Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!
உண்ணும் உணவுகளில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் நட்ஸ். அதிலும் சூப்பர் உணவுகள் என்று சொல்லப்படும் உணவு வகைகளில் இவையும் முக்கியமானவை. ஏனெனில் இத்தகைய நட்ஸில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
அதில் உடல் எடையை குறைப்பது முதல், நீரிழிவு, இதய நோய் போன்றவற்றை வராமல் தடுக்கும் சக்தி நட்ஸிற்கு உள்ளது. மேலும் நட்ஸை உணவில் சேர்த்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது.
இதுப்போன்று வேறு: டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இத்தகைய நட்ஸில் பல வகைகள் உள்ளன. அதில் வால்நட், பாதாம், பிஸ்தா போன்றவற்றில் நினைக்க முடியாத அளவில் நன்மைகளானது அடங்கியுள்ளது. அதேப் போன்று பிரேசில் நட்ஸ், வேர்க்கடலை போன்றவற்றிலும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.
குறிப்பாக நட்ஸ் ஆண்களுக்கு மிகவும் நல்லது. இப்போது நட்ஸ் சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து பார்த்து, இனிமேல் நட்ஸை உணவில் அதிகம் சேர்த்து, அதில் உள்ள சத்துக்களை பெற்று ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள்.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
அனைத்து வகையான நட்ஸிலும் மீன்களில் இருப்பது போல், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது இதயத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன், சருமத்தின் அழகை பராமரிக்கவும், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் உதவியாக உள்ளது. எனவே நட்ஸ் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சருமத்திற்கு வேண்டிய வைட்டமின் ஈ
நட்ஸில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது பொதுவாக பொலிவான சருமத்திற்கு தேவையான மிகவும் இன்றியமையாத வைட்டமின் ஆகும். மேலும் இந்த வைட்டமின் தான் இளமையைத் தக்க வைக்கும் சக்தி கொண்டது.

மன அழுத்தத்தை விரட்டும்
நட்ஸில் வால்நட்ஸில் ஆல்பா லினோலினிக் என்னும் மன அழுத்தத்தை விரட்டும் அமிலமானது உள்ளது. எனவே ஆபிஸில் வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள், அவ்வப்போது வால்நட்ஸை சாப்பிட்டு வாருங்கள். இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

நுரையீரல் புற்றுநோயை தடுக்கும்
பிஸ்தாவை டயட்டில் சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம். மேலும் ஆய்வு ஒன்றிலும் பிஸ்தாவில் அதிக அளவில் காமா டோகோபெரால் என்னும் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் கெமிக்கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும்
நட்ஸில் பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் பிஸ்தா போன்றவற்றில் நல்ல கொலஸ்ட்ராலானது நிறைந்துள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் சக்தி கொண்டவை. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், இந்த நட்ஸ்களை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

மூளைக்கான சிறப்பான உணவுப் பொருள்
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் நட்ஸை சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மூளையில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன், நரம்பு மண்டலத்தை பாதுகாத்து, ஞாபக மறதி வராமல் தடுக்கும்.

விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும்
நட்ஸை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணுவின் தரமானது அதிகரிக்கும். எனவே குழந்தை பெற்று கொள்ள நினைக்கும் ஆண்கள், தினமும் ஒரு கையளவு நட்ஸை சாப்பிட்டு வாருங்கள்.

உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்
அடிக்கடி பசியெடுப்பது போல் இருந்தால், அப்போது ஸ்நாக்ஸாக நட்ஸை சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதுடன், உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்.

ஆற்றல்மிக்க உணவுப் பொருள்
நட்ஸில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், நட்ஸை சாப்பிட்டால், உடலின் ஆற்றலானது அதிகரிக்கும். எனவே தினமும் காலையில் சிறிது நட்ஸ் சாப்பிட்டு வருவது, காலையில் உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளும்.

புரோஸ்டேட் புற்றுநோய்
பிரேசில் நட்ஸில் செலினியம் அதிகம் உள்ளதால், இதனை ஆண்கள் சாப்பிட்டால், ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயை 60% குறைக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நட்ஸில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதனை உட்கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

விறைப்புத்தன்மையை அதிகரிக்கும்
ஆண்கள் முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வந்தால், விறைப்புத்தன்மை குறைபாடு நீங்கிவிடும்.



Click it and Unblock the Notifications











