For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க கோதுமை ரவை எப்படி உதவுகிறது?

By Ashok CR
|

நீங்கள் உடல் எடை அதிகரித்து விட கூடாது என கவனமுடன் இருப்பவரா? அப்படியானால் உடல் எடையை குறைக்க, கோதுமை ரவையை பயன்படுத்தப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கோதுமை ரவையில் உள்ள உடல் எடை குறைப்பு பயன்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக கோதுமை ரவையை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். பல்கர் கோதுமை என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கோதுமை ரவை என்பது உடைந்த கோதுமையாகும். இந்தியாவிலும் அரபு நாடுகளிலும் மிகவும் புகழ் பெற்ற தானியமாக இது கருதப்படுகிறது.

உடல் எடையை குறைக்க, கோதுமை ரவை உட்கொள்வது மேற்கு பகுதியில் மிகவும் புகழ் பெற்று வருகிறது. அதிகளவிலான நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி அடங்கியுள்ள கோதுமை ரவை உடல் எடை குறைப்பிற்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல தேர்வாக விளங்குகிறது. ஓட்ஸ் போன்ற பல விதமான தானியங்களை விட இதில் பன்மடங்கு பயன்கள் உள்ளது என நம்பப்படுகிறது.

கோதுமை ரவையை லேசாக கொதிக்க வைத்து, லேசாக எண்ணெய் மற்றும் காய்கறிகள் சேர்த்து, சாலாட்டில் பயன்படுத்தலாம் அல்லது அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம். அரபு நாட்டு சாலட்டான டபௌலேவில் இதை தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர்.

ஓட்ஸை போல் இதையும் பலர் காலையில் பால் அல்லது தண்ணீரில் கலந்த கஞ்சியாக குடிக்கின்றனர். தயிருடன் சேர்த்து உண்ணும் போது இதன் சுவை மேன்மேலும் அதிகரிக்கும். உடல் எடை குறைப்பிற்கான கோதுமை ரவையின் பயன்கள் பல. உடல் எடையை குறைக்க கோதுமை ரவையை ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைவான கலோரி

குறைவான கலோரி

உடல் எடை குறைப்பிற்கு கோதுமை ரவை அப்படி என்ன பெரிதாக உதவிட போகிறது என நீங்கள் கேட்கலாம். அதில் குறைவான அளவில் தான் கலோரிகள் உள்ளது. அப்படியென்றால் உங்கள் கலோரி எண்ணிக்கையில் இதனால் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடப்போவதில்லை. அதே நேரம், அதிலுள்ள ஊட்டச்சத்து பயன்களும், நார்ச்சத்துக்களும் வேறு பல உடல்நல பயன்களையும் அளிக்கிறது.

அதிகமான நார்ச்சத்து

அதிகமான நார்ச்சத்து

உடல் எடை குறைப்பிற்கு அதிகமான நார்ச்சத்து அடங்கிய உணவின் பயன்களை பற்றி தனியாக சொல்ல தேவையில்லை. நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி, உடலை சிறப்பாக செயல்பட மேம்படுத்தி, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வைக்கும். இது போக, உங்கள் உணவில் உள்ள நார்ச்சத்தை சர்க்கரையாக மாற்ற முடியாது. அதனால் தான் உடல் எடை குறைப்பிற்கு கோதுமை ரவை உண்ணுவது சரியானதாக உள்ளது.

செயல்பாடு மெதுவானது

செயல்பாடு மெதுவானது

உங்கள் உடலில் வேகமாக செயல்பட்டு எரிந்து போகும் உணவு தான் உடல எடை குறைப்பிற்கு பயனாக அமையும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதில் உண்மை இல்லை. வேகமாக செயல்படும் உணவினால் உங்களுக்கு வேகமாக பசி எடுக்கும். மேலும் உங்கள் உடலில் அதிகமான சர்க்கரையும் தேங்கி விடும். கோதுமை ரவையோ உங்கள் உடலில் மெதுவாக உடைக்கப்பட்டு மெல்ல கரையும். உடல் எடை குறைப்பிற்கு இதை விட பெரிய பயன் இருக்க முடியுமா என்ன?

குறைவான க்ளைசெமிக் இன்டெக்ஸ்

குறைவான க்ளைசெமிக் இன்டெக்ஸ்

எந்த ஒரு உணவில் இருந்தும் எந்தளவு சர்க்கரையாக மாற்றப்படுகிறது என்பதை கணக்கிடப்படுவதே க்ளைசெமிக் இன்டெக்ஸ் ஆகும். இன்டெக்ஸ் அதிகமாக இருக்கும் போது சர்க்கரையும் அதிகரிக்கும். குறைவான க்ளைசெமிக் இன்டெக்ஸ் உணவுகள் தான் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு நல்லது. அதனால் தான் உடல் எடை குறைப்பிற்கு கோதுமை ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மெதுவாக கரைந்து, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சமநிலையுடன் வைத்திருக்கும்.

அதிக புரதம்

அதிக புரதம்

புரதம் வளமையாக உள்ள உணவில் கோதுமை ரவையும் ஒன்றாகும். இறைச்சியை போல் அல்லாமல் கோதுமை ரவையில் கொழுப்புகள் இல்லாது அதிக புரதம் உள்ளது. இதுவே கோதுமை ரவையின் பயனாக விளங்குகிறது. அதனால் அது உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பாதுகாப்பான, கொழுப்பில்லா புரதம் அடங்கிய உணவாக விளங்குகிறது.

நிறைவானாது

நிறைவானாது

ஏற்கனவே கூறியதை போல், கோதுமை ரவையில் அதிக நார்ச்சத்து மற்றும் மெதுவான கரையும் தன்மை உள்ளதால், அது உங்கள் வயிற்றை நிறைத்து விடும். அரிசி சாதம் அல்லது சாதம் சார்ந்த உணவை சாப்பிட்டால் வேகமாக பசி எடுக்காது. இதே போல் அதிகமாக உட்கொள்ளாமல் குறைந்த அளவில் உண்ண வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Does Wheat Rava Aid In Weight Loss?

The benefits of Wheat Rava for weight loss are many. Let’s take a look at why so many people opt for Wheat Rava for weight loss.
Story first published: Thursday, August 28, 2014, 9:04 [IST]
Desktop Bottom Promotion