ஆண்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

ஆண்களில் பத்தில் ஒரு ஆண் பாலியல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என பாலியல் அறிவுரை சங்கம் தெரிவிக்கிறது. அதிர்ஷ்டவசமாக பல்வேறு பாலியல் பிரச்சனைகளை குணப்படுத்தி விடலாம்.

அதனால் உங்கள் குறைகள் மற்றும் பிரச்சனைகளை உங்கள் மனைவி மற்றும் மருத்துவரிடம் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இங்கு ஆண்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதனால் பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகிறது?

எதனால் பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகிறது?

உடல் ரீதியான அல்லது உளவியல் ரீதியான பிரச்சனையால் பாலியல் செயல் பிறழ்ச்சி ஏற்படலாம்.

உடல் ரீதியான காரணங்கள்

உடல் ரீதியான காரணங்கள்

பல்வேறு உடல் ரீதியான மற்றும் மருத்துவ ரீதியான நிலைகள் பாலியல் பிரச்சனைகளை உருவாக்கலாம். சர்க்கரை நோய், இதயம் மற்றும் இதய குழலிய நோய்கள், நரம்பியல் கோளாறுகள், ஹார்மோன் சமமின்மை, சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயலிழந்து போதல், மது அல்லது போதை பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவைகள் இதற்கான சில உதாரணங்கள் ஆகும். கூடுதலாக, மன அழுத்தத்தை போக்கும் மருந்துகள் உட்பட, சில குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகளும் கூட பாலியல் செயல்பாட்டில் தொந்தரவை அளிக்கும்.

உளவியல் ரீதியான காரணங்கள்

உளவியல் ரீதியான காரணங்கள்

வேலை நிமித்த அழுத்தம் மற்றும் பதற்றம், பாலியல் செயலாற்றுகை பற்றிய அச்சம், திருமண அல்லது பிற உறவுகளில் பிரச்சனைகள், மன அழுத்தம், குற்ற உணர்வு மற்றும் முந்தைய பாலியல் பிரச்சனைகளின் தாக்கம் போன்றவைகள் இதற்கான உதாரணங்கள்.

பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்கள் யார்?

பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்கள் யார்?

ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலினருமே பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள். வயது வித்தியாசம் இல்லாமல் பெரியவர்கள் அனைவருக்கும் பாலியல் பிரச்சனைகள் ஏற்படும். இதில் பொதுவாக வயதானவர்கள் தான் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் வயதாகும் போது அவர்களின் உடல் நலமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது.

பாலியல் பிரச்சனைகள் ஆண்களை எவ்விதத்தில் பாதிக்கிறது?

பாலியல் பிரச்சனைகள் ஆண்களை எவ்விதத்தில் பாதிக்கிறது?

ஆண்களுக்கு ஏற்படும் மிக பொதுவான பாலியல் பிரச்சனைகள் இவைகள் தான் - விந்துதள்ளல் கோளாறுகள், விறைப்பு செயல் பிறழ்ச்சி மற்றும் பாலியல் ஆசை குறைதல்.

விந்துதள்ளல் கோளாறுகள் என்றால் என்ன?

விந்துதள்ளல் கோளாறுகள் என்றால் என்ன?

பல்வேறு வகையான விந்துதள்ளல் கோளாறுகள் உள்ளன. அவைகளில் சில:

உகந்த நேரத்திற்கு முன்னரே ஏற்படும் விந்துதள்ளல்: ஆணுறுப்பு ஊடுருவ ஆரம்பித்த உடனேயே அல்லது அதற்கு முன்பே விந்துதள்ளல் ஏற்படுதல்.

தடுக்கப்படும் அல்லது குன்றிய விந்துதள்ளல்: விந்துதள்ளல் மெதுவாக ஏற்படுவதையே இப்படி அழைப்பர்.

பிற்போக்கு விந்துதள்ளல்: புணர்ச்சி பரவச நிலையின் போது சிறுநீர் வடிகுழாய் வழியாக ஆணுறுப்பின் மூலமாக வெளியேறுவதற்கு பதிலாக, சிறுநீர்ப்பைக்கே விந்துதள்ளல் திருப்பப்படும்.

முன்னரே ஏற்படும் விந்துதள்ளல் மற்றும் தடுக்கப்படும் விந்துதள்ளல்

முன்னரே ஏற்படும் விந்துதள்ளல் மற்றும் தடுக்கப்படும் விந்துதள்ளல்

சில நேரங்களில், மனைவியின் மீது ஈர்ப்பு ஏற்படாத போது, முன்னாட்களில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சிகள் மற்றும் உளவியல் ரீதியான காரணிகள் (கடுமையான மத சட்டத்தினால் செக்ஸை ஒரு பாவமாக பார்ப்பது), போன்ற சில காரணங்களினால் உகந்த நேரத்திற்கு முன்னரே ஏற்படும் விந்துதள்ளல் மற்றும் தடுக்கப்படும் விந்துதள்ளல் நிலைகள் ஏற்படும். உடலுறவில் ஈடுபடும் போது எப்படி செயலாற்ற போகிறோம் என்ற பயத்திலேயே பல நேரங்களில் உகந்த நேரத்திற்கு முன்னரே ஏற்படும் விந்துதள்ளல் உண்டாகும். மன அழுத்தத்தை போக்கும் மருந்துகள் உட்பட சில மருந்துகள் விந்துதள்ளலை பாதிக்கும். அது முதுகு தண்டு நரம்பை பாதிக்கக்கூடும்.

பிற்போக்கு விந்துதள்ளல் பிரச்சனை

பிற்போக்கு விந்துதள்ளல் பிரச்சனை

சர்க்கரை நோயை கொண்ட ஆண்களுக்கு டையபட்டிக் நியூரோபதி எனப்படும் இயற்கையை மீறிய நரம்புக் கோளாறு இருந்தால், பிற்போக்கு விந்துதள்ளல் பிரச்சனை பொதுவான ஒன்றாகும். சிறுநீர்ப்பையில் உள்ள நரம்புகளின் பிரச்சனையால் இது ஏற்படுகிறது. இதனால் விந்துதள்ளலை சிறுநீர்ப்பை பக்கமாக பின்னோக்கி செல்ல வைக்கும் சிறுநீர்ப்பை குழாய். இன்னும் சில ஆண்களுக்கோ, சிறுநீர்ப்பை குழாய் அல்லது முன்னிற்குஞ்சுரப்பியில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் அல்லது வயிற்று பகுதியில் குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளை செய்திருந்தால் இந்நிலை ஏற்படலாம். கூடுதலாக, குறிப்பிட்ட சில மருந்துகளை உண்ணுவதால், குறிப்பாக மனநிலை கோளாறுக்கான மருந்துகளை உண்ணுவதால் இந்த பிரச்சனை ஏற்படலாம். கருவுறுதல் தன்மையை பாதிக்காத வரை இதற்கென சிகிச்சை என எதுவும் தேவையில்லை.

விறைப்பு செயல் பிறழ்ச்சி என்றால் என்ன?

விறைப்பு செயல் பிறழ்ச்சி என்றால் என்ன?

ஆண்மையின்மை என அறியப்படும் விறைப்பு செயல் பிறழ்ச்சி என்பது உடலுறவின் போது அதற்கு தேவையான ஆணுறுப்பு விறைப்பை அடைய முடியாத அல்லது நீட்டிக்க முடியாத நிலை. இரத்த ஓட்டத்தை பாதிக்கும் தமனித் தடிப்பு (ஆத்தெரோஸ்க்லெரோசிஸ் - தமனி சுருக்கம்), நரம்பு கோளாறுகள், மன அழுத்தம் மற்றும் செயலாற்றுகை பதற்றம் போன்ற உளவியல் ரீதியான காரணிகள், ஆணுறுப்பில் காயம் போன்ற காரணங்களினால் விறைப்பு செயல் பிறழ்ச்சி ஏற்படும். அதே போல் தீவிர நோய், குறிப்பிட்ட சில மருந்துகள் மற்றும் ஆணுறுப்பில் வடு (பெய்ரோனிஸ் நோய்) போன்ற சில நிலைகளாலும் கூட விறைப்பு செயல் பிறழ்ச்சி ஏற்படும்.

தடுக்கப்படும் பாலியல் ஆசை என்றால் என்ன?

தடுக்கப்படும் பாலியல் ஆசை என்றால் என்ன?

தடுக்கப்படும் பாலியல் ஆசை அல்லது ஆண்மை இழப்பு என்பது பாலியல் நடவடிக்கைகளின் மீது ஆசையும் ஈடுபாடும் குறைவதாகும். உடல் ரீதியான அல்லது உளவியல் ரீதியான காரணிகளால் ஆண்மை குறைவு ஏற்படலாம். டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனின் அளவு குறைவாக இருப்பதற்கும், இதற்கும் பெருமளவில் சம்பந்தம் உள்ளது. பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற உளவியல் ரீதியான பிரச்சனைகள், சர்க்கரை நோய் மற்றும் உயரிய இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ ரீதியான நோய்கள், மன அழுத்தத்தை போக்கும் மருந்துகள் உட்பட குறிப்பிட்ட சில மருந்துகள் மற்றும் உறவுமுறை பிரச்சனைகள் போன்றவைகளாலும் இது ஏற்படலாம்.

ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை எப்படி கண்டறிவது?

ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை எப்படி கண்டறிவது?

ஆரம்பத்தில் ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை வைத்து பரிசோதனையை தொடங்குவார் மருத்துவர். செயல் பிறழ்ச்சிக்கு வழிவகுக்கும் மருத்துவ பிரச்சனைகள் வேறு ஏதேனும் இருந்தால், அவைகளை போக்கவும் மருத்துவர் போதிய ஏற்பாடுகளை செய்வார். அதுமட்டுமின்றி சிறுநீரக மருத்துவர் (சிறுநீரக பாதை மற்றும் ஆண் இனப்பெருக்க அமைப்பிற்கான மருத்துவர்), நாளமில்லாச் சுரப்பு மருத்துவர் (நாளமில்லாச் சுரப்பு கோளாறுக்கான மருத்துவர்), நரம்பியல் மருத்துவர் (நரம்பியல் கோளாறுக்கான மருத்துவர்), பாலியல் மருத்துவர் மற்றும் பிற ஆலோசகர்கர்கள் போன்ற பிற மருத்துவர்களிடம் உங்களை உங்கள் மருத்துவர் அனுப்பி வைப்பார்.

பாலியல் பிரச்சனைகளை குணப்படுத்தலாமா?

பாலியல் பிரச்சனைகளை குணப்படுத்தலாமா?

பாலியல் செயல் பிறழ்ச்சிக்கான சிகிச்சையின் வெற்றி அது ஏற்பட்ட காரணத்தை பொறுத்து தான் அமையும். மன அழுத்தம், பயம், பதற்றம் போன்ற மிதமான செயல் பிறழ்ச்சியை ஆலோசனை, கல்வியறிவு, தம்பதிக்கு இடையே மேம்பட்ட தகவல் பரிமாற்றம் போன்ற சிகிச்சைகள் மூலம் வெற்றிகரமாக குணப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sexual Problems In Men

According to the Sexual Advice Association, one in 10 men experiences sexual problems. Fortunately, most sexual problems are treatable, so it is important to share your concerns with your partner and doctor.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter