For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

By Maha
|

பொதுவாக முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால், நன்மைகள் மட்டுமின்றி, சில தீமைகளையும் சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா? ஆம், எப்போதுமே அளவுக்கு மிஞ்சினால் அது தீமைகளை விளைவிக்கும்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 நன்மைகள்!!!

அதிலும் எவ்வளவு பெரிய நல்ல உணவுப்பொருளாக இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இங்கு அப்படி விலை மலிவில் கிடைக்கும் மற்றும் தினமும் சாப்பிடும் வாழைப்பழத்தை அளவுக்கு அதிகம் சாப்பிட்டால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை அதிகரிக்கும்

எடை அதிகரிக்கும்

உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால் வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருப்பதுடன், கலோரிகளும் நிறைந்திருப்பதால், இது உடல் எடையை அதிகரிக்கும். அதற்காக இதை சாப்பிடவே கூடாது என்பதில்லை. இவற்றை தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

தலைவலி

தலைவலி

ஆம், வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது கடுமையான தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் வாழைப்பழத்தில் தைரமைன் மற்றும் பீனைஎத்திலமைன் என்னும் அமினோ ஆசிட்டுகள் இருப்பதால், இவை மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைவலியை ஏற்படுத்தும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

இரவில் பலருக்கு வாழைப்பழத்தை சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஏனெனில் வாழைப்பழம் தூக்கத்தை தூண்டும் சக்தி கொண்டவை என்பதால் தான். ஆனால் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், புரோட்டீன் குறைவாகவும் இருப்பதால், இது மூளையில் ட்ரிப்டோஃபேனை அதிகரிக்கும். இதன் மூலம் உடலானது தூக்கத்தை கெடுக்கும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்றவற்றை உற்பத்தி செய்துவிடும். எனவே இரவில் அளவுக்கு அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிட வேண்டாம்.

குறைந்த இரத்த அழுத்தம்

குறைந்த இரத்த அழுத்தம்

வாழைப்பழத்தை அதிக அளவில் உட்கொண்டால், அது இரத்த அழுத்தத்தில் இடையூறை ஏற்படுத்தும். அதிலும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சீரான இரத்த அழுத்தத்தைப் பெற மருந்துகளை எடுத்து வந்தால், அப்போது வாழைப்பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், இரத்த அழுத்தத்தில் இடையூறை ஏற்படுத்தும்.

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகள்

வாழைப்பழத்தை சரியான அளவில் எடுத்து வந்தால், வயிற்றிற்கு நல்லது. அதுவே அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், சிறுநீரகத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நரம்பு மண்டல பாதிப்பு

நரம்பு மண்டல பாதிப்பு

நம்புவீர்களோ இல்லையோ, வாழைப்பழத்தை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, அது நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இதில் வைட்டமின் பி6 உள்ளது. இதை தேவையான அளவு எடுத்துக் கொண்டால் தான் ஆரோக்கியமாக இருக்கும். அதைவிட்டு ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், பின் பெரும் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

சொத்தை பல்

சொத்தை பல்

வாழைப்பழம் ஒரு இனிப்பு நிறைந்த பழம். எனவே இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அது பற்களை சொத்தையாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Banana

Side effects of banana are not very serious but it’s important to take necessary precautions if one notices any of them. Let’s see what the harmful effects of banana are.
Desktop Bottom Promotion