Latest Updates
-
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது?
கோடைகாலம் வந்தாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சுவையான மாம்பழங்கள்தான். மாம்பழம் அதன் சுவை, நிறம் மற்றும் அதன் ஊட்டச்சத்துக்கள் என அனைத்திற்காகவும் அனைவருக்கும் பிடித்த பழமாக உள்ளது. அதனால்தான் மாம்பழம் 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்த மாம்பழங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும் பார்வைத்திறனை அதிகரிக்கின்றன.

சுவையான மாம்பழங்களை அப்படியே சாப்பிடுவது முதல் பல வழிகளில் உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். மாம்பழங்கள் இனிப்புத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், ஏராளமான ஊட்டச்சத்தையும் வழங்குகின்றன. மாம்பழம் போலவே மாங்காயும் கோடைகாலத்தில் மிகவும் பிரபலமானதாகும். மாம்பழத்தைப் போலவே மாங்காய்க்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
மாம்பழம் போலவே பச்சை மாங்காயிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது, மற்றும் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. பழுக்காத மாம்பழங்களில் நார்ச்சத்தும் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது. மேலும், பழுத்த மாம்பழங்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது. இதனால், குறைவாக சர்க்கரை உட்கொள்பவர்களுக்கு இது ஒரு பொருத்தமான தேர்வாக அமைகிறது.
பச்சை மங்கையின் ஆரோக்கிய நன்மைகள்
மாங்காய் அவற்றின் செரிமான நன்மைகளுக்காக அதிகளவில் உண்ணப்படுகின்றன. இவை செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுகின்றன, இது உணவை உடைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பச்சை மாங்காயில் உள்ள அதிக நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
அவை பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் சிறந்த மூலமாகவும் உள்ளன, இதன்மூலம் உடலின் திரவ சமநிலையை சீராக பராமரிக்கின்றன. கோடைகாலத்தில் மாங்காய் உட்கொள்வது, நீரிழப்பைத் தடுக்க உதவும். மாங்காயில் உள்ள பெக்டின் மற்றும் வைட்டமின் சி கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகின்றன. கோடைகாலத்தில் மாங்காயைத் தொடர்ந்து உட்கொள்வது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், ஒட்டுமொத்த கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
மாம்பழங்களில் பார்வைத்திறனை மேம்படுத்த அவசியமான வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. பழுத்த மாம்பழங்களைத் தொடர்ந்து உட்கொள்வது மாலைக்கண் நோய் மற்றும் பிற கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவும். பழுத்த மாம்பழங்களில் உள்ள அதிக வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பழுத்த மாம்பழங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களானது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியிலிருந்து பாதுகாக்கின்றன. மேலும் மாம்பழங்களில் உள்ள பீட்டா-கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ சரும செல்களைச் சரிசெய்யவும், முதுமையின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது, அதே நேரத்தில் இதிலுள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஆதரித்து, சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் உறுதியை மேம்படுத்துகிறது.
ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?
மாங்காய் மற்றும் மாம்பழங்களுக்கு இடையே எது சிறந்தது என்று முடிவெடுப்பது என்பது ஒருவரின் தனிநபர் விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் நீர்ச்சத்தைப் பராமரிக்கவும், மற்றும் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் விரும்பினால், மாங்காய் அதற்க்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் இவற்றில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால், சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தும் நபர்களுக்கு இது கூடுதல் நன்மைகளை அளிக்கும்.
அதேசமயம் நீங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மற்றும் ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கவும் விரும்பினால், பழுத்த மாம்பழங்கள் அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றில் உள்ள அதிக வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
மாங்காய் மற்றும் மாம்பழம் இரண்டுமே தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இரண்டையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது, ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது மட்டும் உறுதி.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

