For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவா? அதை சரிசெய்ய இதோ சில சிம்பிளான வழிகள்!!!

By Maha
|

குளிர் மற்றும் மழைக்காலத்தில் தான் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் காயம் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் வலியைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதில் ஒன்று சரியான வாய் பராமரிப்பு இல்லாமல், ஈறுகளில் சீழ் சேர்ந்து வீக்கமடைந்து, கடுமையான வலியுடன், இரத்தக்கசிவு ஏற்படுவது.

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!

எப்போதுமே ஈறு மற்றும் பற்களில் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டால், அதனை உடனே சரிசெய்துவிட வேண்டும். இல்லாவிட்டால், தொற்றுகள் தீவிரமாகி, பற் சொத்தை மற்றும் பற்களைக் கூட இழக்க நேரிடும்.

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள்!!!

இங்கு ஈறுகளில் சீழ் சேர்ந்து, வீக்கமடைந்து ஏற்படும் கடுமையான வலியை குணப்படுத்துவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி, ஈறு பிரச்சனையில் இருந்து விடுதலைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு தண்ணீர்

உப்பு தண்ணீர்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அக்கலவைக் கொண்டு தினமும் இரண்டு முறை வாயைக் கொப்பளித்து வந்தால், ஈறுகளில் உள்ள வீக்கம் குறைந்து, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வலியும் குறையும்.

எலுமிச்சை தண்ணீர்

எலுமிச்சை தண்ணீர்

எலுமிச்சையில் இயற்கையான ஆன்டி-செப்டிக் பொருளான வைட்டமின் சி ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, தினமும் காலை மற்றும் இரவில் பல் துலக்குவதற்கு முன் வாயைக் கொப்பளிக்க நல்ல பலன் கிடைக்கும்.

கிராம்பு

கிராம்பு

அக்காலத்தில் இருந்து பல் பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வளிக்க கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கிராம்பு கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, உப்பு நீரில் வாயைக் கொப்பளித்தால், வீக்கம் உடனே குறைந்துவிடும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

1 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயை சூடேற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்த எண்ணெயைக் கொண்டு தினமும் 2 முறை மசாஜ் செய்து வந்தால், ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும்.

சோம்பு

சோம்பு

3 டேபிள் ஸ்பூன் சோம்பை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயை தினமும் 3 முறை கொப்பளித்து வந்தால், ஈறுகளில் வீக்கத்தை உண்டாக்கிய தொற்றுக்கள் அழிக்கப்படும். வேண்டுமானால் நீரில் வேக வைத்த சோம்பை வாயில் போட்டும் மெல்லலாம்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த எண்ணெய் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்கலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, வீக்கமடைந்து ஈறுப்பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் வலி மற்றும் வீக்கம் உடனடியாக குறைந்துவிடும்.

இஞ்சி பேஸ்ட்

இஞ்சி பேஸ்ட்

ஈறுகளில் உள்ள வீக்கத்தை இஞ்சி பேஸ்ட் கொண்டும் சரிசெய்யலாம். இஞ்சியில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மை, கிருமிகளை அழித்து, ஈறுகளின் மற்ற பகுதிக்கு பரவாமல் தடுக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை கூட ஈறு வீக்கத்தைக் குறைக்க உதவும். அதற்கு அந்த ஜெல்லை ஈறுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக இவ்வழி குழந்தைகளுக்கு ஏற்ற ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Home Remedies For Swollen Gums Around One Tooth

Is the gums swollen only around one tooth? If yes,here are some of the simple Indian home remedies to treat this gum problem. You might want to take a look...
Desktop Bottom Promotion