறைபாடு

ஆண்களுக்கு உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தின் அளவு போதிய அளவில் இல்லாமல், விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படும். விறைப்புத்தன்மை குறைபாட்டின் காரணமாக உறவில் சிறப்பாக செயல்பட முடியாமல் போகும்.

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகள்

உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால், இரைப்பை குடல் பாதையிலும் இரத்தம் குறைவாக உந்தப்பட்டு, செரிமான மெதுவாக நடைபெறும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையையும் சந்திக்கக்கூடும்.

மோசமான மூளை செயல்பாடு

மோசமான மூளை செயல்பாடு

மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு சீரான இரத்த ஓட்டம் அவசியம். ஆனால் இரத்த ஓட்டம் உடலில் சிறப்பாக இல்லாவிட்டால், மூளையின் செயல்பாடு குறைந்து கவனக்குறைவு மற்றும் ஞாபக மறதி போன்றவை ஏற்படக்கூடும்.

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி

உடலில் மோசமாக இரத்த ஓட்டம் இருந்தால், உடலைத் தாக்கும் நோய்கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாமல், நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாகிவிடும். இதன் விளைவாக அடிக்கடி ஏதேனும் ஓர் உடல்நல குறைவால் அவஸ்தைப்படக்கூடும். எனவே இதைக் கொண்டு உங்கள் உடலில் இரத்த ஓட்டம் எப்படி உள்ளது என்பதை அறியலாம்.

பசியின்மை

பசியின்மை

மோசமான இரத்த ஓட்டத்தினால், கல்லீரல் பசிக்கான சிக்னல் மூளையை அடையவிடாமல் செய்யும். எனவே நீங்கள் எப்போதும் பசியின்மையை உணர்ந்தாலோ அல்லது மிகவும் குறைவாக உணவை உட்கொண்டாலோ, அதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று.

சரும நிற மாற்றம்

சரும நிற மாற்றம்

உங்கள் உடலில் உள்ள திசுக்களுக்கு போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால், சருமத்தின் நிறத்தில் மாற்றத்தைக் காண முடியும். குறிப்பாக சருமம் கருஞ்சிவப்பு அல்லது நீல நிறமுடையதாய் காணப்படும். மேலும் விரல்கள் மற்றும் குதிகால்களில் ஏதோ காயம் ஏற்பட்ட போல் காணப்படும்.

பலவீனமான நகங்கள் மற்றும் முடி உதிர்வது

பலவீனமான நகங்கள் மற்றும் முடி உதிர்வது

மோசமான இரத்த ஓட்டத்தினால், நிறைய உறுப்புக்கள் தங்களுக்கு வேண்டிய போதிய ஊட்டச்சத்துக்ளை பெறாமல் போகும். இதன் காரணமாக நகங்கள் மற்றும் முடி பலவீனமாகி, உடையவோ, உதிரவோக் கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Early Signs Of Poor Blood Circulation

Poor blood circulation can cause many complications and you must know the warning signs.
Story first published: Thursday, November 19, 2015, 11:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter