பால் குடிப்பதால் ஏற்படும் தீவிரமான 7 பக்க விளைவுகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

நீங்கள் பால் குடிப்பீர்களா? உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திட பாலை மட்டும் குடித்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது. தவறாக நினைத்து விடாதீர்கள். நம் குழந்தை பருவம் முதலே பால் குடிப்பதையும் அதனால் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் நம் பெற்றோர் முதல் பலரும் நம்மிடம் எடுத்துக் கூறியிருப்பார்கள். பின்னே எப்படி இந்த பக்க விளைவுகள் என்று தானே அச்சரியமடைகிறீர்கள்.

நீங்கள் பசியாக இருந்தால் உங்கள் பசியை ஆற்றியதே அந்த பாலாக தான் இருந்திருக்கும். மீண்டும் அழுகிறீர்களா? அப்படியானால் மறுபடியும் பால் தான். அது போதுமே நீங்கள் அமைதியாக. நம் மனதில் பதிந்துள்ளதைப் போல் பாலினால் கிடைக்கும் நன்மைகள் எல்லாம் இருக்கவே செய்கிறது. தொட்டில் பழக்கம் என்பதால் அதனை முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் பால் மற்றும் பால் பொருட்களால் பக்க விளைவுகள் ஏற்படுகிறதாம். எப்படி? என்ன? என தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய்வுத் தொல்லை

வாய்வுத் தொல்லை

என்ன?

வயிற்று பொருமல் எனவும் இதனை கூறலாம். குடல் அல்லது வயிற்றில் அளவுக்கு அதிகமாக உண்டாகும் வாயுவினால் ஏற்படும் எரிச்சல் நிலை இது.

எப்படி?

மாட்டின் பாலில் லாக்டோஸ் உள்ளது. இந்த லாக்டோஸ் செரிமான அமைப்பில் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் வாய்வு உண்டாகும்.

குமட்டல்

குமட்டல்

என்ன?

வயிற்றில் ஏற்படும் தாங்கிக் கொள்ள முடியாத உணர்வு இது. இதனால் வாந்தி எடுக்கும் உணர்வு உண்டாகும்.

எப்படி?

பாலில் உள்ள லாக்டோஸ் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துவதால் குமட்டல் ஏற்படும். இது ஒரு வகையான லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை ஆகும். இதனால் பால் அல்லது பால் கலந்த பொருட்களை உட்கொண்ட உடனேயே செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

rBGH-னால் ஏற்படும் மார்பக புற்றுநோய்

rBGH-னால் ஏற்படும் மார்பக புற்றுநோய்

என்ன?

rBGH-ஐ ரீகாம்பினன்ட் போவைன் சொமடோட்ராஃபின் என்று அழைக்கின்றனர். மரபணு சார்ந்து வடிவமைக்கப்பட்ட செயற்கை ஹார்மோன் இது. அதிக பால் தயாரிக்க மாடுகளுக்கு இதனை ஊசி மூலம் ஏற்றுகின்றனர்.

எப்படி?

கேட்க பரபரப்பான ஒன்றாக இருந்தாலும் கூட பால் குடித்தால் மார்பக புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு உண்டு என நிரூபிக்கப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடியது. எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த ஊசி ஏற்றப்பட்ட மாடுகளின் பாலை குடித்து வந்தால், மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.

வயிற்று பொருமல்

வயிற்று பொருமல்

என்ன?

வயிறு நிறைந்திருக்கும் போது ஏற்படும் நிலை தான் இது. இந்நேரத்தில் வயிறு வீக்கமாகவும் இருக்கும்.

எப்படி?

மாட்டின் பாலில் அதிகளவில் லாக்டோஸ் இருப்பதால் உண்டாகும் பக்க விளைவுகளில் வயிற்று பொருமல் ஒன்றாகும். சரியாக செரிமானமாகாமல் பெருங்குடல் வழியாக செல்லும் போது இந்த நிலை ஏற்படும். லாக்டோசை உடைக்க தேவைப்படும் லாக்டாஸ் எனப்படும் என்ஸைமை போதிய அளவில் சிறுங்குடலால் உற்பத்தி செய்ய முடியாமல் போகும் போது, மற்றொரு வகையான லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மையான பொருமல் ஏற்படும்.

குழந்தைகளுக்கு இரத்த சோகை

குழந்தைகளுக்கு இரத்த சோகை

என்ன?

இரத்த சோகை என்பது இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கும் போது ஏற்படும் நிலையாகும்.

எப்படி?

மாட்டின் பாலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும். குழந்தைகள் அதிகமாக பால் குடிப்பதால், அவர்களுக்கு இரும்புச்சத்து அதிகமாக கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கு குடல் இரத்த இழப்பு ஏற்படும் போதும் கூட இரத்த சோகை ஏற்படும்.

சுவாச கோளாறுகள்

சுவாச கோளாறுகள்

என்ன?

பால் குடிப்பதால் சளி அதிகரிக்கும். இதனால் தீவிரமான சுவாச பிரச்சனைகள் ஏற்படும்.

எப்படி?

பால் குடிப்பதால் சளி அதிகரிக்கும் என்பது உண்மையே. ஆனால் அனைத்து பாலும் ஒன்று கிடையாது. சில மாட்டு வகைகளில் பீட்ட-சி.எம்.-7 என்ற புரதம் அடங்கியுள்ளது. இந்த குறிப்பிட்ட புரதம், சுவாச மற்றும் செரிமான பாதையில் சளியை உருவாக்கும்.

அலர்ஜிகள்

அலர்ஜிகள்

என்ன?

சில பேர்களுக்கு மாட்டின் பால் என்றால் அலர்ஜியாக இருக்கும். அதிலுள்ள புரதத்தினால் அலர்ஜி ஏற்படலாம். இதனால் அவர்க்ஜளுக்கு தீவிர அலர்ஜிகள் உண்டாகும்.

எப்படி?

தயிரில் பாலின் புரதம் 80% அடங்கியுள்ளது. மோரில் மீதமுள்ள 20% அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரதத்தினால் ஒருவருக்கு அலர்ஜி ஏற்படும் என்றால், இவைகள் எல்லாம் தீமையான பொருட்கள் என நம் உடல் முடிவு கட்டிவிடும். இதனால் இவ்வகையான புரதங்களை (தீமையான பொருட்கள்) எதிர்த்து நம் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பட தொடங்கிவிடும். அதனால் தான் உடலில் அலர்ஜி ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side Effects Of Drinking Milk

Do you drink milk? Are you under this constant impression that consuming glasses of milk is only making your body healthier? Then maybe you should rethink. Just sit back and read on these milk side effects!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter