உணவு உட்கொண்டதும் ஏன் தூங்கக்கூடாது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பலருக்கு உணவை உட்கொண்ட உடனேயே தூங்கும் பழக்கம் இருக்கும். என்ன தான் பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் ஆரோக்கியமானது என்றாலும், பகல் நேரத்தில் உணவை உட்கொண்டதும் தூங்கினாலோ அல்லது இரவில் தாமதமாக தூங்குவதற்கு முன் சாப்பிடுவதாலோ பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதில் பலரும் அறிந்த ஒன்று உடல் பருமன் அதிகரித்துவிடும் என்பது.

சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்!!!

ஆம், உண்மையிலேயே உணவு உண்டதும் தூங்கினால், உடல் பருமன் அதிகரித்துவிடும். ஆனால் உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்று, உணவை உட்கொண்ட உடனேயே தூங்கினால் வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும்.

இரவு உணவுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க!!

சரி, இப்போது உணவு உண்டதுவும் ஏன் தூங்கக்கூடாது என்பதற்கான காரணங்களும், அப்படி தூங்கினால் என்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்றும் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் பருமன்

உடல் பருமன்

உணவை உட்கொண்ட உடனேயே தூங்குவதால் உடல் பருமன் அதிகரிப்பதற்கு காரணம், மற்ற நேரங்களில் எடுக்கும் கலோரிகளை விட, தூங்கும் முன் கலோரிகள் நிறைந்த உணவை உட்கொள்வதால், அவை உடல் பருமனை விரைவில் அதிகரித்துவிடும்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

உணவு உண்ட உடனேயே தூங்கினால், நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படக்கூடும். உணவு உண்ட பின் தூங்கும் போது, உணவுக்குழாய் வழியாக இரைப்பில் உள்ள அமிலமானது மேலே ஏறி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், உணவை உட்கொண்ட உடனேயே தூங்கினால், இரைப்பை உணவுக்குழாய்க்குரிய எதிர்வினை அறிகுறிகளான இருமல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படுவது அமெரிக்க ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உணவை உட்கொண்ட உடனேயே தூங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

பக்கவாதம்

பக்கவாதம்

ஆய்வு ஒன்றில் உணவை உட்கொண்டதும் தூங்க சென்றால், பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் ஏற்கனவே பக்கவாதம் வந்த 250 பேரையும், 250 பேர் தீவிர இதய குழவிய நோயினைக் கொண்டவர்களையும் கொண்டு சோதிக்கப்பட்டது. இதில் உணவு உண்டதற்கும், தூங்குவதற்கும் இடையே நிறைய இடைவெளி விட்டவர்களுக்கு பக்கவாத தாக்கத்தின் அளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

தூக்கமின்மை

தூக்கமின்மை

குறிப்பாக இரவில் சாப்பிட்டவுடன் தூங்க சென்றால், தூக்கமின்மைக்கு ஆளாகக் கூடும். அதிலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது மது அருந்தினாலோ, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. அதேப்போல் இரவில் சாப்பிடாமல் தூங்கினாலும், தூக்கமின்மை ஏற்படும். எனவே இரவில் தூங்க செல்வதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே உணவை உட்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Disadvantages Of Sleeping Immediately After A Meal

Want to know disadvantages of sleeping after a meal or having a food? Here are some of the negative effects of eating before bed. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter