உணவில் மட்டனை அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அசைவ உணவுகளிலேயே மட்டன் எனும் ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. மேலும் மட்டன் தான் அதிக மக்களால் சாப்பிடப்படும் அசைவ உணவுப் பொருளும் கூட. மட்டன் சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம். குறிப்பாக கருத்தரிப்பதில் பிரச்சனை இருப்பவர்கள், விறைப்புத்தன்னை குறைபாடு உள்ளவர்கள் சிக்கனை தவிர்த்து மட்டனை சாப்பிடுவதே நல்லது.

இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

இதற்கு முக்கிய காரணம், ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மட்டனில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதென்றால், அதனை சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். சரி, இப்போது அந்த மட்டன் எனும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயம் வலிமை பெறும்

இதயம் வலிமை பெறும்

மட்டன் இதயத்தை வலிமைப்படுத்தும். ஏனெனில் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புள்ளள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.

கொலஸ்ட்ரால் அளவுகள்

கொலஸ்ட்ரால் அளவுகள்

மட்டனில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. எனவே மட்டனை சாப்பிட்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

எடையைக் குறைக்கும்

எடையைக் குறைக்கும்

விரைவில் உடல் எடையைக் குறைக்க நினைப்போர், மட்டனை சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் இதில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இது உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

மட்டன் சாப்பிட்டால், அதில் உள்ள பி வைட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

ஆண்களை வலிமையாக்கும்

ஆண்களை வலிமையாக்கும்

ஆட்டிறைச்சி டோர்பிடோ மற்றும் பித்த நீரைக் கொண்டிருக்கிறது. இவை ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை சரிசெய்யும். மேலும் ஆண்கள் மட்டன் அதிகம் சாப்பிட்டால், அவர்களின் உடல் வலிமையும் அதிகரிக்கும்.

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி

மட்டனில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் நல்ல தரமான இரத்தத்தை மேம்படுத்தி, உள்காயங்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கும். அதிலும் பெண்கள் மட்டனை அதிகம் சாப்பிட்டு வர, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வலியைத் தடுக்கலாம்.

நீரிழிவைக் குணப்படுத்தும்

நீரிழிவைக் குணப்படுத்தும்

மட்டனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் நீரிழிவு ஏற்படுவதைத் தடுக்கும். குறிப்பாக டைப்-2 நீரிழிவு ஏற்படுவதை மட்டன் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

மெட்டபாலிசம் அதிகரிக்கும்

மெட்டபாலிசம் அதிகரிக்கும்

ஆட்டிறைச்சியில் உள்ள நியாசின் என்னும் வைட்டமின், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, ஆற்றலை மேம்படுத்தும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்

மட்டனில் இருக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர பொருட்கள், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். அதிலும் வாரத்தில் 2 முறை மட்டனை உட்கொண்டு வந்தால், உங்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்களே உணரலாம்.

மூளைக்கு நல்லது

மூளைக்கு நல்லது

படிக்கும் குழந்தைகளுக்கு சிக்கனை விட, மட்டன் அதிகம் கொடுத்து வந்தால், மூளையின் செயல்பாடு அதிகரித்து, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார்கள்.

மன அழுத்தம் நீங்கும்

மன அழுத்தம் நீங்கும்

நீங்கள் அதிக மன அழுத்தத்துடன் இருக்கும் போது, மட்டனை உட்கொண்டால், மன அழுத்தம் நீங்கி நல்ல மன நிலையை உணரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nutritional Benefits Of Goat Meat Or Mutton

Here are some of the facts about goat meat or mutton. Take a look at how nutritional and healthy this meat truly is when compared to the rest of the meats.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter