ஈஸ்ட் வளர்ச்சி அபரீதமாக இருப்பதற்கான 10 அறிகுறிகளும்... அதனை சமாளிப்பதற்கான வழிகளும்...

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

கேண்டிடாவா, இது என்னடா புதுசா இருக்கே என கண்டிப்பாக நீங்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருப்பீர்கள். கேண்டிடா என்பது ஈஸ்ட் வகையை சேர்ந்த ஒரு வகையான பூஞ்சை (ஃபங்கஸ்) தான். அதில் சிறிதளவு நம் வாயிலும் குடலிலும் இருக்கக்கூடும். செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிட உதவுவதே இதன் வேலையாகும்.

ஆண்களே! 'அந்த இடத்தில்' அரிப்பு ஏற்பட காரணம் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா?

ஆனால் இதுவே அளவுக்கு அதிகமாக உற்பத்தியானால், கேண்டிடா குடல்களின் சுவர்களை உடைத்து இரத்த ஓட்டத்தில் கலந்து விடும். அப்படிச் செல்லும் போது நச்சுப் பொருட்களை உங்கள் உடலுக்குள் செலுத்தும். இதனால் குடல் ஒழுக்கு ஏற்படும். இது செரிமான பிரச்சனைகளில் தொடங்கி மன அழுத்தம் வரை, பல விதமான உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.

பெண்ணுறுப்பில் வலியா? ஒருவேளை இதெல்லாம் கூட காரணமா இருக்கலாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேண்டிடா வளர்ச்சி எப்போது அபரீதமாகும்?

கேண்டிடா வளர்ச்சி எப்போது அபரீதமாகும்?

குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா, கேண்டிடா அளவுகளின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கும். இருப்பினும் நம்மை மீறி அதன் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக செல்வதற்கு சில காரணிகள் இருக்கிறது.

காரணிகள்

காரணிகள்

- ரீபைண்ட் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை (பூஞ்சைக்கு தீனியாக விளங்கும்) அதிகமாக உள்ள உணவுகளை உண்ணுதல்

- அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்தல்

- வாய்வழி கருத்தடைப் பொருட்கள்

- ஊறுகாய் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணுதல்

- அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தை கொண்ட வாழ்க்கையை வாழ்தல்

- நட்புரீதியான பாக்டீரியாக்களை கொல்லும் ஆன்டி-பயாடிக்ஸ்

அறிகுறிகள்

அறிகுறிகள்

- சரும மற்றும் நக பூஞ்சை தொற்றுக்கள் (அத்தலெட் பாதம் அல்லது கால்விரல் நகம் பூஞ்சை)

- சோர்வாக உணர்வது. மேலும் தீவிர அசதி அல்லது ஃபைப்ரோமையால்ஜியா

- வயிற்று பொருமல், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள்

- ஹாஷிமோட்டோ தைராய்டிட்டிஸ், முடக்கு கீல்வாதம், குடற்புண் பெருங்குடலழற்சி, லூபஸ், தோல் அழற்சி, தடித்த உலர் நகம் அல்லது மரப்பு நோய் போன்ற தன் தடுப்பாற்று நோய்கள்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

- ஒருமுகப்படுத்துவதில் கடினம், மோசமான நினைவாற்றல், கவனமின்மை, ஏ.டி.டி., ஏ.டி.எச்.டி. மற்றும் மூளை மூடு பனி.

- சிரங்கு, தோல் அழற்சி, படை மற்றும் சொறி போன்ற சரும பிரச்சனைகள்

- எரிச்சல் தன்மை, மனநிலை மாற்றங்கள், பதற்றம் அல்லது மன அழுத்தம்

அறிகுறிகள்

அறிகுறிகள்

- பெண்ணுறுப்பில் தொற்றுக்கள், சிறுநீர் பாதையில் தொற்றுக்கள், மலக்குடல் அரிப்பு அல்லது பெண்ணுறுப்பு அரிப்பு.

- தீவிர அலர்ஜிகள் அல்லது அரிக்கும் காதுகள்

- சர்க்கரை மற்றும் ரீபைண்ட் கார்போஹைட்ரேட்ஸ் மீது தீவிரமான நாட்டம்

இரத்த பரிசோதனை

இரத்த பரிசோதனை

IgG, IgA, மற்றும் IgM கேண்டிடா பிறபொருளெதிரிகளின் அளவுகளை நீங்கள் சோதித்துக் கொள்ள வேண்டும். இதனை பல ஆய்வுக் கூடங்களிலேயே சோதித்துக் கொள்ளலாம். இவைகள் அதிக அளவில் இருந்தால் கேண்டிடா வளர்ச்சியும் அதிகமாக உள்ளது என அர்த்தமாகும். மலம் அல்லது சிறுநீர் சோதனை நேர்மறையான விளைவை காட்டினாலும் இது பெரும்பாலும் எதிர்மறையான விளைவையே காட்டும்.

மலம் சோதனை

மலம் சோதனை

இது தான் துல்லியமான சோதனையாக கருதப்படுகிறது. இது உங்கள் பெருங்குடல் அல்லது சிறுகுடலில் கேண்டிடா உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும். இது எந்த வகையான பூஞ்சையை சேர்ந்தது என்பதையும் இதற்கான சிகிச்சையையும் ஆய்வுக்கூடத்திலேயே பெரும்பாலும் தெரிந்து கொள்ளலாம்.

(குறிப்பு: உங்கள் மருத்துவர் எப்போதும் எடுக்கும் அடிப்படை மல சோதனைக்கு பதில் விரிவான சோதனையை பரிந்துரைக்க வேண்டும்)

சிறுநீர் ஆர்கானிக்ஸ் டிஸ்பையாசிஸ் சோதனை

சிறுநீர் ஆர்கானிக்ஸ் டிஸ்பையாசிஸ் சோதனை

இந்த சோதனை டி-அராபினிடோல் எனப்படும் கேண்டிடா பூஞ்சையின் அதீத வளர்ச்சியை கண்டுப்பிடிக்கும். இந்த சோதனையில் உயர்த்தி காண்பிக்கப்பட்டால் கேண்டிடாவின் வளர்ச்சியும் அதிகமாக உள்ளது என்பதாகும். இந்த சோதனையின் மூலம் கேண்டிடா பெருங்குடலில் உள்ளதா அல்லது சிறு குடலில் உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்.

சிகிச்சை முறை

சிகிச்சை முறை

கேண்டிடாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டுமானால் அதீத பூஞ்சை வளர்ச்சியை நிறுத்த வேண்டும். கேண்டிடாவை சரியான அளவில் கட்டுப்படுத்தும் நட்பு ரீதியான பாக்டீரியாவை மீட்டமைக்கும். உங்கள் குடலையும் ஆற்றும். இதனால் மீண்டும் உங்கள் இரத்த ஓட்டத்தில் கேண்டிடா நுழையாது.

உணவுப் பழக்கத்தில் மாற்றம்

உணவுப் பழக்கத்தில் மாற்றம்

அதீத கேண்டிடா வளர்ச்சியை நீக்க வேண்டுமானால் உங்கள் உணவு பழக்கத்தில் முக்கிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். குறைந்த அளவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் உணவுகளை உண்ண வேண்டும். சர்க்கரையை தான் பூஞ்சைகள் உண்ணும். அதனால் மிட்டாய், டெசர்ட், மதுபானம் மற்றும் மாவுகள் என சர்க்கரை எந்த வடிவில் இருந்தாலும் சரி சர்க்கரையை தவிர்க்க வேண்டும்.

அளவான கார்போஹைட்ரேட்ஸ்

அளவான கார்போஹைட்ரேட்ஸ்

அதே போல் தானியங்கள், பீன்ஸ், பழம், ப்ரெட் மற்றும் உருளைக்கிழங்குகள் போன்ற காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் அடங்கிய உணவுகளை ஒரு நாளைக்கு ஒரு கப் என்ற ரீதியில் குறைத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்கையில் கேண்டிடா வளர்ச்சி தடுக்கப்பட்டு, அதிகமாக வளர்ந்தது அழியும். புளித்த உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

போதிய மருந்துகளை எடுக்கவும்

போதிய மருந்துகளை எடுக்கவும்

உணவை மட்டும் நாடினால் கேண்டிடாவை இயல்பு நிலைக்கு கொண்டு வர மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும். இதனால் டைஃப்லூகன் அல்லது நியாஸ்டட்டின் போன்ற பூஞ்சை மருந்துகளை ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்தலாம். நீங்களே சுய சிகிச்சை அளித்து வந்தால் காப்ரிளிக் அமிலம் அடங்கிய சத்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெயில் இருந்து தான் காப்ரிளிக் அமிலம் கிடைக்கிறது. இது இந்த பூஞ்சை அழிக்கும்.

கற்பூரவள்ளி எண்ணெய்

கற்பூரவள்ளி எண்ணெய்

கற்பூரவள்ளி எண்ணெய் போன்ற சில மூலிகைகளையும் சிலர் பரிந்துரைப்பதைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். கற்பூரவள்ளி எண்ணெய் சிறப்பாக செயல்படலாம், ஆனால் அது நல்ல பாக்டீரியாக்களையும் கொன்று விடும். அதனால் அதனை நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம். பூஞ்சை எதிர்ப்பி மருந்துகளும் காப்ரிளிக் அமிலமும் குறிப்பாக பூஞ்சைக்கு எதிரானவை. அவைகள் நல்ல பாக்டீரியாக்களுக்கு தொந்தரவு அளிக்காது.

ப்ரோபையாடிக்ஸ் எடுக்கவும்

ப்ரோபையாடிக்ஸ் எடுக்கவும்

கேண்டிடா அளவை கட்டுப்பாட்டில் வைத்திட ஆரோக்கியமான பாக்டீரியாவை மீட்டமைப்பது முக்கியமாகும். அதனால் ப்ரோபையாடிக்ஸை சீரான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். 25 முதல் 100 பில்லியன் யூனிட் ப்ரோபையாடிக்ஸை எடுத்துக் கொண்டால் கேண்டிடா அளவு குறையவும், நல்ல பாக்டீரியாவின் அளவு மீட்டமைக்கவும் செய்யும். கடைசியாக குடலை ஆற்ற, அழற்சி தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இது உங்கள் GI பாதைக்கு ஆபத்தை உண்டாக்கும். செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிட உதவும் உணவுகளை உட்கொண்டால் அதீத கேண்டிடா குறைந்து, உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

உங்களுக்கு கேண்டிடா அதிகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்ற சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எதுத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs You Have Candida Overgrowth & What To Do About It

You might be wondering, What on earth is candida? Candida is a fungus, which is a form of yeast, and a very small amount of it lives in your mouth and intestines. Too much of candida lead to many different health problems, ranging from digestive issues to depression.