For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சோத்துக் கற்றாழை சாற்றினால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள்!!!

By Ashok CR
|

பச்சை தாவரமான சோத்து கற்றாழையின் பயன்கள் பெருமளவில் உள்ளன. தோலில் ஏற்படும் வெடிப்பு, எரிச்சல், தோல் அலர்ஜி போன்றவற்றிற்கு சோத்து கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.

சோத்துக் கற்றாழை சாற்றில், உடலுக்கு தேவையான அதிக அளவிலான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அடங்கி உள்ளன. இந்த அளவிற்கு சோத்து கற்றாழை ஆரோக்கியமானதாக உள்ளதால், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுப்போன்று வேறு: கற்றாழை ஜெல்லின் அழகு நன்மைகள்!

மேலும் சோத்து கற்றாழை சாற்றில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது. உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சோத்துக் கற்றாழை சாற்றில் அதிக அளவில் உள்ளன.

உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் உள்ள பாதிப்புகளை சரிசெய்து புனரமைப்பதற்கு, சோத்துக் கற்றாழை சாற்றில் உள்ள சத்துக்கள் துணை புரிகின்றன. வெளிப்புற காரணிகளுக்கு ஏற்றவாறு, உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியை சோத்துக் கற்றாழை சாறு அளிக்கிறது. உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்களை உடலுக்கு அளித்து, அவற்றை உடலில் தேக்கி வைக்க சோத்துக் கற்றாழை சாறு பயன்படுகிறது.

கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ் பண்ணுங்க...

சோத்துக் கற்றாழை சாற்றில் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கி உள்ளன. இந்த கட்டுரையில் சில முக்கியமான நன்மைகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதை நீக்கியாக பயன்படும் சாறு

போதை நீக்கியாக பயன்படும் சாறு

சோத்துக் கற்றாழை சாறு ஒரு சிறந்த போதை நீக்கியாக பயன்படுகிறது. நமது உடலானது நச்சுத்தன்மையை சேர்த்து வைக்கும். அத்தகைய நச்சுத்தன்மை தோல் திசுக்களில் பாதிப்பு, உடலின் இயக்கத்திற்கு ஊறு விளைவித்தல், உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துதல் போன்ற தீமைகளை ஏற்படுத்துகிறது.

சுற்றுப்புற மாசு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, துரித உணவு, போதை வஸ்துக்களான ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களே நச்சுத்தன்மையை உருவாக்கும் ஏஜென்ட்டுகளாக உள்ளன. சோத்துக் கற்றாழை சாற்றில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் சத்துக்கள் போன்றவை நச்சுத்தன்மையை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது.

எடைக் குறைப்பில் இதன் பங்கு

எடைக் குறைப்பில் இதன் பங்கு

தினமும் ஒரு டம்ளர் சோத்துக் கற்றாழை சாற்றை குடித்து வந்தால், அது எடை குறைப்பிற்கு உதவும். மேலும் உடல் எடையை அதே அளவில் பராமரிக்கவும் இது உதவுகிறது. இது வயிற்றையும்,செரிமான பாதையையும் சுத்தம் செய்கிறது. மேலும் உடலில் உள்ள உடல் எடைக்கு காரணமான, தேவையற்ற பொருட்களை நீக்கி உடல் எடையைக் குறைக்கிறது. சோத்துக் கற்றாழை சாறு, உடலில் கொழுப்பு சேர்வதை குறைக்கும் சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. இந்த சாறு பசியோடு போராடி, உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது. இவ்வாறாக சோத்து க்கற்றாழை, உடல் எடை க்குறைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பற்களின் ஆரோக்கியம்

பற்களின் ஆரோக்கியம்

சோத்துக் கற்றாழை சாறு, நுண்ணுயிர்களை எதிர்க்கும் திறனாக செயல்பட்டு ஈறுகளையும், பற்களையும் சுத்தம் செய்கிறது. மேலும் சோத்துக் கற்றாழை சாறு, மவுத் ப்ரஷ்னராக செயல்பட்டு, வாயில் துர்நாற்றம் உருவாவதை தடை செய்கிறது. சோத்துக் கற்றாழை சாறு, வாய் அல்சர் மற்றும் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்றவற்றை சரி செய்கிறது. இவ்வாறாக சோத்துக் கற்றாழை சாறு, பற்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறது.

ஆற்றல் உயர்த்தி

ஆற்றல் உயர்த்தி

சோத்துக் கற்றாழை சாற்றை தினமும் எடுத்துக் கொண்டால், அது சிறந்த ஆற்றலை வழங்கும் ட்ரிங்க் ஆக அமையும். ஏனெனில் இந்த சாற்றில் அடங்கி உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. சோத்துக் கற்றாழை சாற்றை தினமும் எடுத்துக் கொண்டால், அது உடலின் வேலைகளை மேம்படுத்தி, உறுப்புகளின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இவ்வாறாக சோத்துக் கற்றாழை உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த சாற்றில் அதிக அளவிலான சத்துக்கள் அடங்கி உள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கி, எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.

ஆரோக்கியமான தோல் மற்றும் தலை முடி

ஆரோக்கியமான தோல் மற்றும் தலை முடி

சோத்துக் கற்றாழை சாறு, தோலில் உள்ள செல்களின் பாதிப்புகளை ச ரிசெய்து தோலை பளபளப்பாகவும், அழகாகவும் மாற்றுகிறது. சோத்துக் கற்றாழை சாற்றில் உள்ள சத்துக்கள், தோலின் பாதிப்புகளை சரி செய்வதோடு புனரமைக்கவும் பயன்படுகிறது. சோத்துக் கற்றாழை சாற்றை வழக்கமாக எடுத்துக் கொண்டால், முதிர்ந்த தோற்றத்திற்கான அறிகுறிகளை குறைத்து தோலை இளமையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இது போலவே தலை முடிக்கும் உதவுகிறது. இந்த சாறு, தலைமுடியில் உள்ள மயிர்த்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. தலைமுடியின் கட்டமைப்பையும் கூட்டுகிறது. இவை அனைத்துமே சோத்துக் கற்றாழையின் சில நன்மைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aloe Vera Juice Health Benefits

Aloe juice also contains many anti oxidants that flush the toxins from our body. The juice has good amount of amino acids and fatty acids that are healthy for the body. Though the juice is versatile and has many health benefits associated to it, there are a few advantages highlighted in this article.
Desktop Bottom Promotion