உலர் திராட்சையில் மறைந்துள்ள அசர வைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உலர் பழ வகை தான் உலர் திராட்சை. நல்ல உயர்தரமான திராட்சையை பதப்படுத்தி உலர வைத்து உலர் திராட்சையான பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய உலர் திராட்சையில் சாதாரண திராட்சையில் உள்ள சத்துக்களை விட அதிக அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளது.

பலர் இந்த உலர் திராட்சையை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுவார்கள். உண்மையிலேயே, இது ஒரு சிறப்பான ஸ்நாக்ஸ் தான். அதுமட்டுமின்றி, இந்த உலர் திராட்சை உடலின் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

இங்கு உலர் திராட்சை கொண்டு எந்த மாதிரியான பிரச்சனைகளை குணமாக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை அதிகரிக்கும்

உடல் எடை அதிகரிக்கும்

எடையை அதிகரிக்க வேண்டுமெனில் கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் கொழுப்பு இல்லாத உணவை உண்பதன் மூலமும் எடையை அதிகரிக்கலாம். அதற்கு உலர் திராட்சை சாப்பிட்டால் போதும். இதன் மூலம் உடலில் கொழுப்புக்களை அதிகரிக்காமலேயே எடையைக் கூட்டலாம்.

தொண்டை கரகரப்பு

தொண்டை கரகரப்பு

தினமும் இரவில் பசும் பாலில் 20 உலர் திராட்சையைப் போட்டு காய்ச்சி, 10 மிளகைப் போட்டு, அத்துடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தொண்டை கரகரப்பு நீங்கும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

கோடையில் மஞ்சள் காமாலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடும். அப்படி பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்க, உலர் திராட்சையை சாப்பிட வேண்டும். அதிலும் இதனை தினமும் இரு வேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உலர் திராட்சையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. ஆகவே அவ்வப்போது உலர் திராட்சையை சாப்பிட்டு, உடலை நோய்கள் தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், உலர் திராட்சையை பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால், அதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களால் மலச்சிக்கல் நீங்கி, செரிமானம் சீராக நடைபெறம்.

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் பிரச்சனையால் கஷ்டப்படும் பெண்கள், உலர் திராட்சையை வெதுவெதுப்பான நீரில் 1/2 மணிநேரம் உற வைத்து காலையில் குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும்.

இதயம் வலிமையாகும்

இதயம் வலிமையாகும்

உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால், அதில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, வலிமையும் அடையும்.

மூல நோய்

மூல நோய்

மூல நோய் இருப்பவர்கள், தினமும் காலை மற்றும் மாலையில் உணவிற்கு பின் உலர் திராட்சை பழங்களை சாப்பிட மூல நோயில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Health Benefits Of Raisins

Want to know the health benefits of raisins? Here are the nutritional benefits of raisins. Take a look...
Story first published: Tuesday, May 26, 2015, 11:14 [IST]
Subscribe Newsletter