முட்டை ஓட்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக முட்டையின் ஓட்டை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் அந்த முட்டை ஓட்டிலும் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது என்பது தெரியுமா? அதிலும் அதனை உட்கொள்ளலாம் என்பது தெரியுமா?

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!

ஆம், முட்டையில் இருப்பது போலவே, அதன் ஓட்டிலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக இதில் 90% கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், மாங்கனீசு, ப்ளூரின், பாஸ்பரஸ், குரோமியம் போன்றவை வளமாக உள்ளது. மேலும் பொடி செய்த முட்டை ஓட்டை ஒரு நாளைக்கு 1.5-3 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

முட்டையின் வெள்ளை கருவை விட மஞ்சள் கரு ஆரோக்கியமானதா?

சரி, இப்போது முட்டை ஓட்டினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தத்தை சுத்தப்படுத்தும்

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

5 முட்டையின் ஓட்டை நன்கு கழுவி வெயிலில் உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, 3 லிட்டர் தண்ணீரில் கலந்து, 7 நாட்கள் கழித்து குடிக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு 2-3 டம்ளர் தண்ணீரைக் குடிக்கவும். வேண்டுமெனில், இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

தைராய்டு சுரப்பி

தைராய்டு சுரப்பி

8 முட்டையின் ஓட்டை கழுவி வெயிலில் உலர வைத்து, பொடி செய்து, 2 எலுமிச்சையில் எடுக்கப்பட்ட சாற்றில் சேர்த்து, முட்டை ஓட்டின் பொடி மென்மையான பின், அதனை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, 7 நாட்கள் கழித்து, 1 டீஸ்பூன் என்னும் விகிதத்தில் தினமும் 3-4 முறை உணவு உட்கொண்ட பின்னர் சாப்பிட வேண்டும். இதனால் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படும்.

அல்சர்

அல்சர்

முட்டை ஓட்டை பொடி செய்து, 2 டேபிள் ஸ்பன் எலுமிச்சை சாற்றில், 1 சிட்டிகை சேர்த்து, முட்டை ஓட்டின் பொடி மென்மையானதும், அதனை சூடான பாலில் சேர்த்து, தினமும் 2 முறை குடித்து வர வேண்டும். அதிலும் அதிகாலையில் வெறும் வயிற்றிலும், இரவில் படுக்கும் முன்பும் சாப்பிட வேண்டும்.

ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ்

முட்டை ஓட்டின் பொடியை சாப்பிட்டு வருவதன் மூலம், கால்சியம் குறைபாடு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுத்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளை வலிமையுடன் வைத்துக் கொள்ளலாம்.

உயர் கொலஸ்ட்ரால்

உயர் கொலஸ்ட்ரால்

உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் ஓட்டை பொடி செய்து நீருடன் சேர்த்து கலந்து, குடித்து வந்தால், உயர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், முட்டை ஓட்டின் பொடியை எடுத்து வருவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Eating Egg Shells

Is Eating Egg Shells Good for You? Do you know health benefits of eating egg shells? Here are several ideas on how to use egg shell and what to use them for.