உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க இந்த சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க....

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய தலைமுறையினர் உடல் பருமனால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். உடல் பருமனைக் குறைப்பதற்கு ஆரோக்கியமான வழிகளைத் தேடி வருகின்றனர். அதில் ஒன்று உடற்பயிற்சி என்பதற்காக, தினமும் ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால் இப்படி வெறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் உடல் பருமனைக் குறைக்க முடியாது.

எப்படி உணவுகளால் உடல் பருமன் அதிகரித்ததோ, அதே உணவுகளைக் கொண்டும் உடல் பருமனைக் குறைக்கலாம். என்ன நம்பமுடியவில்லையா? ஆம், நம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை ஒருசில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் கொண்டு கரைக்கலாம்.

இங்கு அந்த ஊட்டச்சத்துக்கள் என்னவென்றும், அவை எதில் அதிகம் இருக்கும் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அன்றாடம் உடற்பயிற்சியுடன், இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் உட்கொண்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோட்டீன்

புரோட்டீன்

புரோட்டீன் நிறைந்த உணவுகள், ஆரோக்கியமான வழியில் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும். மேலும் இந்த சத்து நிறைந்த உணவுகள் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். இந்த புரோட்டீனானது மீன், முட்டையின் வெள்ளைக்கரு, இறைச்சி போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மன நிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தினால் கண்டபடி உணவு உண்பதைத் தடுத்து, உடல் எடை குறைய வழிவகுக்கும். மேலும் இந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இச்சத்தானது சால்மன் மீன் மற்றும் நட்ஸ்களில் அதிகம் உள்ளது.

வைட்டமின் டி

வைட்டமின் டி

ஆய்வின் படி, வைட்டமின் டி குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. எப்படியெனில் வைட்டமின் டி அளவுக்கு அதிகமாக உண்ணாமல் இருக்க மூளைக்கு சிக்னலை வழங்குகிறது. அதுவே உடலில் குறைவாக இருந்தால், என்ன நடக்கும்? எனவே வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்பதோடு, அதிகாலையில் சூரியக்கதிர் படும்படி வாக்கிங் செல்லுங்கள்.

மோனோஅன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்

மோனோஅன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்

இது ஒரு வகையான கொழுப்பு. இது ஆலிவ் ஆயில், நட்ஸ், வெண்ணெய் பழம், வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் சாக்லேட் போன்றவற்றில் உள்ளது. ஆய்வு ஒன்றிலும், இந்த ஃபேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை வேகமாக கரைக்கும் செயலைத் தூண்டுவதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த ஃபேட்டி ஆசிட் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, பசியைக் கட்டுப்படுத்தும்.

கால்சியம்

கால்சியம்

கால்சியம் உடல் எடையைக் குறைக்க உதவும். ஒருவருக்கு உடலில் போதிய அளவில் கால்சியம் இல்லாவிட்டால், உடல் பருமன் ஏற்படும். இச்சத்து கொழுப்பு குறைவான பால், ஆரஞ்சு, பால், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அன்றாடம் தவறாமல் உட்கொண்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nutrients That Melt Fat In Your Body

In todays article, we at Boldsky have shared some of the food habits you have incorporate in your daily diet to shed body weight. Read on and never forget to follow it.
Story first published: Saturday, October 3, 2015, 10:34 [IST]
Subscribe Newsletter