குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்கான சில எளிய இயற்கை வழிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நம்மைச் சுற்றி ஏகப்பட்ட நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் உள்ளன. இவை நம்மைத் தாக்குவதற்கு எப்போதும் காத்துக் கொண்டிருக்கும். குறிப்பாக நீங்கள் சுத்தமாக இல்லாவிட்டாலோ, அசுத்த உணவை உட்கொண்டாலோ மற்றும் சுத்தமற்ற நீரைக் குடித்தாலோ, உடலினுள் எளிதில் அவற்றின் வழியே புகுந்துவிடும்.

உங்களுக்கு அல்சர் தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

சரி, நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம். நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன. அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை.

உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

இந்த அறிகுறிகள் தென்படும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றி வந்தால், வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றிவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி விதைகள்

பப்பாளி விதைகள்

பப்பாளி விதையின் சுவை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த பப்பாளி விதையை மாதம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், வயிற்றில் வளரும் உருளைப்புழு, நாடாப்புழு போன்றவற்றை அழித்து வெளியேற்றலாம்.

பூண்டு

பூண்டு

உங்கள் குடலில் புழுக்களின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமெனில், காலையில் எழுந்ததும் 2 பற்கள் பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். மேலும் உணவில் பூண்டை அதிகம் சேர்த்து வந்தாலும் புழுக்களை வெளியேற்றலாம்.

பாதாம்

பாதாம்

தினமும் காலையில் பாதாமை உட்கொண்டு வந்தால், வயிற்றில் புழுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தலாம். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள்.

கற்றாழை

கற்றாழை

தினமும் 2 டீஸ்பூன் கற்றாழை ஜூஸை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால், வயிற்றில் வளரும் குடல் புழுக்களைத் தடுக்கலாம்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில உள்ள புரோமிலைன் என்னும் நொதி, வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே உங்கள் வயிற்றில் புழுக்கள் இருப்பது போன்ற அறிகுறி தென்பட்டால், ஒரு வாரத்திற்கு தினமும் சிறிது அன்னாசியை உட்கொண்டு வாருங்கள்.

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகள் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழித்து வெளியேற்ற உதவும். எனவே தினமும் ஸ்நாக்ஸ் வேளையில் சிறிது பூசணிக்காய் விதைகளை உட்கொண்டு வாருங்கள்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் என 10-15 நாட்கள் குடித்து வர, வயிற்றில் இருக்கும் நாடாப்புழுக்கள் அல்லது வேறு சில குடல் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சி தடுக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Get Rid Of Intestinal Worms

How to get rid of intestinal worms? Do you know how intestinal parasites get into your system? Well, poor hygiene could be one reason, though ....
Subscribe Newsletter