'அந்த' இடத்தில் அரிப்பு தாங்க முடியலையா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்...

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு பிறப்புறுப்பு பகுதிகளில், பின்புறத்தில் மற்றும் தொடைகளில் கடுமையான அரிப்பு ஏற்படும். இப்படி அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் ட்ரைகோபைடான் என்னும் பூஞ்சைகள். இத்தகைய அரிப்பு ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஏற்படும். இந்த அரிப்புக்களால் பொது இடங்களில் எல்லாம் பலரும் மிகுந்த தர்ம சங்கட நிலைக்கு உள்ளாகக்கூடும்.

ஆண்களே! 'அந்த இடத்தில்' அரிப்பு ஏற்பட காரணம் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா?

இந்த அரிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதி சிவப்பாகவும், செதில்செதிலாகவும், மிகுந்த எரிச்சலுடனும் இருக்கும். மேலும் ஆய்வுகளில் இந்த அரிப்புக்களானது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக மற்றும் குண்டாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் வருவது தெரிய வந்துள்ளது.

பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...

இந்த அரிப்புக்கள் ஏற்படுவதற்கான காரணம், இறுக்கமான உடை அணிதல், ஈரப்பசை இல்லாமை, சருமம் உராய்விற்கு உள்ளாதல், பூஞ்சைத் தொற்றுகள், அதிகப்படியான வியர்வை, உடற்பயிற்சி மற்றும் பொடு கழிப்பிடங்களைப் பயன்படுத்துவது போன்றவை. இதில் ஓர் நல்லசெய்தி என்னவெனில், இந்த அரிப்பை ஒருசில எளிய வீட்டு வைத்தியங்களின் மூலம் சரிசெய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மௌத் வாஷ்

மௌத் வாஷ்

மௌத் வாஷ்ஷில், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் பொருள் உள்ளது. இந்த மௌத் வாஷ் மிகவும் சிறப்பான ஓர் நிவாரணி. அதற்கு சிறிது பஞ்சுருண்டையை எடுத்துக் கொண்டு, அதனை மௌத் வாஷ்ஷில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அழிக்கப்பட்டு, அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

உப்பு

உப்பு

உப்பு நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். அத்தகைய உப்பை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, நீரில் கழுவி வர, அரிப்பை உண்டாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

வெங்காய சாறு

வெங்காய சாறு

வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், அரிப்பை ஏற்படுத்திய பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதோடு, அழிக்கப்படும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை தடவும் முன் பாதிக்கப்பட்ட இடத்தை ஒருமுறை சுத்தம் செய்து கொண்டு, பின் அவ்விடத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

சோள மாவு

சோள மாவு

சோள மாவு கூட அரிப்பைக் கட்டுப்படுத்தும். அதற்கு சோள மாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விட வேண்டும். இப்படி 4 மணிநேரத்திற்கு ஒருமுறை அல்லது உலர்ந்த பின் தடவ வேண்டும்.

தேன்

தேன்

தேனில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை ஏராளமாக உள்ளது. எனவே இதனைக் கொண்டு உடனடி நிவாரணம் பெறலாம். அதற்கு தேனை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர்ந்த பின், உலர்ந்த நீரால் கழுவி, அவ்விடத்தை உலர விட வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், அரிப்பு நீங்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், உடலில் ஏற்படும் தாங்க முடியாத அரிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மை வளமாக உள்ளது. அத்தகைய எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை தடவி வந்தால், பூஞ்சைகள் அழிக்கப்பட்டு, அரிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Get Rid of Jock Itch

Check out different ways on how to get rid of jock itch, in this article, today. Read on to find out more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter