For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திடகாத்திரமா இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க!

|

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் தருகிறது. மேலும், உடல் வலிமை அதிகரிக்கவும் நல்ல பயன் தருகிறது. குழந்தைகள் தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு எலும்புகள் நன்கு வலிமை அடையும்.

சைவம் சாப்பிடுபவர்கள், இனிமேல் முட்டையையாவது அவர்களது உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது அவர்களது உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும். இதில் உள்ள புரதச்சத்து மனிதர்களின் உடல் வலிமைக்கு மிகவும் தேவையானது. உடற்பயிற்சி செய்பவர்களும், பாடி பில்டிங் செய்பவர்களும் தினமும் முட்டை சாப்பிடுவதன் காரணமே இதுதான். அவர்களை போக ஆகவேண்டும் என்ற எண்ணம் இல்லை எனிலும், உங்களது உடல் நல்ல திறனோடு இருக்க வேண்டும் எனில் நீங்கள் தினமும் முட்டை சாப்பிடுவது அவசியம். குறைந்தது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது சாப்பிடுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமினோ அமிலங்கள்

அமினோ அமிலங்கள்

முட்டையில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களின் பயன்கள் இருக்கின்றன. நம் உடலுக்கு தேவையான முழு ஊட்டச்சத்துகளையும் தரவல்லது முட்டை. தினமும் காலை உணவாக முட்டையை உண்பது உடலுக்கு நல்லது.

ஊட்டச்சத்துகள்

ஊட்டச்சத்துகள்

முட்டையில், வைட்டமின் ஏ, பி 5, பி 12, பி 2, பி 6, டி, கே, ஈ, பாஸ்பரஸ், செலினியம்,கால்சியம் போன்ற நிறைய ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.

கொழுப்புச்சத்து

கொழுப்புச்சத்து

முட்டையில் கொழுப்புச்சத்து உள்ளது, ஆனால், இது இரத்த சர்க்கரை அளவை பாதிப்பது அல்ல! மரபணு கோளாறு உள்ளவர்கள் முட்டையை தவர்ப்பது நல்லது.

நல்ல கொழுப்புச்சத்து

நல்ல கொழுப்புச்சத்து

தொடர்ச்சியாக நீங்கள் முட்டை சாப்பிட்டு வந்தால், உங்களது உடலில் நல்ல கொழுப்புச்சத்து அதிகரிக்க உதவும். இதனால், இதய பிரச்சனைகள் வராது தடுக்கலாம்.

கோலைன்

கோலைன்

நமது உணவுக்கட்டுப்பாட்டில் கோலைனை அதிகம் சேர்த்துக்கொள்ள முடியாது போகிறது. ஆனால், முட்டையில் கோலைன் அதிகமாக உள்ளதால் உடலில் உள்ள செல்களுக்கு நன்மை விளைவிக்கிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

ஸீக்ஸாக்தைன் மற்றும் லுடீன் முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் ஆகும். இது கண்களுக்கு மிகவும் நல்லது ஆகும்.

சரும நன்மைகள்

சரும நன்மைகள்

முட்டையை சருமத்தில் அப்பளை செய்வதனால் முகல்த்தில் உள்ள சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Reasons To Eat Eggs For A Healthy Life

Do you know there are 7 Reasons To Eat Eggs For A Healthy Life, read here.
Story first published: Saturday, February 21, 2015, 20:16 [IST]
Desktop Bottom Promotion